© GOVERNMENT OF TAMIL NADU 2026
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 19.20 Paise.
| தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
No. 32A] சென்னை, சனிக்கிழமை, ஜனவரி 24, 2026
தை 10, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057
பகுதி IV—பிரிவு 1
தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்
பொருளடக்கம்பொருளடக்கம்
பக்கங்கள் சட்டமுன்வடிவுகள்:சட்டமுன்வடிவுகள்:
எண். 6/2026.—தமிழ்நாடு நீர் வளங்கள் (ஒழுங்குமுறைப்படுத்துதல் மேலாண்மை மற்றும்
பெருக்கச்) சட்டம் .. .. .. .. .. .. .. .. ... 2-32 எண். 7/2026.—தமிழ்நாடு ஊராட்சிகள் (திருத்தச்) சட்டம் .. .. .. .. .. .. 33-36 எண். 8/2026.—தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்)
சட்டம் .. .. .. .. .. .. .. .. .. .. 37-38 எண். 9/2026.—தமிழ்நாடு பிச்சையெடுப்பதைத் தடுத்தல் (திருத்தச்) சட்டம் .. .. .. .. 39-42 எண். 10/2026.—தமிழ்நாடு பள்ளிகள் (கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம் 43-47 DTP—Ex-IV-1 (32A)
[1]2 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 2026-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 24-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் 2026-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 24-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண
விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130–ஆம் விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130–ஆம்
விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 6/2026
தமிழ்நாடு மாநிலத்தில் நீர்வளங்களின் பயன்பாடுகளில் தமிழ்நாடு மாநிலத்தில் நீர்வளங்களின் பயன்பாடுகளில் சமநிலை, செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையை சமநிலை, செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையை அடைவதற்காக, பங்கேற்பு அடிப்படையிலான நிர்வாகத்தின் அடைவதற்காக, பங்கேற்பு அடிப்படையிலான நிர்வாகத்தின் மூலம் நீர்வளங்களை ஒழுங்குமுறைப்படுத்துதல், மேலாண்மை மூலம் நீர்வளங்களை ஒழுங்குமுறைப்படுத்துதல், மேலாண்மை மற்றும் பெருக்கம் ஆகியவற்றை வழங்குவதற்காகவும், அதற்காக மற்றும் பெருக்கம் ஆகியவற்றை வழங்குவதற்காகவும், அதற்காக ஒரு நிறுவன கட்டமைப்பை நிறுவும் நோக்கத்திற்காகவும், ஒரு நிறுவன கட்டமைப்பை நிறுவும் நோக்கத்திற்காகவும், அதனுடன் தொடர்புடைய அல்லது அதற்கு இடைவிளைவான அதனுடன் தொடர்புடைய அல்லது அதற்கு இடைவிளைவான பொருட்பாடுகளை வழங்குவதற்குமானதொரு சட்ட முன்வடிவு. பொருட்பாடுகளை வழங்குவதற்குமானதொரு சட்ட முன்வடிவு.
இந்தியக் குடியரசின் எழுபத்து ஆறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
பகுதி – I.பகுதி – I.
அத்தியாயம் I.அத்தியாயம் I.
முன்னுரை.முன்னுரை.
குறுந்தலைப்பு,
அளாவுகை மற்றும்
தொடக்கம்.
1. (1) இந்தச் சட்டம், 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீர் வளங்கள் (ஒழுங்குமுறைப்படுத்துதல், மேலாண்மை மற்றும் பெருக்கச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, தமிழ்நாடு மாநிலம் முழுவதும் அளாவி நிற்கும்.
(3) இது, மாநில அரசு, அறிவிக்கையின் வாயிலாகக் குறித்திடலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
பொருள்
2. (1) இந்தச் சட்டத்தில் தறுவாய் வேறுபொருள் குறித்தாலன்றி,-
வரையறைகள்.
(a) "நீரை நிலத்திலிருந்து பிரித்தெடுத்தல்" என்பது, கிணறு அல்லது நீர்வளங்கள் எதிலிருந்தும் நீரினை உறிஞ்சுதல் அல்லது எடுத்தல் போன்ற செயற்முறை எனப் பொருள்படும்;
(b) "தீர்ப்பளிக்கும் அலுவலர்" என்பது, 31 ஆம் பிரிவின், (1) ஆம் உட்பிரிவின் கீழ் பணியமர்த்தப்படும் அலுவலர் எனப் பொருள்படும்;
(c) "மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" என்பது, 19 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் அறிவிக்கப்படும் அதிகார அமைப்பு எனப் பொருள்படும்;
(d) "மேல்முறையீட்டு அலுவலர்" என்பது, 32 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் அறிவிக்கப்பட்ட அலுவலர் எனப் பொருள்படும்;
(e) "உரிய தரம்" என்பது, அப்போதைக்குச் செல்லாற்றலில் உள்ள சட்டம் எதனின் கீழும் பிணைப்பில் இருக்கும் அனைத்து பொருத்தமான தரங்களுடன் இணக்கமான நீரின் தரம் எனப் பொருள்படும்;
(f) "நீர்க்கொள் படுகை" என்பது, கிணறு அல்லது நீரூற்று ஒன்றிற்கு குறிப்பிடும்படியான அளவிலான நீரினை ஈட்டுவதற்கு போதுமான நுண்துளை மற்றும் கசியக்கூடிய ஊடுருவத்தக்க ஒரு புவியியல் அமைப்பு, அமைப்பின் தொகுப்பு அல்லது அமைப்பின் பகுதி எனப் பொருள்படும்;
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 3(g) "அதிகாரமளிப்பு" என்பது, எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும் இந்தச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒப்புதல், தடை நீக்கம், உரிமம், தடையின்மை சான்று, அனுமதி அல்லது விலக்கு எதனையும் குறிப்பிடும்;
(h) "அதிகார அமைப்பு" என்பது, 5 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் நிறுவப்படும் தமிழ்நாடு நீர் வளங்கள் மேலாண்மை அதிகார அமைப்பு எனப் பொருள்படும்;
(i) "படுகை / வடிநிலம் " என்பது, பெருங்கடல் அல்லது கடலுக்குள் நேரடியாகவோ அல்லது மற்றொரு மாநிலத்தின் வழியாகவோ அல்லது இயற்கை ஏரிக்குள் அல்லது வடிகாலிடப் பள்ளத்திற்குள் பாயும் நீர் அமைப்பின் ஒரு நீர்பிடிப்பு எல்லையால் தீர்மானிக்கப்படும் ஒரு புவிப்பரப்பு பகுதி, எனப் பொருள்படும்;
(j) "வணிக நீர் பயனர்" என்பது, வருவாய் அல்லது இலாபத்தை உருவாக்குவதற்கு, வியாபாரம் அல்லது வணிகத்திற்காக, மொத்த நீரினை அல்லது பயன்படுத்தும் நீரினை எடுத்தல், நீரை நிலத்திலிருந்து பிரித்தெடுத்தல், கொண்டு செல்லுதல் அல்லது மாறுதல்கள் செய்கின்ற தொழிற்சாலைகள், உள்கட்டமைப்பு வழங்குநர்கள் மற்றும் சுரங்க நடவடிக்கைகள் உள்ளடங்கலான ஆனால் அவை மட்டும் வரையறுக்க படாமல் எந்தவொரு நபர் அல்லது நிறுவனம் என்று பொருள்படும்;
(k) "குழு" என்பது, 12 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் படி அமைக்கப்பட்ட மாவட்ட நீர் வளங்கள் குழு எனப் பொருள்படும்;
(l) "வீட்டு உபயோக நோக்கம்" என்பது, வணிக நோக்கம் எதற்காகவும் அல்லாமல், ஆனால் குடிப்பதற்கு, சமைப்பதற்கு, குளிப்பதற்கு, துவைப்பதற்கு, துப்புரவு அல்லது வீட்டு கால்நடை வளர்ப்பு போன்ற அத்தகைய வசிக்கும் நோக்கத்திற்கு நீரினை எடுத்தல் அல்லது நீரை நிலத்திலிருந்து பிரித்தெடுத்தல் எனப் பொருள்படும்;
(m) "இன்றியமையாக் கோட்பாடுகள்" என்பது, 3 ஆம்
பிரிவில் குறிக்கப்பட்ட இன்றியமையாக் கோட்பாடுகளைக் குறிக்கிறது;
(n) "வெள்ளப்பெருக்குச் சமவெளி" என்பது, ஆறு அல்லது வேறு பிற நீர் நிலையையும் ஒட்டியுள்ள நீர் வாய்க்கால்கள் உள்ளடங்கலான தாழ்வான பகுதிகள் மற்றும் ஒப்பீட்டளவில் சமமான பகுதிகள் எனப் பொருள்படும், அவை குறிப்பிட்ட நேரத்தில் அல்லது அடிக்கடி அந்த ஆறு அல்லது நீர் நிலையிலிருந்து வரும் வெள்ளப்பெருக்குக்கு உட்பட்டவையாகும்;
(o) "வெள்ளப்பெருக்குச் சமவெளி மண்டலம்" என்பது, 23 ஆம் பிரிவின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதி எனப் பொருள்படும்;
(p) "அரசு" என்பது மாநில அரசு எனப் பொருள்படும்;
(q) "நிலத்தடி நீர்" என்பது, கிணறு வழியாக அல்லது பிற வழிமுறையின் மூலமாகவோ அல்லது நீருற்றுகள், நீரோடைகள் மற்றும் ஆறுகளின் நீரோட்டங்களாக வெளிப்படும் வகையில், மேற்பரப்பிற்குக் கீழே செறிவு மண்டலத்தில் அதன் இயற்கை நிலையில் இருக்கும் நீர் எனப் பொருள்படும்;
(r) "நிலத்தடி நீர் பாதுகாப்பு மண்டலம்" என்பது, 21
ஆம் பிரிவின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதி எனப் பொருள்படும்;
(s) "செயல்படுத்தும் அதிகார அமைப்பு" என்பது, 14 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் பெயர்குறித்து நியமிக்கப்பட்ட அலுவலர் அல்லது அதிகாரஅமைப்பு எனப் பொருள்படும்;
4 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுமையச் சட்டம்
6/1974 (t) "மாசுபாடு" என்பது, 1974 ஆம் ஆண்டு நீர் (மாசுபாட்டைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) சட்டத்தின் 2 ஆம் பிரிவின் (e) கூறில் அதற்கு அளிக்கப்பட்ட அதே பொருளைக் கொண்டிருத்தல் வேண்டும்;
(u) "முன்னெச்சரிக்கை கொள்கை" என்பது, கடுமையான அல்லது மீளமுடியாத சேதங்கள் ஏற்படும் அச்சுறுத்தல்கள் இருக்குமிடத்து, அத்தகைய அச்சுறுத்தல்கள் குறித்த முழுமையான அறிவியல் உறுதித்தன்மை இல்லாதபோதிலும், சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தடுப்பதற்காக முன்கூட்டியே செயல்படும், தடுப்பு அல்லது செலவு குறைந்த தணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதை ஆதரிக்கும் ஓர் அணுகுமுறை என்பதைக் குறிக்கும்;
(v) "வகுத்துரைக்கப்பட்ட" என்பது, இந்தச் சட்டத்தின்
கீழ் செய்யப்பட்ட விதிகளால் வகுத்துரைக்கப்பட்டது எனப் பொருள்படும்;
(w) "தடுப்பு நடவடிக்கை" என்பது, நபர்கள், சொத்து, சுற்றுசூழல் அல்லது சூழலியல் அமைப்பின் மீது ஊறு அல்லது கேடான விளைவுகள் நடக்காமல் இருப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கையைக் குறிக்கும்;
(x) "மழை நீர் சேகரிப்பு" என்பது, எதிர்கால பயன்பாட்டிற்காக நுண்-நீர் நிலை அளவில், அல்லது நிலத்தடி நீரின் மீள் நீரூட்டத்திற்காக கூரை மேலான சேகரிப்பு உள்ளடங்கலான மழை நீரினை சேகரித்து சேமித்து வைக்கும் தொழில்நுட்பம் அல்லது அமைப்பு எனப் பொருள்படும்;
(y) "மீள் நீரூட்டம்" என்பது, நிலத்தடி நீரினை இயற்கையான அல்லது செயற்கையான முறையில் நிறைவாக்குதல் எனப் பொருள்படும்;
(z) "ஆறு" என்பது, அதன் நீர்ப்பிடிப்பு பகுதியிலிருந்து பெருங்கடல், ஏரிகள் மற்றும் கடல்கள் போன்ற நீர் நிலைகளுக்கு உபரி மழைநீரை சுமந்து செல்வதற்காக இயற்கையாகவே அமையும் ஓர் இயற்கை நீரோட்டப்பாதை எனப் பொருள்படும்;
(za) "ஆற்றுப்படுகை" என்பது, ஓர் ஆறு மற்றும் அதனுடன் இணைந்த நீர் நிலைகள் உள்ளடங்கலான அதன் துணை ஆறுகளால் ஏற்படும் வடிநிலப் பகுதி என்றும், அத்தகைய வகையில் ஆவியாதலுக்காக தவிர, அத்தகைய பகுதிக்குள் நிகழும் அனைத்து மழைப்பொழிவு அல்லது மழைநீரோட்டம் ஆகியன இறுதியில், ஓர் ஆறு, அதன் துணை ஆறுகள் அல்லது இணைந்துள்ள நீர்த்தாங்கிகளுக்கு அதன் வழியாக செல்கிறது எனப் பொருள்படும்;
(zb) "ஆற்றுப் பாதுகாப்பு மண்டலம்" என்பது, பிரிவு 24-
இன் கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதியைக் குறிக்கும்;
(zc) "கிணறு அமைத்தல்" என்பது, தற்போதுள்ள கிணறு அல்லது புதிய கிணற்றுடன் தொடர்புடைய அதன் அனைத்து இலக்கண மாறுபாடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்பாடுகளும், நிலத்தடி நீரைப் பிரித்தெடுப்பதற்காக, புதிய கிணற்றைத் தோண்டுவது, துளையிடுவது அல்லது துளை போடுவது மற்றும் தற்போதுள்ள கிணற்றை ஆழப்படுத்துவதை உள்ளடக்கியது;
(zd) "சுனை" என்பது, நிலத்தடி அழுத்தத்தால் உந்தப்பட்டு, நிலத்தடி நீர் பூமியின் மேற்பரப்பில் வெளிவந்து பாயும் ஒரு இயற்கையான இடம் எனப் பொருள்படும்;
(ze) "மாநிலம்" என்பது, தமிழ்நாடு மாநிலம் எனப்
பொருள்படும்;
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 5(zf) "துணைப் படுகை" என்பது, ஓர் ஆற்றின் துணை
ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதி எனப் பொருள்படும்;
(zg) "மேற்பரப்பு நீர்" என்பது, மாநிலத்தின் எல்லைக்குள் இருக்கும் ஆறுகள், நீரோடைகள், ஏரிகள், வெள்ளப்பெருக்கச் சமவெளிகள், சதுப்பு நிலங்கள், உள்வாய்க்கால்கள், கால்வாய்கள், குளங்கள், சிறுகுளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் போன்ற அனைத்து இயற்கையான மற்றும் செயற்கையான உள்நாட்டு நீரையும் குறிக்கும் மற்றும் உள்ளடக்கும்;
(zh) நீரின் இருப்பு மற்றும் பயன்பாட்டின் பின்னணியில் "நிலைத்தன்மை" என்பது, தற்போதைய சூழலியல், சமூக மற்றும் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், எதிர்காலத்தில் அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறனை சமரசம் செய்யாமல், நீரைப் பயன்படுத்துவதாகும்;
(zi) "மொத்த நீர் பரிமாற்றம்" என்பது, கிராமப்புற அல்லது நகர்புறப் பகுதியில் வீட்டு உபயோகம், உள்கட்டமைப்பு அல்லது தொழிற்சாலை பயன்பாட்டிற்காக உள்ளூர் நீர் வளங்கள் இல்லாத பகுதி ஒன்றிற்கு, வளங்களிலிருந்து வாகனங்கள், திறந்த வாய்க்கால்கள், குழாய்கள் அல்லது அதன் கலவை ஒன்றின் வழியாக மொத்தமாக தூய்மைப்படுத்தாத அல்லது சுத்திகரிக்கப்பட்ட குடிக்கத்தக்க நீரினை, அத்தகைய மாற்றங்களுக்கான காலவரையைப் பொருட்படுத்தாமல், மாற்றுவதைக் குறிக்கிறது;
(zj) "சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர்" என்பது, கழிவுநீர், இதர வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் தொழிற்சாலைக் கழிவுநீர் ஆகியவற்றின் சுத்திகரிப்பிலிருந்து உருவாக்கப்பட்ட நீர் எனப் பொருள்படும்;
(zk) "நீர்" என்பது மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர்
எனப் பொருள்படும்;
(zl) "நீர்நிலைகள்" என்பது, இயற்கையாக ஏற்படுவனவாகவோ அல்லது செயற்கையாக உருவாக்கப்படுபவையாகவோ உள்ள குளங்கள், சிறுகுளங்கள், ஏரிகள், ஆறுகள், நீர்த்தேக்கங்கள், கால்வாய்கள், வழிகள் மற்றும் ஓடைகள் உள்ளிட்ட அனைத்து நீர் சேமிப்பு மற்றும் நீர் கடத்தும் அமைப்புகள் எனப் பொருள்படும்;
(zm) "நீர் வள கணக்கீடு" என்பது, ஓர் அமைப்பிற்கு உள் செல்லும் மற்றும் வெளியேறும் நீரின் ஓட்டத்தை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படும் நீரியல் முறையைக் குறிக்கிறது. இது நிலப்பரப்பில் (நதிகள், ஏரிகள்), நிலத்தடிப் பகுதியில் (நீர்நிலை, நிலத்தடி நீர்) மற்றும் வளிமண்டலத்தில் (மழைப்பொழிவு, நீராவி) ஆகியவற்றில் சேமிக்கப்பட்டு பரிமாற்றிக்கொள்ளப்பட்ட அனைத்து நீரின் கணக்கீடு ஆகும்;
(zn) "வாழ்வாதார நீர்" என்பது, ஒவ்வொரு மனிதருக்கும் குடிப்பதற்கு, சமைப்பதற்கு, குளிப்பதற்கு, சுகாதாரம், தனிநபர் சுகாதாரம் மற்றும் அது தொடர்பான தனிப்பட்ட அல்லது வீட்டுப் பயன்பாடுகளுக்குத் தேவையான, பொருத்தமான, தரமான அடிப்படை அளவு நீர் எனப் பொருள்படும். இதில், பெண்களின் சிறப்புத் தேவைகளுக்கான கூடுதல் தேவையும் அடங்கும். மேலும், வீட்டு கால்நடைகள் அல்லது வனவிலங்குகளுக்குத் தேவையான நீரையும் இது உள்ளடக்கும். இதில், 'வனவிலங்குகளுக்கான நீர்' என்பது நீர் பற்றாக்குறை தொடர்பாக எழும் மனித-வனவிலங்கு மோதல்களைத் தடுக்கத் தேவையான நீரைக் குறிக்கிறது;
6 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு(zo) "நீர்வளங்கள்" என்பது மேற்பரப்பு நீர், நிலத்தடி நீர், முகத்துவாரங்கள், நீர்த்தாங்கிகள், ஆறுகள், ஊற்றுகள், நீரானது தொடர்ந்து அல்லது அவ்வப்போது பாயும் இயற்கை வழிகள், சதுப்புநிலங்கள், ஏரிகள், குளங்கள் அல்லது நீர்த்தேக்கங்கள், மற்றும் நீர் பாயும் எந்தவொரு நீர் சேகரிப்பு இடங்களையும், மற்றும் அரசு அறிவிப்பின் மூலம் ஒரு நீர்வளமாக அறிவிக்கக்கூடிய நீரின் வேறு எந்த சேமிப்பிடங்களையும் குறிக்கும்;
(zp) "நீர்வள மேலாண்மை" என்பது, முக்கிய சூழல் அமைப்புகளின் மற்றும் சுற்றுச்சூழலின் நிலைத்தன்மையை சமரசம் செய்யாமல், பொருளாதார மற்றும் சமூக நலனை சமமாக அதிகப்படுத்தும் நோக்கில், நீர், நிலம் மற்றும் அது தொடர்பான வளங்களை ஒருங்கிணைத்து ஒழுங்குபடுத்தி நிர்வகிக்கும் செயல்முறையைக் குறிக்கும்;
(zq) "நீர்வள மேலாண்மைத் திட்டங்கள்" என்பது, முறையே 26 மற்றும் 27 ஆம் பிரிவுகளின்கீழ் வெளியிடப்பட்ட தமிழ்நாடு நீர்வள மேலாண்மைத் திட்டம் மற்றும் மாவட்ட நீர்வள மேலாண்மைத் திட்டம் ஆகியவற்றைக் குறிக்கும்;
(zr) "நீர்வளத் திட்டம்" என்பது, விவசாயம், குடிநீர், நீர் மின்சாரம், வெள்ளத் தடுப்பு மற்றும் மேலாண்மை, சுகாதாரம், சேமிப்பு, நீர் சுத்திகரிப்பு அல்லது ஓர் அரசு சார் அல்லது அரசு சாரா நிறுவனத்திற்குச் சொந்தமானதாகவோ அல்லது அவர்களால் நிர்வகிக்கப்படுவதாகவோ உள்ள வேறு நீர் பயன்பாடு அல்லது மேலாண்மையின் வேறு எந்தத் துறைகளிலும் தற்போதுள்ள அல்லது முன்மொழியப்பட்ட ஒற்றை அல்லது பல்நோக்குத் திட்டங்கள் அல்லது அமைப்புகளைக் குறிக்கும்;
(zs) "நீர்ப்பாதுகாப்பு" என்பது, வாழ்வாதாரங்களைப் பேணுவதற்கும், மனிதநல்வாழ்வு மற்றும் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காகவும், நீரினால் பரவும் மாசுபாடு மற்றும் நீர் தொடர்பான பேரழிவுகளிலிருந்து பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்காகவும், போதுமான அளவிலான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தரத்திலான நீருக்கான நிலையான அணுகலை உறுதிசெய்து பாதுகாப்பதாகும்;
(zt) "நீர்நிலை" என்பது, இரண்டு பகுதிகளைப் பிரித்து நிற்கும் உயரமான மலைமுகடு அல்லது கோட்டைக் குறிக்கும், அதாவது கோட்டின் ஒரு பக்கத்தில் பெய்யும் மழைநீர் அந்தப் பக்கத்திலேயே வடிந்து, மறுபக்கத்திற்குச் செல்ல முடியாது. மேலும், இது அந்த மலைமுகடால் சூழப்பட்ட பகுதி, பொதுவாகக் குறைந்த உயரமுள்ள மலைமுகடுகளால் சூழப்பட்ட ஒரு சிறிய உள்ளூர் பகுதியைக் குறிக்க பயன்படுகிறது. ஆனாலும், சில நேரங்களில் உயரமான மலைகளால் சூழப்பட்ட ஒரு பெரிய பகுதியையும் குறிக்கும்;
(zu) "நீர் பயனர்" என்பது, விவசாயம், தோட்டக்கலை, வீட்டு, வணிகம் அல்லது தொழில் நோக்கங்களுக்காகவோ அல்லது கட்டணம் வசூலிக்கப்படக்கூடிய அல்லது கட்டணம் வசூலிக்கப்படாத, எந்தவொரு நீர் வளங்களிலிருந்தும் வேறு எந்த நோக்கத்திற்காகவும் நீரை நிலத்திலிருந்து பிரித்தெடுக்கும் அல்லது எடுத்தல் அல்லது நீரைக் கொண்டு செல்லும் எந்தவொரு நபர் அல்லது அமைப்பு எனப் பொருள்படும்;
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 7(zv) "கிணறு" என்பது, கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், தோண்டி-துளையிடப்பட்ட கிணறுகள், குழாய் கிணறுகள், வடிகட்டி மையங்கள், சேகரிப்புக் கிணறுகள், ஊடுருவல் கிணறுகள், மீள் நிரப்புக் கிணறுகள், வெளியேற்றும் கிணறுகள் அல்லது அவற்றின் கலவைகள் அல்லது மாறுபாடுகள் உள்ளிட்ட நிலத்தடி நீரைத் தேடுவதற்கோ அல்லது பிரித்தெடுப்பதற்கோ அமைக்கப்பட்ட திறந்த வெளிக்கிணறுகள், தோண்டப்பட்ட எந்தவொரு கட்டமைப்பும் எனப் பொருள்படும். ஆனால் அறிவியல் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கிணறுகளை இது உள்ளடக்காது.
அத்தியாயம்-II.அத்தியாயம்-II.
நீர்வள மேலாண்மையின் அத்தியாவசியக் கொள்கைகள். நீர்வள மேலாண்மையின் அத்தியாவசியக் கொள்கைகள்.
நீர்வள
மேலாண்மையின்
அத்தியாவசியக்
கொள்கைகள்.
3. (1) இம்மாநிலத்தின் நீர் வளங்கள் மற்றும் பிற தொடர்புடைய வளங்களானவை, பின்வரும் அத்தியாவசியக் கொள்கைகளுக்கிணங்கியவாறு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு, மேலாண்மை செய்யப்பட்டு, பெருக்கப்படுதல் வேண்டும், அவையாவன:—
(a) நீர் என்பது வாழ்க்கை, வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழலை நிலைநிறுத்துவதற்கு அவசியமான, ஒரு வரையறுக்கப்பட்ட மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய வளமாகும்;
(b) நீர் வளங்களின் ஒழுங்குமுறைப்படுத்துதல், மேலாண்மை செய்தல், பெருக்குதல் மற்றும் அத்தியாவசிய கொள்கைகள் ஆகியவை, அனைத்து மட்டங்களிலும் உள்ள நீர் பயனர்கள், திட்டமிடுபவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை உள்ளடக்கிய ஒரு பங்கேற்பு அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டிருத்தல் வேண்டும்;
(c) நீர் அதன் அனைத்து போட்டிப் பயன்பாடுகளிலும் ஒரு பொருளாதார மதிப்பைக் கொண்டுள்ளது மற்றும் அது ஒரு பொருளாதாரச் சொத்தாக அங்கீகரிக்கப்படுதல் வேண்டும்;
(d) அனைத்து நீர்வளங்களும் பொதுக் கூட்டு வளங்கள்
ஆகும்;
(e) நீர்வளங்களின் பயன்பாடானது, உயிர்வாழ்விற்கான நீர், உணவுப் பாதுகாப்பிற்கான நீர், நிலையான வாழ்வாதாரங்களுக்கான நீர் மற்றும் சுற்றுச்சூழல் தேவைகளுக்கான நீர் என்ற வரிசையில் முன்னுரிமை அளிக்கப்படுதல் வேண்டும்;
(f) நீர்வள மேலாண்மையானது, சமூக சமத்துவம், பொருளாதார சாத்தியக்கூறு மற்றும் சூழலியல் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்;
(g) தடுப்பு நடவடிக்கைக் கொள்கைகள்;
(h) முன்னெச்சரிக்கைக் கொள்கைகள்.
(2) அடிப்படைக் கொள்கைகளானவை—
(a) நீர் வளங்கள் தொடர்பான தங்கள் அதிகாரங்களைப் பயன்படுத்துவதிலும், தங்கள் செயல்பாடுகளை நிறைவேற்றுவதிலும் அதிகார அமைப்பு, குழு மற்றும் செயல்படுத்தும் அதிகாரஅமைப்புகளுக்கு வழிகாட்டுதல் வேண்டும்;
8 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு(b) மாநிலத்தில் நீர் வள மேலாண்மை தொடர்பான அனைத்துத் திட்டங்களையும் உருவாக்குவதற்கான அடிப்படையாக அமைந்திடுதல் வேண்டும்;
(c) நீரை நிலத்திலிருந்து பிரித்தெடுத்தல் அல்லது கொண்டு செல்லுதல் அல்லது பயன்படுத்துதல் அல்லது நீர் வளங்கள் அல்லது அது தொடர்பான சூழல் அமைப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அங்கீகாரங்களை வழங்குவதற்கோ அல்லது வழங்க மறுப்பதற்கோ எடுக்கப்படும் அனைத்து முடிவுகளுக்கும் அடிப்படையாக அமைதல்;
(d) நீரை நிலத்திலிருந்து பிரித்தெடுத்தல் அல்லது நீர்வளங்களைப் பயன்படுத்துவதற்காகக் கட்டணம் விதிக்கப்பட வேண்டுமா என்பதையும், அப்படி விதிக்கப்பட்டால் அதன் அளவை நிர்ணயிப்பதிலும் ஒரு பங்கை ஆற்றுதல் வேண்டும்;
(e) இந்தச் சட்டத்தின் கீழ் விதிகள் மற்றும்
ஒழுங்குமுறைகளை உருவாக்குவதில் இது பிரதிபலித்தல் வேண்டும்;
(f) நீர் வளங்கள் தொடர்பான குறைகள் அல்லது
பூசல்களைத் தீர்ப்பதற்கு இது பயன்படுத்தப்படுதல் வேண்டும்.
பாகுபாட்டிற்கு
எதிரான தடை.
4. எந்தவொரு நபரும், அவரது சாதி, மதம், சமூகம், இனம், வகுப்பு, பாலினம், பாலின வேறுபாடு, பாலியல் ஈர்ப்பு, வயது, திருமண நிலை, மாற்றுத்திறன், வசிப்பிடம் அல்லது இவற்றில் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் மட்டுமே நீர் வளங்களை அணுகுவதிலிருந்தோ அல்லது பயன்படுத்துவதிலிருந்தோ மறுக்கப்படுதல் கூடாது.
அத்தியாயம்-III.அத்தியாயம்-III.
மாநில நீர்வளங்கள் மேலாண்மைக்காக நிறுவன வரைச்சட்டம். மாநில நீர்வளங்கள் மேலாண்மைக்காக நிறுவன வரைச்சட்டம்.
தமிழ்நாடு
நீர்வளங்கள்
மேலாண்மை
அதிகார
5. (1) அரசு, அறிவிக்கையின் வாயிலாக மாநிலத்தில் நீர்வளங்களை ஒழுங்குமுறைப்படுத்துதல், மேலாண்மை மற்றும் பெருக்கம் ஆகியவற்றிற்கு, தமிழ்நாடு நீர் வளங்கள் மேலாண்மை அதிகார அமைப்பு என அழைக்கப்படும் ஓர் அதிகார அமைப்பை நிறுவுதல் வேண்டும்.
அமைப்பினை
நிறுவுதல்.
(2) (1) ஆம் உட்விரின் கீழ் நிறுவப்பட்ட அதிகார அமைப்பானது, இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கான அதிகாரத்தையும் நிலையான வழியுரிமையும் ஒரு பொது முத்திரையும் கொண்டுள்ள ஒரு கூட்டுருக் குழுமமாக இருத்தல் வேண்டும்.
(3) அதிகார அமைப்பானது, பின்வரும் உறுப்பினர்களைக்
கொண்டிருத்தல் வேண்டும், அவர்களாவன:-
(a) அரசு தலைமைச் செயலாளர், பதவிவழித் தலைமையர்
ஆக இருத்தல் வேண்டும்,:
(b) நிதித்துறைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசு
செயலாளர், பதவிவழி;
(c) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்
துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள, அரசு செயலாளர், பதவிவழி;
(d) வேளாண்மை - உழவர்நலத் துறையைப் பொறுப்பில்
கொண்டுள்ள அரசு செயலாளர், பதவிவழி;
(e) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்
துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசு செயலாளர், பதவிவழி;
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 9(f) சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்
துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசு செயலாளர், பதவிவழி;
(g) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையைப்
பொறுப்பில் கொண்டுள்ள அரசு செயலாளர், பதவிவழி;
(h) சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலைத்
துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசு செயலாளர், பதவிவழி;
(i) நீர்வளங்கள் துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசு செயலாளர், பதவிவழி உறுப்பினர் செயலாளராக இருத்தல் வேண்டும்;
(j) நீர்வளங்கள் அல்லது தொடர்புடைய துறைகளில், சிறப்பு அனுபவம் கொண்ட வல்லுநர்கள் மூவர் அரசால் நியமனம் செய்யப்படுதல் வேண்டும்.
(4) அதிகார அமைப்பானது, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய வரையறை மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு மற்றும் அத்தகைய முறையில் அது தக்கதெனக் கருதக்கூடிய, மூன்று உறுப்பினர்களுக்கு மிகாதவர்களை இணை உறுப்பினர்களாக நியமிக்கலாம்;
(5) அதிகார அமைப்பானது, நீர்வளங்கள் மேலாண்மைத் துறையில் சிறப்பு பெற்ற நபர்கள் அல்லது தகுதியானவர்களாக கருதப்படும் சிறப்பு வாய்ந்த அல்லது உயர் மதிப்பு பெற்ற நபர்களை அதிகார அமைப்பின் கூட்டங்கள் எதிலும் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பதற்கு அத்தகைய எண்ணிக்கையில் அழைக்கலாம். சிறப்பு அழைப்பாளர்கள் விவாதத்தில் பங்கேற்கலாம். ஆனால் வாக்களிப்பதற்கு உரிமை பெற்றிருக்கமாட்டார்கள்.
(6) அதிகார அமைப்பின் கூட்டங்களுக்கு அழைக்கப்படும் நியமன உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கட்டணங்களும் படித்தொகைகளும் வழங்கப்படுதல் வேண்டும்.
அதிகார அமைப்பின்
கூட்டங்கள்.
6. (1) அதிகார அமைப்பானது, தலைமையரால் குறிப்பிடப்படும் அத்தகைய நேரம் மற்றும் இடத்தில் ஆறுமாதங்களுக்கு ஒருமுறையேனும் கூடுதல் வேண்டும்.
(2) தலைமையர், அதிகார அமைப்பின் கூட்டங்களுக்கு தலைமையேற்று நடத்துதல் வேண்டும் மற்றும் எந்தவொரு காரணத்திற்காகவும் அதிகார அமைப்பின் கூட்டம் ஒன்றில் தலைமையரால் கலந்து கொள்ள இயலவில்லை எனில், தலைமையரால் நியமனம் செய்யப்பட்ட பிற உறுப்பினர்கள் எவரும் தலைமையேற்று கூட்டத்தினை நடத்தலாம்.
(3) தலைமையர் உள்ளடங்கலான, அதிகார அமைப்பின் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் பாதி நபர்களின் அளவு குறைவெண்ணாக அமைந்திருத்தல் வேண்டும் மற்றும் அதிகார அமைப்பின் அனைத்து முடிவுகளும், வந்திருந்து வாக்களிக்கும் உறுப்பினர்களின் பெரும்பான்மை ஒன்றினால் எடுக்கப்படுதல் வேண்டும்.
வரம்புரையாக, வாக்கு சமநிலையின் போது தலைமையர் அல்லது அவரது வராமையின்போது, (2) ஆம் உட்பிரிவின் கீழ் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர் அறுதி செய்யும் வாக்கினைப் பெற்றிருப்பர்.
10 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு(4) தலைமையர், அதிகார அமைப்பின் விவகாரங்களைப் பொது கண்காணிப்பு செய்தல், பணிப்புரை வழங்குதல், கட்டுப்படுத்துதல் ஆகிய அதிகாரங்களைப் பெற்றிருப்பார். மேலும், இந்தச் சட்டத்தின் வகையங்கள் எதற்கும் குந்தகமின்றி வகுத்துரைக்கப்படலாகும் அதிகார அமைப்பின் அத்தகைய பிற அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகளை செயற்படுத்துதலும் நிறைவேற்றுதலும் வேண்டும்.
(5) அதிகார அமைப்பின் அனைத்து முடிவுகளும், தலைமையர்
அல்லது உறுப்பினர் செயலாளரால் கையொப்பமிடப்படுதல் வேண்டும்.
(6) அதிகார அமைப்பின் தலைமையர் அல்லது எந்த உறுப்பினருக்கும், அதிகாரத்தின் கூட்டத்தில் பரிசீலனைக்குக் கொண்டுவரப்படும் எந்த பொருட்பாட்டிலும் நேரடி அல்லது மறைமுக நிதி அல்லது பிற வகையான நலன் இருந்தால், அந்த தொடர்புடைய சூழ்நிலைகள் அவருக்கு தெரியவந்த உடனே, தமது அந்த நலனின் தன்மையை வெளிப்படுத்த வேண்டும்; அந்த கூட்டமும் அந்த வெளிப்படுத்தலும் எழுத்துப் பதிவாகச் செய்யப்பட வேண்டும்; மேலும், நேர்விற்கேற்ப, தலைமையர் அல்லது அந்த உறுப்பினர், அத்தகைய பொருட்பாட்டைப் பற்றிய அதிகார அமைப்பின் எந்தவொரு விவாதத்திலும் அல்லது தீர்மானத்திலும் பங்கேற்கக் கூடாது.
அதிகார அமைப்பின் 7. அதிகார அமைப்பின் செயல் அல்லது நடவடிக்கையானது,
நடவடிக்கைகள்
(a) அதிகார அமைப்பின் அமைப்பில் உள்ள காலியிடம்
செல்லுந்
அல்லது குறைபாடு எதனின்;
தன்மையற்ற
தாக்கப்படுதல்
(b) அதிகார அமைப்பின் உறுப்பினர் பணியமர்த்தத்தில்
கூடாது.
அல்லது நியமனத்தில் உள்ள குறைபாடு எதனின்; அல்லது
(c) வழக்கின் தகுநிலையை பாதிக்காத, அதிகார அமைப்பினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையில் உள்ள ஒழுங்கின்மை எதனின்,
காரணத்தின் பேரில் மட்டுமே
செல்லுந்தன்மையற்றதாக்கப்படுதல் கூடாது.
அதிகார
அமைப்பினுடைய
நியமன
8. (1) நியமன உறுப்பினர்களின் நியமனத்திற்கான நிபந்தனைகள் மற்றும் வரையறைகளானவை, வகுத்துரைக்கப்படலாகிறவாறு இருத்தல் வேண்டும்.
உறுப்பினர்களின்
(2) ஒரு நியமன உறுப்பினராக இருப்பது முடிவுற்ற நபரெவரும்,
நியமனத்திற்கான
மறு நியமனத்திற்காகத் தகுதியுடையவர் ஆவார்.
நிபந்தனைகள்
மற்றும்
வரையறைகள்.
(3) ஒரு நியமன உறுப்பினர், எந்த நேரத்திலும் தான் கையொப்பமிட்ட கடிதத்தை அதிகார அமைப்புக்கு முகவரியிட்டு தனது பதவியிலிருந்து விலகலாம்.
அதிகார
அமைப்பினுடைய
உறுப்பினர்
பதவியில் இருந்து
நீக்குதல்.
9. நியமனம் செய்யப்பட்ட அல்லது இணைந்து சேர்த்துக் கொள்ளப்பட்ட உறுப்பினர் ஒருவர் பதவிவகிக்க தகுதியற்றவர் என்றோ அல்லது தவறான நடத்தை அல்லது அலட்சியம் செய்ததாகவோ எந்நேரத்திலும், அவரை அதிகாரஅமைப்பின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவது உகந்ததாகிறது என அரசிற்குத் தோன்றுமாயின், அரசானது, அத்தகைய உறுப்பினருக்கு விளக்கமளிப்பதற்கான நியாயமான வாய்ப்பு ஒன்றினை வழங்கிய பிறகு, அத்தகைய உறுப்பினரை ஆணையினால் பதவியில் இருந்து நீக்கலாம்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 11அதிகார அமைப்பின் 10. இந்தச் சட்டத்தின் நோக்கத்திற்காக அதிகார அமைப்பானது,
அதிகாரங்கள்.
பின்வரும் அதிகாரங்களைக் கொண்டிருத்தல் வேண்டும், அதாவது:-
(a) மாநில நீர்க் கொள்கையினை உருவாக்குதல் மற்றும்
அதனை சீராய்வு செய்தல்;
(b) மாநில நீர் வளங்கள் மேலாண்மைத் திட்டத்தை தயாரித்தல்
மற்றும் அதில் மாற்றங்கள் செய்தல்;
(c) வணிக நோக்கில் நீரைப் பயன்படுத்தும் பல்வேறு வகை பயனர்களுக்கு கட்டண வீதங்களைத் தீர்மானித்தல் மற்றும் நிர்ணயம் செய்தல்;
(d) அதிகார அமைப்பு, அதன் செயற்பணிகளை நிறைவேற்றுவதில் உதவுவதற்கு அவ்வப்போது வேண்டுறுத்தப்படலாகும் அதிகார அமைப்பிற்கான அலுவலர்கள், பணியாளர் தொகுதியினர் மற்றும் ஆலோசகர்களை நியமித்தல்;
(e) மாநிலத்தின் பல்வேறு நிலைகளில் செயலுருத்தும் அதிகார அமைப்புகளாக நியமிக்கப்படக்கூடிய அதிகார அமைப்புகளை அடையாளம் காணுதல்;
(f) செயல்படுத்தும் அதிகார அமைப்புகளின் பணி மற்றும்
பொறுப்புகளை வரையறுத்தல்;
(g) நீர் வளங்களை ஒழுங்குமுறைப்படுத்துதல், மேலாண்மை மற்றும் பெருக்கம் ஆகியவற்றின் நிலையான பயன்பாட்டை உறுதி செய்தல், நீரின் தரம் மற்றும் அளவினைக் கண்காணித்தல் போன்ற செயலுறுத்தும் அதிகார அமைப்புகளுக்கு குறிப்பிட்ட கடமைகளை ஒதுக்குதல் மற்றும் நடைமுறையில் உள்ள சட்டம் எதன் கீழும் பிணைக்கப்பட்ட பொருந்தக்கூடிய நீரின் தரநிலைகள் அனைத்துடனும் இணங்குவதை உறுதி செய்தல்;
(h) செயல்படுத்தும் அதிகார அமைப்பு எதுவும் வேண்டுறுத்துகிற அத்தகைய தகவல்களை அது பணிக்கலாகும் அத்தகைய வடிவத்திலும் முறையிலும் சேகரித்து சமர்ப்பித்தல்;
(i) இந்தச் சட்டத்தின் கீழ் அதன் செயற்பணிகளை ஆற்றுவதற்கும் மற்றும் அதன் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் தேவையானதாக அது கருதலாகும் அத்தகைய தகவல்களை அரசுத் துறை அல்லது அமைப்பு எதனிடமும் வழங்குமாறு வேண்டுறுத்துதல்;
(j) குழுவின் மற்றும் செயலுறுத்தும் அதிகார அமைப்புகளின் செயல்கள் மற்றும் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுதல் மற்றும் கண்காணித்தல்;
(k) ஒழுங்குமுறை விதிகளைச் செய்தல், குழுக்கள் மற்றும் செயலுறுத்தும் அதிகார அமைப்புகளின் செயற்பணிகளையும் அவர்களின் செயற்பணிகள் கண்காணிக்கப்பட வேண்டிய முறையையும் வரையறுத்தல்;
(l) மாநில நீர் வளங்கள் மேலாண்மைத் திட்டத்தின் மாற்றங்கள்
தொடர்பாக அரசுக்கு பரிந்துரைகளைச் செய்தல்;
(m) அதன் அலுவலர்கள் மற்றும் பணியாளர் தொகுதியினர்
மீது மேற்பார்வையிடுதல் மற்றும் கட்டுப்பாடு செலுத்துதல்;
(n) குழுக்களாலும் செயல்படுத்தும் அதிகாரஅமைப்புகளாலும், அதிகார அமைப்பிடம் சமர்ப்பிக்கப்படலாகும் பிற பொருட்பாடு எதனையும் முடிவு செய்தல்;
(o) அரசின் துறைகள் அல்லது ஏற்பு நிறுவனங்கள் எதிலிருந்தும், அதன் செயற்பணிகளை நிறைவேற்றுவதில், அதற்குத் தேவைப்படக்கூடிய தொழில்நுட்ப அல்லது நிருவாக உதவிகளைக் கோருதல்;
12 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுஅதிகார அமைப்பின்
செயற்பணிகள்
மற்றும்
கடமைகள்.
11. (1) அதிகார அமைப்பானது, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு இணங்கியவாறு அனைவருக்கும் நீர் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒட்டுமொத்த குறிக்கோளுடன், அடிப்படைக் கொள்கைகளுக்கு இணங்கியவாறு மாநிலத்தில் நீர்வளங்கள் மேலாண்மைச் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்வதை, ஒருங்கிணைத்தல், மேம்படுத்துதல் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்துதல் வேண்டும். அதிகார அமைப்பானது,-
(a) அனைவருக்கும் உரிய தரத்திலான நீரினை
போதுமான அளவு நிலையாக கிடைக்கத்தக்கதாய் இருப்பதையும்;
(b) நீர் மாசுபடுதலை தடுத்தல், ஆறுகளுக்குள் ஓடைகளுக்குள் மற்றும் நீர் நிலைகளுக்குள் சுத்திகரிக்கப்படாத நீர் செல்லுவதைத் தடுத்தல் மற்றும் மேற்பரப்பு நீரிலும் நிலத்தடி நீரிலும் காணப்படும் நீர் அசுத்தமாதலைத் தடுத்தல்;
(c) சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களைக் கருத்தில் கொண்டு நீர்வள ஆதாரங்களைப் பேணுதல், பாதுகாத்தல் மற்றும் காத்தல்;
(d) நிலையான வளர்ச்சி மாதிரிகளை ஊக்குவிக்கும் வகையில், சுற்றுச்சுழல் அமைப்புகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தைப் பேணிக்காத்தல்;
(e) பருவநிலை மாற்றத்தின் தாக்கத்திற்கு எதிரான தகவமைப்பு மற்றும் தணிப்பு நடவடிக்கைகளையும் உறுதி செய்தல் வேண்டும்.
(2) (1) ஆம் உட்பிரிவின் பொதுப் பாங்கிற்குக் குந்தகமின்றி
அதிகார அமைப்பின் செயற்பணிகளானவை,-
(a) மாநிலத்தில் நடைமுறையில் உள்ள சட்டங்களையும் பல்வேறு செயற்படுத்தும் அதிகார அமைப்புகளாலும், அவற்றுக்கிடையேயும் உள்ள நீர்வளங்களை ஒழுங்குமுறைப்படுத்துதல், மேலாண்மை மற்றும் பெருக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடைய வழிகாட்டுதல்கள் மற்றும் அமைப்புமுறைகளையும் மதிப்பாய்வு செய்து, அவற்றை சட்டத்துடன் பொருந்தி இருக்கும்படிச் செய்வதற்கு தேவையான மாற்றங்களை அரசுக்குப் பரிந்துரை செய்தல், செயற்பணிகள் மற்றும் அதிகார வரம்புகள் ஒன்றின் மீது ஒன்று மேற்படுதலை நீக்குதல், புதிய பொறுப்புகள் உள்ளடக்கங்களான தெளிவான பங்கேற்புகள் மற்றும் பொறுப்புகளை வரையறை செய்தல், நீர்வளங்கள் மேலாண்மையின் அடிப்படைக் கோட்பாடுகளுடன் நிறுவனக் கட்டமைப்பை ஒழுங்கமைவு செய்தல்;
(b) மாநிலத்தில் நீர்வளங்கள் மேலாண்மையின் தேவையான தொழில்சார் தரநிலைகளை அடைவதற்கு, செயல்படுத்தும் அதிகார அமைப்புகளின் தற்போதைய நடைமுறைகள் மற்றும் செயல்திறன் தரநிலைகளை மதிப்பாய்வு செய்து, அவற்றுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் செயல்திறன் குறியீடுகளை உருவாக்குதல்;
(c) திறன்மிகு நீர்வளங்கள் மேலாண்மையை அடைவதில் ஒரு குறிக்கோளுடன், அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் குறைபாடுகளை சரிசெய்யும் நோக்குடன் செயல்படுத்தும் அதிகார அமைப்புகளின் திறன் மேம்பாட்டை ஒருங்கிணைத்தல், இயல்வித்தல் மற்றும் உறுதி செய்தல்;
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 13(d) மேற்பரப்பு நீர், நிலத்தடி நீர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர், பருவகால மீட்சித்திறன் நீர்வள ஆதார உட்கட்டமைப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பயன்பாட்டினை மேம்படுத்துதல், இயல்வித்தல் மற்றும் செயல்முறைப்படுத்துதல் மற்றும் தற்போதுள்ளதும் முன்மொழியப்பட்டதுமான நீர்வள ஆதார உட்கட்டமைப்பின் செயல்திறன் சிறப்பை மேம்படுத்துதல்;
(e) செயல்படுத்தும் அதிகார அமைப்புகளின் மூலம் நீர் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை பெருமளவில் பயன்படுத்துவதன் மூலம் நீர் விநியோக பெருக்கத்தை ஊக்குவித்தல்;
(f) உப வடிநிலம் அல்லது ஆற்று வடிநிலத்திற்குள் உள்ள
நீர்வளத் திட்டங்களின் மேம்பாட்டுத் தேவைகளை மதிப்பாய்வு செய்தல்;
(g) தமிழ்நாடு நீர்வளங்கள் மேலாண்மைத் திட்டத்தின்
செயல்படுத்துதலைக் கண்காணித்தல்,
ஆகியவற்றை உள்ளடக்குதல் வேண்டும்.
(3) அதிகார அமைப்பானது, இந்தப் பிரிவின்படியான செயற்பணிகளுக்கு குந்தகமின்றி, தமிழ்நாடு நீர்வளங்கள் மேலாண்மைத் திட்டத்தினை செயல்படுத்துவதற்காக பின்வரும் செயற்பணிகளைப் புரிதல் வேண்டும்: -
(a) மாவட்ட நீர்வளங்கள் மேலாண்மைத் திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் செயல்படுத்துதலைக் கண்காணித்தல் மற்றும் அத்தகைய திட்டங்களைத் தொடர்ச்சியாகப் பின்பற்றுவதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்முறைகள் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு தரவு தளத்தைப் பராமரித்தல்;
(b) மாவட்ட, வட்டார, நகர் மற்றும் கிராம ஊராட்சி நிலைகளில் நீர்வளங்கள் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு மற்றும் கல்வியறிவை உருவாக்குதல் உள்ளடக்கங்களான நீர்வளங்கள் மேலாண்மை தொடர்பான தகவல்கள், கல்வி மற்றும் தகவல் தொடர்பு நடவடிக்கைகளையும் அத்துடன் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகளையும் நடத்துதல்;
(c) கிணறு அமைத்தல் அல்லது பிற நிலத்தடி நீர் எடுப்பு ஆதாரங்களை உருவாக்குவது தொடர்பான தகவல்களின் ஒரு தரவு தளத்தை ஒருங்கிணைத்துப் பராமரித்தல்;
(d) அந்தந்த பகுதிகள் அல்லது அமைவிடங்களுக்கான நீர்வளங்கள் மேலாண்மைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகோல்களின்படி, நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் நீர் மீளேற்றக் கட்டமைப்புகள் உள்ளடங்களான மழைநீர் சேகரிப்பு, நீர்ப்பிடிப்பு மற்றும் நீர் பிடிப்புப் பாதுகாப்பு உள்ளிட்ட நீர்வள பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பரிந்துரைத்தல்;
(e) நீர் அதிகம் தேவைப்படும் பயிர்களில் இருந்து நீர் குறைவாகத் தேவைப்படும் பயிர்களுக்கு மாறுவதற்கும், நீர் சேமிப்பு மற்றும் ஆற்றல் திறன் கொண்ட தொழில்நுட்பங்களை பின்பற்றுவதற்கும் ஊக்கத் தொகைகள் அளிப்பதை பரிந்துரைத்தல்;
(f) நிலத்தடி நீர் பாதுகாப்பு மண்டலங்கள், வெள்ளப்பெருக்கு மண்டலங்கள் மற்றும் ஆற்றுப் பாதுகாப்பு மண்டலங்களை எல்லை நிர்ணயம் செய்து வகைப்படுத்துதல் மற்றும் இந்தச் சட்டத்திற்கு இணங்கலாக அவற்றிற்கான செயல்பாடுகளுக்கு விதிமுறைகளை வகுத்தல்;
14 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு(g) நீர்வளப் பாதுகாப்பு உள்ளடங்களான நீர் வளங்களை ஒழுங்குமுறைப்படுத்துதல், மேலாண்மை மற்றும் பெருக்குவதற்காக பொருத்தமான வழிகாட்டுதல்களையும் ஒழுங்குமுறை விதிகளையும் கட்டமைத்தல்,
(h) நீர்வளங்கள் மேலாண்மையில் தொழில்நுட்பம்,
ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை ஊக்குவித்தல்;
(i) மாநிலத்தின் அனைத்து நீர் வளங்கள் மற்றும் நீர்ப் பயனர்களின் தரவுத்தளத்தை வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் தயாரித்தல்;
(j) அனைத்து நீர்வளத் திட்டமிடல் மற்றும் மேலாண்மையில், காலநிலை மீட்சித்திறன் நடைமுறைகளை ஊக்குவிப்பதன் மூலமும், பாதுகாப்பான திறன்மிகு நீர் பயன்பாடு மற்றும் தகவமைப்பு உள்கட்டமைப்பை ஒருங்கிணைப்பதன் மூலமும் மற்றும் நிலையான மற்றும் சமமான நீர் கிடைப்பதை உறுதி செய்தல்;
(k) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய பிற
செயற்பணிகளைப் புரிதல்.
மாவட்ட நீர்
வளங்கள் குழு.
12. (1) அரசு, அறிவிக்கையின் மூலம், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பின்வரும் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு மாவட்ட நீர் வளங்கள் குழுவை அமைத்தல் வேண்டும், அவர்களாவர்:-
(a) மாவட்ட ஆட்சித் தலைவர், பதவிவழித் தலைமையராக
இருத்தல் வேண்டும்;
(b) நீர் வளங்கள் துறையின் செயற்பொறியாளர் அல்லது துணை இயக்குநர் (புவியியல்) தரநிலைக்குக் குறையாத ஓர் அலுவலர், உறுப்பினர் செயலாளராக இருத்தல் வேண்டும்;
(c) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் செயற்பொறியாளர் அல்லது ஊராட்சிகள் உதவி இயக்குநர் தரநிலைக்குக் குறையாத, ஓர் அலுவலர்;
(d) மாவட்டத்திலுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஏதேனும் ஒன்றின் செயற்பொறியாளர் அல்லது ஆணையாளர் தரநிலைக்குக் குறையாத ஓர் அலுவலர்;
(e) தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட
சுற்றுச்சூழல் பொறியாளர் தரநிலைக்குக் குறையாத ஓர் அலுவலர்;
(f) வேளாண்மைத் துறையின் இணை இயக்குநர்
தரநிலைக்குக் குறையாத, ஓர் அலுவலர்;
(g) மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர்;
(h) மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் செயற்பொறியாளர் தரநிலைக்குக் குறையாத, ஓர் அலுவலர்;
(i) தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் செயற்பொறியாளர்
தரநிலைக்குக் குறையாத ஓர் அலுவலர்;
(j) நீர் வளத் துறையின் உதவி இயக்குநர் (புவியியல்);
(k) மாவட்டத்திலுள்ள நீர் பாதுகாப்பு அல்லது சமூக மேம்பாட்டுத் துறையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் விவசாயிகளின் சங்கங்கள், நீர் பயன்படுத்துவோர் சங்கங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் அல்லது சமூக அடிப்படையிலான அமைப்புகள் உள்ளிட்ட ஏதேனுமொரு அங்கீகரிக்கப்பட்ட சமூகக்குழு அல்லது குடிமக்கள் சமூக அமைப்பிலிருந்து, தலைவரால் நியமனம் செய்யப்படும் ஒரு சார்பாற்றுநர்;
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 15(l) நீர் வளங்கள் துறையில் தலைமையரால் நியமிக்கப்படும்
ஒரு வல்லுநர்.
(2) தலைமையரால் குறிப்பிடப்படலாகும் அத்தகைய நேரம் மற்றும் இடத்தில், மூன்று மாதங்களுக்கு ஒருமுறையேனும் குழுவானது கூடுதல் வேண்டும்;
(3) 6, 7, 8 மற்றும் 9 ஆம் பிரிவுகளானவை, இந்தப் பிரிவின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத வரையில், குழுக்கள் தொடர்பாக தேவையான மாறுதல்களுடன், பொருந்துதல் வேண்டும்.
மாவட்ட நீர்
வளங்கள்
குழுவின்
செயற்பணிகள்.
13. (1) மாநில நீர் வளங்கள் மேலாண்மைத் திட்டத்திற்கு இணங்க மாவட்ட நீர் வளங்கள் குழுவின் முதன்மை செயற்பணிகள், நீர் தொடர்பான சவால்களை அடையாளம் கண்டு அவற்றை தீர்வு செய்வதும், மாவட்ட நீர் பாதுகாப்புத் திட்டம், மாவட்ட நீர் கணக்கீடுகள் மற்றும் மாவட்ட நீர் வளங்கள் மேலாண்மைத் திட்டங்களைத் தயாரித்து, கண்காணித்து செயல்படுத்துவதாகவும் இருத்தல் வேண்டும்.
(2) மாவட்ட நீர் வளங்கள் குழுவானது, பின்வரும் பிற
செயற்பணிகளையும் புரிதல் வேண்டும், அவையாவன:-
(a) தேவைப்படலாகிறவாறு அதன் செயற்பணிகளை நிறைவேற்றுவதற்கு அதிகாரஅமைப்புக்கு உதவுதல் மற்றும் அதிகாரஅமைப்பின் பணிப்புரைகளுக்கு இணங்கி நடத்தல்;
(b) இந்தச் சட்டத்தின் திட்டங்கள் மற்றும் வகைமுறைகளின் ஆக்கக்கூறுகளை செயல்படுத்துவது தொடர்பாக, செயல்படுத்தும் அதிகார அமைப்புகளுக்கு வழிகாட்டுதல் செய்து அவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல்;
(c) ஒருங்கிணைந்த பயன்பாடு, காலநிலை மீட்சித்திறன் மற்றும் திறன்மிகு நீர் பயன்பாடு உள்ளடங்களான நீர் வளங்கள் மேலாண்மையை ஊக்குவித்தல்; துறைகளிடையேயான ஒத்துழைப்பை இயல்வித்தல்;
(d) பாதுகாத்தல், நீர் மீளேற்றம், மழைநீர் சேகரிப்பு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரைப் பயன்படுத்துவதன் மூலம் நீர் விநியோகத்தைப் பெருக்குதல்;
(e) வெளிப்படையான தரவுப் பகிர்வை இயல்வித்தல், ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை ஊக்குவித்தல் மற்றும் திறன் மேம்பாட்டை ஒருங்கிணைத்தல்;
(f) நீர் பற்றாக்குறை கொண்ட கிராமப்புற மற்றும் நகர்ப்புற
உள்ளாட்சி அமைப்புகளுக்கு, நீர் பகிர்வை இயல்வித்தல்; மற்றும்
(g) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய பிற செயற்பணிகளைப்
புரிதல்.
செயற்படுத்தும்
அதிகார அமைப்பு.
14. (1) அரசு, அறிவிக்கையின் மூலம், இந்தச் சட்டத்தின் வகைமுறைகளைச் செயல்படுத்துவதற்காக, அதில் குறிப்பிடப்பட்டவாறான அத்தகைய துறை அல்லது அதன் பகுதி அல்லது நோக்கத்திற்கு செயல்படுத்தும் அதிகார அமைப்பாக எந்தவொரு அலுவலரையும் அல்லது அதிகார அமைப்பையும் நியமித்தல் வேண்டும்.
(2) செயல்படுத்தும் அதிகார அமைப்புகளானவை, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளின்படி, அதிகார அமைப்புகளால், பணிப்புரைக்கப்படுகிறவாறு மாநிலத்தில் உள்ள நீர் வளங்களை ஒழுங்குமுறைப்படுத்துதல், மேலாண்மை மற்றும் பெருக்கம் ஆகியவற்றை செய்தல் வேண்டும்.
16 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுசெயற்படுத்தும்
15. செயல்படுத்தும் அதிகார அமைப்புகளானவை நீர் வளங்கள்
அதிகார
தொடர்பாக தங்களது செயற்பணிகளைப் புரியும் போது,-
அமைப்புகளின்
கடமைகளும்
செயற்பணிகளும்.
(a) இந்தச் சட்டத்தின்படி விதிக்கப்பட்டுள்ள நீர் வளங்கள் மேலாண்மையின் இன்றியமையாத கொள்கைகளுக்கு இணங்கியவாறு செயல்படுதல் வேண்டும்;
(b) நீர் வளங்கள் மேலாண்மைத் திட்டங்களுக்கு
இணங்கியவாறு செயல்படுதல் வேண்டும்;
(c) அதிகார அமைப்பால் பரிந்துரைக்கப்படும் நீர் வளங்கள் மேலாண்மைக்குத் தொடர்பான நடவடிக்கைகளை செயல்படுத்துதல் வேண்டும்;
(d) நீர் வளங்களை ஒழுங்குமுறைப்படுத்துதல், மேலாண்மை மற்றும் பெருக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடைய, அனுமதிக்கப்பட்ட, தடை செய்யப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கைகள் உள்ளடங்களாக நீர் வளங்கள் மேலாண்மையை நிருவகிக்கும் விதிமுறைகள், நெறிமுறைகள் மற்றும் தரநிலைகளை நடைமுறைப்படுத்துதல்;
(e) அதிகார அமைப்பினால் தீர்மானிக்கப்பட்டு,
நிர்ணயிக்கப்படலாகும் கட்டணத்தை வசூலித்தல்;
(f) சட்டத்தின் வகைமுறைகளை திறம்பட செயல்படுத்துவதற்கு, அதிகார அமைப்புடனும் மற்றும் பிற செயல்படுத்தும் அதிகார அமைப்புகளுடனும், குழுக்களுடனும் கலந்தாலோசித்து ஒருங்கிணைந்து செயல்படுதல்;
(g) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில், அனைத்து நிலப்பரப்பியல், புவியியல், வானிலையியல், நீரியல், நிலத்தடிமண், நிலப்பயன்பாடு மற்றும் அவர்களது வசம் உள்ள நீர் தொடர்பான தரவுகளைப் பொது தளத்தில் கிடைக்கச் செய்தல் அல்லது கிடைக்கத்தக்கதாய் இருக்கச் செய்தல்;
(h) நிலத்தடி நீர் பாதுகாப்பு மண்டலங்கள், வெள்ளப்பெருக்கு மண்டலம் மற்றும் நதி பாதுகாப்பு மண்டலங்கள் ஆகியவற்றை நிலவரையறை செய்வதற்காக அவ்வப்போது அத்தகைய தரவுகளையும் அறிக்கைகளையும் அதிகார அமைப்பிடம் சமர்ப்பித்தல்;
(i) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய பிற
செயற்பணிகளைப் புரிதல்.
உள்நுழைதல்,
16. (1) இந்தச் சட்டத்தின்படியான செயற்பணிகளை
ஆய்வு செய்தல் நிறைவேற்றுதலில், செயல்படுத்தும் அதிகார அமைப்புகளானவை,-
மற்றும்
கைப்பற்றுகை,
முதலியவை
களுக்கான
(a) எந்தவொரு நிலம் அல்லது கட்டிடத்தில் உள் நுழைந்து, எந்தவொரு கிணறு, மண், நீர் வளங்கள் அல்லது பிற பொருட்பாடுகளின் மாதிரிகளை ஆய்வு செய்வதற்கும் அல்லது எடுப்பதற்கும்;
அதிகாரம்.
(b) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு மீறுகையாக பயன்படுத்தப்பட்டுள்ள உபகரணம் எதனையும் பறிமுதல் செய்து கையகப்படுத்துவதற்கும்;
(c) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக நீரை நிலத்திலிருந்து பிரித்து எடுப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள எந்தவொரு கிணற்றையும் மூடி முத்திரையிடுவதற்கும்;
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 17(d) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு செயல், நடவடிக்கை, அல்லது செயல்முறையினை முழுமையாக நிறுத்துவதற்கும், தடை செய்வதற்கும் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்துவதற்கும்;
(e) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளை மீறி மேற்கொள்ளப்படும் எந்தவொரு செயல்பாடு, நடவடிக்கை அல்லது செயல்முறைக்காக வழங்கப்படும் மின்சாரம், நீர் அல்லது ஏதேனும் பிற சேவைகளை நிறுத்துவதற்கு அல்லது ஒழுங்குமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கும்;
அதிகாரங்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.
(2) செயல்படுத்தும் அதிகாரஅமைப்பானது, இந்தப் பிரிவின்கீழ் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளும் முன், சம்பந்தப்பட்ட நீர் பயனாளருக்கு முன் அறிவிப்பு வழங்கி, அவருக்கு தனது கருத்தை தெரிவிப்பதற்கான நியாயமான வாய்ப்பை வழங்க வேண்டும்.
அத்தியாயம்-IV.அத்தியாயம்-IV.
நீர்வளங்களை ஒழுங்குமுறைப்படுத்துதல், நீர்வளங்களை ஒழுங்குமுறைப்படுத்துதல்,
மேலாண்மை மற்றும் பெருக்கம்.மேலாண்மை மற்றும் பெருக்கம்.
நீரை நிலத்திலிருந்து
பிரித்து எடுத்தல்
மற்றும் நீரைக்
கொண்டு
செல்லுதல் 17. (1) வணிக நீர் பயனாளர் எவரும், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்தும், அது முதற்கொண்டும், தொடர்புடைய செயல்படுத்தும் அதிகார அமைப்பிடமிருந்து அனுமதி பெறாமல், நீரை நிலத்திலிருந்து பிரித்து எடுக்கவோ அல்லது எடுத்துக்கொண்டு செல்லவோ அதற்கு இடைவிளைவான எந்தவொரு செயலையும் மேற்கொள்ளுதல் கூடாது:
ஆகியவற்றை
ஒழுங்கு
முறைப்படுத்துதல்.
வரம்புரையாக, ஏற்கனவே நீரை நிலத்திலிருந்து பிரித்து எடுத்து வரும் அல்லது எடுத்துக்கொண்டு செல்லும் வணிக ரீதியான நீர்ப்பயன்பாட்டாளர்கள், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து ஆறு மாதத்திற்குள், தொடர்புடைய செயல்படுத்தும் அதிகார அமைப்பிடமிருந்து அனுமதி எதையும் பெறாமல் நீர் பிரித்து எடுத்தல் அல்லது எடுத்துக்கொண்டு செல்லுதலைத் தொடருதல் கூடாது:
மேலும் வரம்புரையாக, இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, நீரை நிலத்திலிருந்து பிரித்து எடுப்பதற்காக அல்லது எடுத்துக்கொண்டு செல்லுவதற்காக உரிய அதிகார அமைப்புகளினால் வழங்கப்பட்ட அனுமதி எதுவும், இந்தச் சட்டத்தின்படி வழங்கப்பட்ட அனுமதியாகக் கருதப்படுதல் வேண்டும், மற்றும் அது அத்தகைய அனுமதியில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குச் செல்லுந்தன்மையுடையதாகுதல் வேண்டும்.
(2) ஒவ்வொரு வர்த்தக நீர் பயனரும், அத்தகைய அனுமதியைப் பெறுவதற்காக, தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கப்படலாகும் அத்தகைய கட்டணம் மற்றும் அத்தகைய ஆவணங்களுடன் தொடர்புடைய செயல்படுத்தும் அதிகார அமைப்புக்கு விண்ணப்பம் ஒன்றை நேரிடையாகவோ, கடிதம் மூலமாகவோ, இணையவழி முறையிலோ செய்தல் வேண்டும்.
(3) வகுத்துரைக்கப்படலாகும் முறையில் செய்யப்படும் அத்தகைய ஆய்வுக்கும், (2) ஆம் உட்பிரிவின்படி விண்ணப்பத்துடன் உடனிணைக்கப்பட்ட ஆவணங்களின் உண்மைத்தன்மைக்கும் உட்பட்டு, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலத்திற்குள்ளும் நேரிடையாகவோ, கடிதம் மூலமாகவோ, இணையவழி முறையிலோ அனுமதியானது வழங்கப்படுதல் வேண்டும். அனுமதியானது வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய வரையறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும்.
18 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுவரம்புரையாக, நிலத்தடி நீர்மட்ட சரிவு அல்லது நீரின் தரம் மோசமடைதலைத் தடுப்பதற்காக அல்லது நீர் தொடர்ச்சியாகவும் நீரின் தகுந்த தரம் கிடைப்பிற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பிற விளைவுகளைத் தடுப்பதற்காக, அனுமதி வழங்கப்பட்ட பின்பு, எந்த நேரத்திலும், பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக, நிரந்தரமாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கோ விளக்கமளிப்பதற்கான வாய்ப்பை வழங்கிய பின்னர், செயல்படுத்தும் அதிகார அமைப்பானது, அந்த அனுமதியை மாற்றியமைக்கலாம், திருத்தலாம் அல்லது இரத்து செய்யலாம்:
மேலும் வரம்புரையாக, குடிநீர் மற்றும் தொழில்துறை தேவைகளுக்காக, நாள் ஒன்றுக்கு நாற்பத்தைந்து லட்சம் லிட்டருக்கு மிகாமல் மேற்பரப்பு நீரை எடுப்பதற்கான / நிலத்திலிருந்து நீரினைப் பிரித்து எடுப்பதற்கான அனுமதியானது வகுத்துரைக்கப்படலாகும். அத்தகைய முறையில் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்படுதல் வேண்டும். நாள் ஒன்றிற்கு நாற்பத்தைந்து லட்சம் லிட்டருக்கு மேற்பட்ட அதிக கொள்ளவிற்கான அனுமதி அரசால் வழங்கப்படும்.
(4) இந்தச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட அல்லது வழங்கப்பட்டதாகக் கருதப்பட்ட அனுமதியைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் ஒவ்வொன்றும், அத்தகைய அனுமதி முடிவுறும் தேதியிலிருந்து குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்னதாகச் செய்யப்படுதல் வேண்டும்.
(5) இந்தச் சட்டத்தின்கீழ் வகைமுறைகளானவை, இந்தப் பிரிவின்கீழ் அனுமதி வழங்குவது தொடர்பாகப் பொருந்துவதுப் போலவே இயன்றவரை அந்த அனுமதியைப் புதுப்பிப்பது தொடர்பாகவும் பொருந்துதல் வேண்டும்.
(6) இந்தப் பிரிவின்படியான அனுமதிக்கான தேவையானது,
பின்வருவனவற்றிற்குப் பொருந்துதல் கூடாது, அவையாவன:
(a) குடிநீர் மற்றும் வீட்டுப் பயன்பாடுகளுக்காக, நீரை நிலத்திலிருந்து பிரித்து எடுக்கும் குடியிருப்புகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது குழு வீடுகள்;
(b) வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயன்பாடுகள்;
(c) மாநில மற்றும் மைய அரசு, நகர்ப்புற மற்றும்
கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நீர் வழங்கல் திட்டங்கள்;
(d) மாநில மற்றும் மைய அரசின் கல்வி நிலையங்கள்
அல்லது மருத்துவமனைகள் அல்லது உட்கட்டமைப்புகள்;
(e) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய அளவை விட அதிகமாக நீரை நிலத்திலிருந்து பிரித்தெடுக்காத தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள்;
(f) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய அளவை விட அதிகமாக நீரை நிலத்திலிருந்து எடுக்காத அடைக்கப்பட்ட குடிநீர் நிறுவனங்கள் அல்லாத மீச்சிறு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்;
(g) வகுத்துரைக்கப்படலாகும் அளவை விட அதிகமாக
நீரை நிலத்திலிருந்து எடுக்காத கடைகள் மற்றும் நிறுவனங்கள்;
(h) தொண்டு நிறுவனங்கள், மைய மற்றும் மாநில அரசின் அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் நிருவாக அலுவலகங்கள், ஆயுதப் படை அமைப்புகள் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படை நிறுவனம்;
(i) வகுத்துரைக்கப்படலாகும் அளவை விட அதிகமாக
நிலத்திலிருந்து நீரை எடுக்காத இதர வகைகள்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 19அனுமதியினை
இடை நிறுத்துதல்
அல்லது இரத்து
செய்தல்.
18. (1) இந்தச் சட்டத்தின் கீழ் அனுமதி ஒன்றை வழங்கிய செயல்படுத்தும் அதிகாரஅமைப்பானது, தானாகவோ அல்லது தன்னிடம் முன்னிடப்பட்ட அல்லது தன்னிடம் குறித்துரைக்கப்பட்ட விண்ணப்பத்தின் பேரிலோ,
(a) உயிர்வாழ்வதற்கான நீர் இருப்பை உறுதி செய்வதற்கோ அல்லது உயிருக்கு, பொது சுகாதாரத்திற்கு அல்லது சுற்றுச்சூழல் அமைப்புக்கு மீளமுடியாத தீங்கு விளைவிப்பதைத் தடுப்பதற்கோ, அத்தகைய அனுமதியை இடைநிறுத்துவது அல்லது இரத்து செய்வது அவசியமானதாக இருப்பின்; அல்லது
(b) அனுமதி யாருக்கு வழங்கப்பட்டதோ, அந்த நபர், அனுமதி வழங்கப்பட்ட, அந்த வரையறைகளையும் நிபந்தனைகளையும் மீறி அல்லது இந்தச் சட்டத்தின் வகைமுறைகளை மீறி செயல்பட்டிருக்கிறார்,
என மனநிறைவடைந்தால் அத்தகைய அனுமதியை
இடைநிறுத்தலாம் அல்லது இரத்து செய்யலாம்.
(2) தொடர்புடைய நபருக்கு விளக்கமளிப்பதற்கான நியாயமான வாய்ப்பொன்றை வழங்காமல், அனுமதி எதுவும் இடைநிறுத்தப்படுதலோ அல்லது இரத்து செய்யப்படுதலோ கூடாது.
17 மற்றும் 18 ஆம்
பிரிவுகளின்
ஆணைக்
கெதிரான
மேல்முறையீடு.
19. (1) 17 மற்றும் 18 ஆம் பிரிவுகளின் கீழ் செயல்படுத்தும் அதிகாரஅமைப்பால் வெளியிடப்பட்ட ஆணை, முடிவு அல்லது பணிப்புரை எதனாலும் பாதிப்படைந்த நபர் எவரும், அத்தகைய ஆணை, முடிவு அல்லது பணிப்புரையைப் பெற்ற நாளிலிருந்து ஒரு மாத கால அளவிற்குள், அரசினால், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கப்படலாகும் மேல்முறையீட்டு அதிகாரஅமைப்பிடம் மேல்முறையீடு ஒன்றை வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய வடிவிலும் அத்தகைய முறையிலும் தாக்கல் செய்யலாம்.
(2) (1) ஆம் உட்பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்ட காலஅளவு கழிவுற்ற பின்பு, அத்தகைய மேல்முறையீடானது எடுத்துக் கொள்ளப்படுதல் கூடாது.
வரம்புரையாக, மேல்முறையீட்டு அதிகாரஅமைப்பானது, மேல்முறையீட்டாளர் குறித்த நேரத்தில் மேல்முறையீடு செய்யாததற்குப் போதுமான காரணம் இருப்பதாக மனநிறைவு கொண்டால், அது மேல்முறையீடு செய்வதற்கு ஒரு மாதத்திற்கு மிகாத கூடுதல் கால அளவை அதன் உளத்தேர்வின்படி அனுமதிக்கலாம்.
(3) மேல்முறையீட்டு அதிகார அமைப்பானது, அதன் அதிகாரங்களைச் செயல்படுத்தும் வரை, அது பொருத்தமானதெனக் கருதலாகும் அத்தகைய ஆணைகளைப் பிறப்பிக்கலாம்.
(4) அத்தகைய மேல்முறையீடு எதனையும் பெற்றதின் பேரில்,
மேல்முறையீட்டு அதிகார அமைப்பானது,
(i) தரப்பினர்களுக்கு விளக்கங்களை முன்வைப்பதற்கான
வாய்ப்பை வழங்கிய பின்னர்;
(ii) தேவைப்படின், தமக்கு பொருத்தமெனக் கருதுகிற
அத்தகைய விசாரணையை மேற்கொண்ட பின்பு; மற்றும்
(iii) வழக்கின் அனைத்து சூழ்நிலைகளையும் கருத்திற்
கொண்ட பின்பு;
மேல்முறையீட்டைப் பெற்ற நாளிலிருந்து இரண்டு மாத்திற்குள், சரியானதும் நியாயமானதுமெனக் கருதுகிற அத்தகைய ஆணையைப் பிறப்பித்தல் வேண்டும்.
20 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுநீரை உறிஞ்சி
எடுப்பதற்கான
கட்டணவிகிதம்.
20. (1) அதிகார அமைப்பானது வணிக ரீதியான நீர் பயனாளர்கள், நீரைப் உறிஞ்சி எடுப்பதற்கான கட்டண விகிதத்தை, அரசின் ஒப்புதலுடன், அவ்வப்போது நிர்ணயித்தலும் திருத்துதலும் வேண்டும்.
(2) அதிகார அமைப்பானது (1) ஆம் உட்பிரிவின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட அல்லது திருத்தப்பட்ட கட்டண விகிதத்தை தீர்மானிப்பதற்காக, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காரணிகளால் வழி நடத்தப்படுதல் வேண்டும்.
நிலத்தடி நீர்
பாதுகாப்பு
மண்டலங்கள்.
21. (1) அதிகார அமைப்பானது, அவ்வப்போது செயல்படுத்தும் அதிகார அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், மாநிலத்தில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில், நிலத்தடி நீர் பாதுகாப்புப் பகுதிகளை எல்லை வரையறை செய்து அறிவிக்க அரசிற்குப் பரிந்துரை செய்தல் வேண்டும்.
(2) அதிகார அமைப்பின் பரிந்துரையின் பேரில்,
(a) மிகச் சமீபத்திய மற்றும் மாறுபடும் நிலத்தடி நீர் வள
மதிப்பீடுகள்;
(b) தொடர்புடைய பகுதிக்குப் பொருந்தக்கூடிய நீர்வள
மேலாண்மைத் திட்டங்கள்;
(c) நீர்க்கொள் படுகையின் தன்மை, நடப்பிலுள்ள பயன்பாடுகள் மற்றும் பயனர்கள், நிலத்தடி நீர் இருப்பு, மற்றும் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத் தாக்கங்கள்;
(d) நிலத்தடி நீர் மாசடைந்த பகுதிகளைப் பாதுகாத்தல்
மற்றும் சீரமைத்தல்;
(e) நீர்க்கொள் படுகை பகுதிகளை, குறிப்பாக நீர்மீளேற்ற மண்டலங்களை, இயற்கைச் சரிவு போன்ற அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதற்காகவும் நிலத்தடிநீரைப் பாதுகாக்கும் மற்றும் காக்கும் நோக்கத்திற்காகவும், மாநிலத்தில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் பாதுகாப்புப் பகுதிகளை அரசானது எல்லை வரையறை செய்து, தமிழ்நாடு தமிழ்நாடு அரசிதழில்அரசிதழில் அறிவித்தல் வேண்டும்.
(3) நிலத்தடி நீர் பாதுகாப்புப் பகுதிக்குள், நிலத்தடி நீரின் அளவு அல்லது அதன் தரத்தைப் பாதிக்கும் நடவடிக்கைகள், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் தடைசெய்யப்படுதல், கட்டுப்படுத்தப்படுதல் அல்லது ஒழுங்குமுறைப்படுத்தப்படுதல் வேண்டும்.
(4) நிலத்தடி நீர் பாதுகாப்புப் பகுதிகள் தொடர்பான விதிகள், தொடர்புடைய செயல்படுத்தும் அதிகார அமைப்புகளால் ஏற்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு, செயலாக்கப்படுதல் வேண்டும்.
ஆறுகள்
மற்றும் வெள்ளப்
பெருக்குச்
சமவெளிகளின்
கள ஆய்வுகள்
22. (1) அதிகார அமைப்பானது, செயல்படுத்தும் அதிகார அமைப்புகளுடன் ஒருங்கிணைந்தும் கலந்தாலோசனை செய்தும், அது அமைத்துருவாக்கப்பட்ட நாளிலிருந்து வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலத்திற்குள், ஆறுகள் மற்றும் வெள்ளப்பெருக்குச் சமவெளிகளின் களஆய்வுகளை மேற்கொள்ளச் செய்தல் வேண்டும்.
மற்றும்
வரைபடமிடல்.
(2) வெள்ளப்பெருக்குச் சமவெளி மண்டலங்களும் நதிப் பாதுகாப்பு மண்டலங்களும் வெள்ள அபாயத்தை நிர்வகிப்பதற்கும் இயற்கைச் சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்குமான முக்கியப் பகுதிகளாகும். அவை, தொடர்புடைய செயல்படுத்தும் அதிகார அமைப்புகளால் வகுத்துரைக்கப்படலாகிறவாறு அத்தகைய முறையில் பாதுகாக்கப்படுதலும் காக்கப்படுதலும் வேண்டும்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 21வெள்ளப் பெருக்குச்
சமவெளி
மண்டலங்கள்.
23. (1) அதிகார அமைப்பானது, அவ்வப்போது செயல்படுத்தும் அதிகார அமைப்புகளின் அறிவிக்கையின் அடிப்படையில், வெள்ளப் பெருக்குச் சமவெளி மண்டலங்களை எல்லை வரையறை செய்வதற்கும், அவற்றில் தடைசெய்யப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளின் பட்டியலை நிர்ணயிப்பதற்கும், அரசிற்குப் பரிந்துரைகளை வழங்குதல் வேண்டும்.
(2) ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், அரசானது
தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கையின் மூலம்,-
(a) வெள்ளங்கள் ஏற்படும் இடைவெளிகளுக்கு ஏற்ப, அவை பொருத்தமெனக் கருதும் வெள்ளப்பெருக்குச் சமவெளிகளை அல்லது அதன் எந்தப் பகுதியையும், வெள்ளப் பெருக்குச் சமவெளி மண்டலங்களாக எல்லை வரையறை செய்து, ஒவ்வொரு வெள்ளப்பெருக்குச் சமவெளி மண்டலத்திற்கும் அதிகபட்ச வெள்ள மட்டத்தைக் குறிக்கலாம்;
(b) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் வெள்ளப் பெருக்குச் சமவெளி மண்டலங்களில் தடைசெய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட அல்லது ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளின் பட்டியலை, குறிப்பிடலாம்;
(3) வெள்ளப் பெருக்குச் சமவெளி மண்டலங்கள் அறிவிக்கை செய்யப்பட்ட பின்பு, அதன் எல்லைகள், தொடர்புடைய செயல்படுத்தும் அதிகார அமைப்புகளால், எல்லைக் கற்கள் அல்லது பிற பொருத்தமான அடையாளங்களால் குறிக்கப்படுதல் வேண்டும்.
(4) வெள்ளப் பெருக்குச் சமவெளி மண்டலங்கள் தொடர்பான விதிகளானவை, தொடர்புடைய செயல்படுத்தும் அதிகார அமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, செயல்படுத்தப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டும்.
நதிப் பாதுகாப்பு
மண்டலங்கள்.
24. (1) அதிகார அமைப்பானது, அவ்வப்போது, செயல்படுத்தும் அதிகார அமைப்புகளின் அறிக்கையின் அடிப்படையில், நதிப் பாதுகாப்பு மண்டலங்களின் எல்லைகளை வரையறுப்பதற்கும், அவற்றில் தடைசெய்யப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளின் பட்டியலையும், அரசிற்குப் பரிந்துரைகளைச் செய்தல் வேண்டும்.
(2) அதிகார அமைப்பின் பரிந்துரையின் பேரில், தமிழ்நாடு தமிழ்நாடு அரசிதழில்,அரசிதழில், அறிவிக்கை மூலம் அரசானது பின்வருவனவற்றைச் செய்யலாம்—
(a) நதிப் பாதுகாப்பு மண்டலங்களின் எல்லைகளை வரையறை செய்தல் மற்றும் ஆற்று வளங்களின் பாரம்பரியப் பயன்பாடுகள் மற்றும் வட்டாரக் குழுக்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரங்களைக் கருத்தில் கொண்டு, குறிப்பிடப்படலாகும் அத்தகைய நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அத்தகைய மண்டலங்களில் சில நடவடிக்கைகளைத் தொடர அனுமதித்தல்;
(b) நதிப் பாதுகாப்பு மண்டலத்தில் தடைசெய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட அல்லது ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் குறிப்பிடுதல்.
(3) நதிப் பாதுகாப்பு மண்டலங்கள் தொடர்பான விதிகளானவை தொடர்புடைய செயல்படுத்தும் அதிகார அமைப்புகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, செயல்படுத்தப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டும்.
22 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுநீர்வள மேலாண்மை
மற்றும் பெருக்கம்.
25. (1) குழுக்களும் செயல்படுத்தும் அதிகார அமைப்புகளும், இந்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒழுங்குமுறைவிதிகள், வழிகாட்டு நெறிகள் மற்றும் திட்டங்களின் படி நீர் வள மேலாண்மை மற்றும் பெருக்கப் பணிகளைச் செயல்படுத்துதல் வேண்டும், மேலும் அவர்கள் பின் வருவனவற்றைச் செய்தல் வேண்டும்:-
(a) இந்தச் சட்டத்திற்கு இணங்கியவாறு, மாநில நீர் வள மேலாண்மைத் திட்டம் மற்றும் மாவட்ட நீர் வள மேலாண்மைத் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட கூறுகளைச் செயல்படுத்துதல்;
தமிழ்நாடு நீர்
வளங்கள்
மேலாண்மைத்
(b) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய வடிவத்திலும் அத்தகைய முறையிலும் செயற்கை நீரேற்ற செறிவூட்டல் கட்டமைப்புகளை கட்டுவதற்குப் பொருத்தமான இடங்களைக் கண்டறிதல்;
திட்டம்.
(c) மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீரின் ஒருங்கிணைந்த
பயன்பாட்டை பின்பற்றுதல்;
(d) நீரின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிகள் மூலம் நீர் சேமிப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், மாநிலத்தில் உள்ள நீர் ஆதாரங்களில் இருந்து வணிக நீர் பயனர்களால் நீர் உறிஞ்சப்படுவதை அல்லது நீரைக் கொண்டு செல்லுவதைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரின் பயன்பாட்டை ஊக்குவித்தல்;
மாவட்ட நீர் வள
மேலாண்மைத்
திட்டங்கள்.
(e) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் தோட்டப் பயன்பாட்டிற்கும், நீர் அதிகம் தேவைப்படும் தொழிற்சாலைகளில் குளிர்விக்கும் நோக்கங்களுக்காகவும் மற்றும் வாயிற்காப்பு குடியிருப்புப் பகுதிகளிலும், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்தல்;
(f) வகுத்துரைக்கப்படலாகிற கடலோர நீர்நிலைகளில் கடல் நீர் ஊடுருவலைத் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிகளை வகுத்தல்;
(2) நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீரை உகந்த முறையில் பயன்படுத்துவதையும், கடல் நீர் ஊடுருவலைத் தடுக்கும் நீரியல் தடுப்புச் சுவரை உருவாக்குவதையும் உறுதி செய்யும் நோக்கில், அரசானது, செயற்கைமுறை நீர்செறிவூட்டல் திட்டங்களை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை வெளியிட வேண்டும்.
தமிழ்நாடு நீர் வள
மேலாண்மைத்
திட்டம்.
26. (1) அதிகார அமைப்பானது, அது நிறுவப்பட்ட நாளிலிருந்து வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலத்திற்குள், தமிழ்நாடு நீர் வளங்கள் மேலாண்மைத் திட்டம் என்று அழைக்கப்படும் மாநில நீர் வளங்கள் மேலாண்மைத் திட்டத்தைத் தயாரித்தல் வேண்டும்.
(2) தமிழ்நாடு நீர் வளங்கள் மேலாண்மைத் திட்டமானது, மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் நீரைப் பாதுகாத்து வைக்கிற ஒட்டுமொத்த நோக்கத்தைக் கொண்டிருத்தல் வேண்டும்.
(3) தமிழ்நாடு நீர் வளங்கள் மேலாண்மைத் திட்டமானது, அதிகார அமைப்பில் வரையறுக்கப்பட்டவாறான நிபந்தனைகளின் அடிப்படையில் தயாரிக்கப்படுதல் வேண்டும். மேலும், அது பின்வருவனவற்றை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும், ஆனால் அவை மட்டுமின்றி:–
(a) மாநிலம் முழுமைக்குமான நீர் பாதுகாப்புத் திட்டம்;
(b) மாநிலம் முழுமைக்குமான நீர் கணக்கீட்டுத் திட்டம்;
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 23(c) மாவட்ட நீர் வளங்கள் மேலாண்மைத் திட்டங்களைத் தயாரிப்பதற்கும், அவற்றைச் செயல்படுத்துவதற்குமான உள்ளீடுகளையும் வழிகாட்டு நெறிகளையும் வழங்குகின்ற நீர் வளங்கள் மேலாண்மைக் குறித்த மாநில அளவிலான முதன்மைத் திட்டம்;
(d) வெள்ளப் பெருக்கினால் ஏற்படும் அதிகப்படியான வெள்ள நீரை நிர்வகிப்பதற்கும், வறட்சியால் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் ஆறுகள், குளங்கள் மற்றும் பிற நீர்நிலைகளை ஒன்றோடொன்று இணைப்பது குறித்த முன்மொழிவுகள்;
(e) நிலத்தடி நீர் மற்றும் அதன் வளங்களை நிர்வகித்தல்,
பாதுகாத்தல் மற்றும் காப்பதற்கான திட்டங்கள்;
(f) நிலத்தடி நீர் பாதுகாப்பு மண்டலங்களை வரையறுத்தல் மற்றும் நிலத்தடி நீர், அதன் வளங்கள் மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு மண்டலங்களை நிர்வகித்தல், பாதுகாத்தல் மற்றும் காப்பதற்கான திட்டங்களை வகுத்தல்;
(g) கடலில் கலக்கும் ஆற்று நீர் மற்றும் மழை நீரை
நிர்வகித்தல் மற்றும் பயன்படுத்துதல்,
ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.
(4) தமிழ்நாடு நீர் வள மேலாண்மைத் திட்டமானது, மாவட்ட நீர் வள மேலாண்மைத் திட்டங்களைத் தயாரிப்பதற்கு அடிப்படையாக இருத்தல் வேண்டும். இது மாநில நீர் வள மேலாண்மைத் திட்டத்தின் உட்தொகுதியாக இருத்தல் வேண்டும். மேலும் மாநிலத் திட்டத்தின் கூறுகளை மாவட்ட மற்றும் கிராம அளவில் செயல்படுத்துவதற்கான விவரங்களை அவை கொண்டிருத்தல் வேண்டும்.
(5) அதிகாரஅமைப்பானது, தமிழ்நாடு நீர் வள மேலாண்மைத் திட்டத்தைத் தயாரிப்பதற்காக, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் அனைத்துச் செயல்படுத்தும் அதிகாரஅமைப்புகள் மற்றும் தொடர்புடைய பங்குதாரர்களுடன், கலந்தாலோசித்தல் வேண்டும்.
(6) தமிழ்நாடு நீர் வள மேலாண்மைத் திட்டமானது, பதினைந்து ஆண்டுகள் காலத்திற்கு தயாரிக்கப்படுதல் வேண்டும். மேலும் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு கட்டமாக செயல்படுத்தும் திட்டத்தையும் கொண்டிருத்தல் வேண்டும்.
(7) தமிழ்நாடு நீர் வள மேலாண்மைத் திட்டமானது, இந்தச் சட்டத்தின் விதிமுறைகளின்கீழ் உருவாக்கப்படவுள்ள நீர் கணக்கீட்டுத் திட்டம், வெள்ள அபாய மேலாண்மைத் திட்டம் மற்றும் பிற ஒழுங்குமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிகளைத் தயாரிப்பதற்குத் தேவையான உள்ளீடுகளை வழங்குதல் வேண்டும்.
(8) தமிழ்நாடு நீர் வள மேலாண்மைத் திட்டமானது, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலத்திற்குள் அரசின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
(9) தமிழ்நாடு நீர் வள மேலாண்மைத் திட்டம் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டவுடன், கூடிய விரைவில், ஆனால் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலத்திற்கு பின்பு அல்லாமல், கூறப்பட்ட திட்டத்தை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடுவதற்கு அரசானது, அதிகார அமைப்பிற்கு ஒப்புதல் அளித்தல் வேண்டும்.
24 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுமாவட்ட நீர் வள
மேலாண்மைத்
திட்டங்கள்.
27. (1) தமிழ்நாடு நீர் வள மேலாண்மைத் திட்டம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசிதழில்அரசிதழில் வெளியிடப்பட்ட பின்பு, ஒவ்வொரு குழுவும், மாநில நீர் வள மேலாண்மைத் திட்டத்திற்கு இணங்கியவாறும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையிலும், தொடர்புடைய மாவட்டத்திற்கான மாவட்ட நீர் வள மேலாண்மைத் திட்டத்தைத் தயாரித்து, அதனை மாவட்ட மற்றும் கிராம அளவில் நடைமுறைப்படுத்துவதற்காக பதினைந்து ஆண்டுகளுக்கு செயல்படுத்துவதற்கும் பரிந்துரையைச் செய்தல் வேண்டும். மேலும், அத்திட்டம் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு கட்டமாக செயல்படுத்தும் திட்டத்தையும் கொண்டிருத்தல் வேண்டும்.
(2) மாவட்ட நீர் வள மேலாண்மைத் திட்டமானது, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலத்திற்குள் ஒப்புதலுக்காக அதிகாரஅமைப்பிடம் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
(3) மாவட்ட நீர் வள மேலாண்மைத் திட்டமானது அதிகார அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்டவுடன், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலத்திற்கு மிகாமல், கூடிய விரைவில் தொடர்புடைய குழுக்களுக்கு அதிகாரஅமைப்பானது அத்திட்டத்தை மாவட்ட அரசிதழில் வெளியிடுவதற்கு ஒப்புதல் வழங்குதல் வேண்டும்.
நீர் வள
மேலாண்மைத்
திட்டங்களின்
மதிப்பாய்வு.
28. (1) இந்தச் சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட அனைத்து நீர் வளங்கள் மேலாண்மைத் திட்டங்களும், காலநிலை, புவியியல் அல்லது புவி-நீரியியல் நிகழ்வுகள் காரணமாக அவற்றை முன்கூட்டியே மதிப்பாய்வு செய்து திருத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டாலன்றி, அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து பதினைந்து ஆண்டுகளுக்குச் செல்லுபடியாதலும் கட்டுப்படுத்தும் தன்மையுடையதாக இருத்தலும் வேண்டும்:
வரம்புரையாக, அரசானது தேவையெனக் கருதினால், மாநில நீர் வளங்கள் மேலாண்மைத் திட்டத்தை, அரசால் குறிப்பிடப்படக்கூடிய அத்தகைய காலத்திற்குள் மதிப்பாய்வு செய்யுமாறு அதிகாரஅமைப்பைப் பணிக்கலாம்.
(2) அனைத்து நீர் வளங்கள் மேலாண்மைத் திட்டங்களையும் மதிப்பாய்வு செய்யும் செயல்முறையானது, அவை காலாவதியாவதற்கு முன்பு, வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய நேரத்தில் தொடங்கப்படுதல் வேண்டும் மற்றும் திட்டக் காலம் முடிவடைவதற்குள் நிறைவு செய்யப்படுதல் வேண்டும்.
அத்தியாயம்-V.அத்தியாயம்-V.
மீறுகைகளுக்கான தண்டத்தொகை.மீறுகைகளுக்கான தண்டத்தொகை.
மீறுகைகளுக்கான
தண்டத்தொகை.
29. (1) அனுமதி இன்றி நீரை எடுத்துக்கொள்ளும் அல்லது கொண்டு செல்லும் எந்தவொரு வணிக நீர் பயனாளரும், அவ்வாறு எடுத்துக்கொள்ளப்பட்ட அல்லது கொண்டு செல்லப்பட்ட நீரின் அளவிற்காக, 20 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் இருபது மடங்கு அல்லது இருபதாயிரம் ரூபாய், இவற்றில் எது அதிகமோ அந்த அளவிற்கான தண்டத்தொகைக்கு உள்ளாதல் வேண்டும். மேலும், இரண்டாவது அல்லது அதற்குப் பிந்தைய மீறுகை தொடருகின்ற நேர்வில், அவ்வாறு எடுத்துக்கொள்ளப்பட்ட அல்லது கொண்டு செல்லப்பட்ட நீரின் அளவிற்காக, கூறப்பட்ட கட்டணத்தின் நாற்பது மடங்கு அல்லது நாற்பதாயிரம் ரூபாய், இவற்றில் எது அதிகமோ அந்த அளவிற்கான தண்டத்தொகைக்கு உள்ளாதல் வேண்டும்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 25(2) அனுமதியின் வரையறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறி, நீரை எடுத்துக்கொள்ளும் அல்லது கொண்டு செல்லும் எந்தவொரு வணிக நீர் பயனாளரும், அவ்வாறு வரையறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறி எடுத்துக்கொள்ளப்பட்ட அல்லது கொண்டு செல்லப்பட்ட நீரின் அளவிற்காக, 20 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் பத்து மடங்கு அல்லது பத்தாயிரம் ரூபாய், இவற்றில் எது அதிகமோ அந்த அளவிற்கான தண்டத்தொகைக்கு உள்ளாதல் வேண்டும்; மேலும், இரண்டாவது அல்லது அதற்குப் பிந்தைய மீறுகை தொடருகின்ற நேர்வில், அவ்வாறு எடுத்துக்கொள்ளப்பட்ட அல்லது கொண்டு செல்லப்பட்ட நீரின் அளவிற்காக கூறப்பட்ட கட்டணத்தின் இருபது மடங்கு அல்லது இருபதாயிரம் ரூபாய், இவற்றில் எது அதிகமோ அந்த அளவிற்கான தண்டத்தொகைக்கு உள்ளாதல் வேண்டும்.
(3) இந்தச் சட்டத்தின் பிற எந்த வகைமுறைகளையோ அல்லது அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளையோ மீறுகின்ற எந்த நபரும், பத்தாயிரம் ரூபாய்க்கு மிகாத தண்டத்தொகைக்கு உள்ளாதல் வேண்டும்; மேலும், இரண்டாவது அல்லது அதற்குப் பிந்தைய மீறுகை தொடருகின்ற நேர்வில், இருபதாயிரம் ரூபாய்க்கு மிகாத தண்டத்தொகைக்கு உள்ளாதல் வேண்டும்.
(4) எந்தவொரு நபரும், எந்தவொரு நீர் வளத்தையும் மாசுபடுத்தினாலோ அல்லது அசுத்தப்படுத்தினாலோ அல்லது வேறு எந்த சுற்றுச்சூழல் சேதத்தையும் ஏற்படுத்தினாலோ அத்தகைய சேதத்தை சீர் செய்வதற்கான செலவுத் தொகைக்கு அவர் பொறுப்பாதல் வேண்டும்.
நிறுமங்களால்
செய்யப்படும்
மீறுகை.
30. (1) இச்சட்டத்தின் வகைமுறைகள் எதனையும் அல்லது அதன் கீழ் செய்யப்பட்ட விதிகள் எதனையும், ஒரு நிறுமம் மீறுகை செய்கிறவிடத்து அம்மீறுகை செய்யப்பட்டபோது, அந்நிறுமத்தின் அலுவல் நடைபெறுவதற்கு அந்நிறுமத்தின் பொறுப்பிலிருந்த மற்றும் பொறுப்பைக்கொண்டிருந்த ஒவ்வொருவரும், மற்றும் அந்நிறுமமும், அம்மீறுகை செய்திருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும் மற்றும் இந்தச் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்ட தண்டத்தொகைக்கு உள்ளாதல் வேண்டும்:
வரம்புரையாக, இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும், அத்தகைய நபர் எவரும், அம்மீறுகை தமக்குத் தெரியாமலேயே செய்யப்பட்டிருப்பதாக அல்லது அத்தகைய மீறுகையைத் தடுக்க தம்மால் இயன்ற அனைத்தையும் செய்ததாக மெய்ப்பித்தால், இச்சட்டத்தின் கீழ் வகைசெய்யப்பட்டுள்ள எந்தவிதமான தண்டத்தொகையும் அத்தகைய நபருக்கு விதிக்கப்படுதல் ஆகாது.
(2) (1) ஆம் உட்பிரிவில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், இச்சட்டத்தின்கீழ் மீறுகை எதுவும் நிறுமத்தால் செய்யப்பட்டிருக்குமிடத்து, அந்த மீறுகையானது, அந்நிறுமத்தின் இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது பிற அலுவலர் எவரின் அனுமதியுடன் அல்லது உடந்தையுடன் அல்லது அவருடைய கவனமின்மை காரணமாக செய்யப்பட்டிருப்பதாக மெய்ப்பிக்கப்பட்டால், அத்தகைய இயக்குநர், மேலாளர், செயலாளர், அல்லது பிற அலுவலர் அம்மீறுகையைச் செய்திருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும் மற்றும் இந்தச் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்ட தண்டத்தொகைக்கு உள்ளாதல் வேண்டும்.
விளக்கம்.விளக்கம்.- இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக,-
(a) "நிறுமம்" என்பது, ஒரு கூட்டு நிறுவனம் என்று பொருள்படும் மற்றும் ஒரு நிறுவகம், பொறுப்புக்கட்டளை, சங்கம் அல்லது பிற தனி நபர்களின் கழகத்தை உள்ளடக்கும்;மற்றும்26 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு (b) "இயக்குநர்" என்பவர்,
(i) ஒரு நிறுவகத்தைப் பொறுத்தவரையில், நிறுவகத்தில்
ஒரு பங்குதாரர் ஆவார்.
(ii) சங்கம் , ஒரு பொறுப்புக்கட்டளை அல்லது பிற தனி நபர்களின் கழகம் தொடர்பாக சங்கம் , பொறுப்புக்கட்டனை அல்லது பிற கழகத்தின் விதிகளின்படி நேர்விற்கேற்ப, அந்த சங்கம் , பொறுப்புக்கட்டளை அல்லது பிற கழகத்தின் அலுவல்களை நிர்வகித்து வருவது எந்த நபரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறதோ, அந்த நபர் என்று பொருள்படும் .
தீர்ப்பளித்தல். 31. (1) அரசானது, இந்தச் சட்டத்தின்கீழ் மீறுகைகளைத் தீர்க்கும் மற்றும் தண்டத்தொகைகளைத் தீர்மானிக்கும் நோக்கத்திற்காக, தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கையின் மூலம், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில், விசாரணையை மேற்கொண்டு மற்றும் தண்டத்தொகையை விதிப்பதற்கு, அலுவலர் ஒருவரைத் தீர்ப்பளிக்கும் அலுவலராக நியமனம் செய்யலாம்:
வரம்புரையாக, அரசானது, தேவைப்படலாகிறவாறு, பல
தீர்ப்பளிக்கும் அலுவலர்களை நியமனம் செய்யலாம்.
(2) தீர்ப்பளிக்கும் அலுவலரின் கருத்தில், விசாரணையின் பொருட்கூறுகளுக்குப் பயனுள்ளதாக அல்லது அதற்கு தொடர்புடையதாக இருக்கும் எந்தவொரு ஆவணத்தையும் சமர்ப்பிக்குமாறு அல்லது சாட்சியம் அளிக்க அல்லது வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளை நன்கு அறிந்த நபரெவரையும், தீர்ப்பளிக்கும் அலுவலர், அழைப்பாணை விடுத்து, வருகை தருமாறு கட்டாயப்படுத்தலாம் மற்றும் அத்தகைய விசாரணையின் பேரில், தொடர்புடைய நபர், இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் எதற்கும் இணங்கத் தவறியுள்ளார் என அவர் மனநிறைவடைந்தார் எனில், அவர் பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய தண்டத்தொகையை விதிக்கலாம்:
வரம்புரையாக, அத்தகைய தண்டத்தொகை எதுவும், விளக்கமளிப்பதற்கான நியாயமான வாய்ப்பொன்றை வழங்காமல் விதிக்கப்படுதல் ஆகாது.
மேல்முறையீடு. 32. (1) 31ஆம் பிரிவின்கீழ் தீர்ப்பளிக்கும் அலுவலரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையினால் இடருற்ற நபரெவரும், ஆணை பெறப்பட்ட தேதியிலிருந்து அறுபது நாட்களுக்குள், தமிழ்நாடு அரசிதழில் அரசால் அறிவிக்கை செய்யப்படலாகிற மேல்முறையீட்டு அலுவலரிடம், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் மேல்முறையீடு செய்யலாம்:
வரம்புரையாக, மேல்முறையீட்டாளர், அந்தக் காலஅளவிற்குள் மேல்முறையீடு செய்யாமலிருப்பதற்குப் போதிய காரணம் இருந்திருக்கிறது என மேல்முறையீட்டு அலுவலரை மனநிறைவடையச் செய்தால், அறுபது நாள் காலஅளவு கழிந்த பின்பு மேல்முறையீடு ஏற்றுக்கொள்ளப்படலாம்.
(2) மேல்முறையீட்டு அலுவலரானவர், மேல்முறையீட்டின் தரப்பினருக்கு விளக்கமளிப்பதற்கான வாய்பொன்றை வழங்கிய பின்பு, அவர் பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய ஆணையைப் பிறப்பிக்கலாம்.
(3) மேல்முறையீட்டு அலுவலரானவர், மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்ட தேதியிலிருந்து அறுபது நாட்களுக்குள் அதனை முடித்து வைத்தல் வேண்டும்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 27வசூலித்தல்.
33. நேர்விற்கேற்ப, 31 ஆம் பிரிவு அல்லது 32 ஆம் பிரிவின்கீழ் தண்டத்தொகை விதிக்கப்பட்டிருப்பின், அது வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் வைப்பீடு செய்யப்படவில்லையெனில், செலுத்த வேண்டிய தொகையானது, தமிழ்நாடு வருவாய் வசூல் சட்டம் 1864–ன் படி நிலவருவாயின் நிலுவைத் தொகையைப் போன்று வசூலித்தல் வேண்டும்.
பிற சட்டங்களின் கீழ்
குற்ற வழக்குத்
தொடரப்படுவதற்கு
தடை ஏதுமில்லை.
34. இந்தச் சட்டத்தில் அடங்கியுள்ள எதுவும், இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு மீறுகையாக அமைகின்ற ஏதேனும் ஒரு செயலுக்கோ அல்லது விட்டுவிடுதலுக்கோ பிற சட்டம் எதனின் கீழும், நபர் எவரும் குற்ற வழக்குத் தொடரப்படுவதிலிருந்து தடுப்பதாக, கருதப்படுதல் ஆகாது.
அத்தியாயம்-VI.அத்தியாயம்-VI.
கணக்குகளும் தணிக்கையும்.கணக்குகளும் தணிக்கையும்.
அரசு மானியங்கள்.
35. அரசானது, இந்தச் சட்டத்தின் கீழ், அதிகார அமைப்பு, தனது பணிகளைச் செய்வதற்கும் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் தேவையானதாக கருதலாகிற மானியங்களையும் முன்பணங்களையும் அதற்கு வழங்கலாம்.
அதிகார அமைப்பின்
வரவு-செலவுத்
திட்டம்.
36. அதிகார அமைப்பானது, ஒவ்வொரு நிதியாண்டிலும், வகுத்துரைக்கப்படலாகிற வடிவிலும் நேரத்திலும், அடுத்த நிதியாண்டிற்கான தனது வரவு-செலவுத் திட்டத்தைத் தயாரித்து, அதில் அதிகார அமைப்பின் மதிப்பிடப்பட்ட வரவுகள் மற்றும் செலவினங்களைக் காட்டி, அதனை அரசிற்கு அனுப்புதல் வேண்டும்.
கணக்குகளும்
தணிக்கையும்.
37. (1) அதிகார அமைப்பின் கணக்குகள் வகுத்துரைக்கப்படலாகும், அத்தகைய வடிவிலும் அத்தகைய முறையிலும் பேணிவரப்படுதல் வேண்டும்.
(2) அதிகார அமைப்பானது, கணக்குகளின் ஆண்டு விவரவுரையை வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய வடிவிலும் அத்தகைய முறையிலும் தயாரித்தல் வேண்டும்.
(3) அதிகார அமைப்பின் கணக்குகளானவை, இதன் சார்பாக அரசால் நியமிக்கப்படும் தணிக்கையாளரால், ஆண்டுக்கு ஒரு முறையாவது தணிக்கை செய்யப்படுதல் வேண்டும்.
அத்தியாயம்-VII.அத்தியாயம்-VII.
பலவகைப்பட்டவை.பலவகைப்பட்டவை.
பணிப்புரைகளை
வழங்குவதற்கு
அரசுக்குள்ள
அதிகாரம்.
38. அரசானது, அவ்வப்போது இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரண்பாடாக அல்லாத, அவர்கள் பொருத்தமானதெனக் கருதுகிற அத்தகைய பணிப்புரைகளை அதிகார அமைப்பிற்குப் பிறப்பிக்கலாம் மற்றும் அத்தகைய பணிப்புரைகளுக்கு இணங்கி நடப்பது அதிகார அமைப்பின் கடமையாக இருத்தல் வேண்டும்.
ஒத்தியல்பு
மதிப்பாய்வு.
39. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள், நீர், நீர்வளங்கள் அல்லது நீர்வள மேலாண்மை தொடர்பாக மாநிலத்தில் நடைமுறையில் உள்ள அனைத்துச் சட்டங்கள் அல்லது சட்ட வகைமுறைகள் குறித்து, இந்தச் சட்டத்துடன் அவற்றின் ஒத்தியல்புத் திறனை உறுதி செய்யும் பொருட்டு, அரசானது விரிவான மதிப்பாய்வு மேற்கொள்ளுதல் வேண்டும்.
28 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுவிதிகளைச்
40. (1) அரசு, இந்தச் சட்டத்தின் அனைத்து அல்லது
செய்வற்கான நோக்கங்கள் எதையும் நிறைவேற்றுவதற்காக விதிகளைச் செய்யலாம்.
அரசின்
அதிகாரம்.
(2) (a) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள் அனைத்தும், தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் அவை குறிப்பிட்டதொரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டுமென வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளிலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(b) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட அறிவிக்கைகள் அனைத்தும், அவை குறிப்பிட்டதொரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டுமென வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளிலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(3) 42 ஆம் பிரிவின்கீழ் செய்யப்பட்ட விதி அல்லது அறிவிக்கை அல்லது பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒவ்வொன்றும், அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர், கூடிய விரைவில், சட்டமன்றப் பேரவையில் வைக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர் அல்லது அதனையடுத்த கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்னர் அத்தகைய விதி, அறிவிக்கை அல்லது ஆணை எதிலும் மாறுதல் எதனையும் சட்டமன்றப் பேரவையானது செய்யுமாயின் அல்லது அத்தகைய விதி, அறிவிக்கை அல்லது ஆணை எதுவும் செய்யப்படுதலோ அல்லது பிறப்பிக்கப்படுதலோ கூடாது எனச் சட்டமன்றப் பேரவை முடிவு செய்யுமாயின், அந்த விதி, அறிவிக்கை அல்லது ஆணையானது அதன் பின்னர் அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்திலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது நேர்விற்கேற்ப, நடைமுறைக்கு வராது போதல் வேண்டும்; எனினும் அவ்வாறான மாறுதல் அல்லது நீக்கம் எதுவும், அந்த விதி, அறிவிக்கை அல்லது ஆணையின்படி முன்னரே செய்யப்பட்ட செயல் ஏதொன்றின் செல்லுந்தன்மைக்கும் குந்தகமின்றி இருத்தல் வேண்டும்.
ஒழுங்குமுறை
விதிகளைச்
செய்வதற்கான
அதிகார
அமைப்பின்
41. அதிகார அமைப்பானது, அரசின் முன் அனுமதியுடன், இந்தச் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதிகளுக்கு முரணாயிராத வகையில், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கையின் மூலம், ஒழுங்குமுறை விதிகளைச் செய்யலாம்.
அதிகாரம்.
இடர்ப்பாடுகளை
நீக்குவதற்கான
அதிகாரம்.
42. இந்தச் சட்டத்தின் வகைமுறைகளைச் செயற்படுத்துவதில் இடர்ப்பாடு ஏதேனும் எழுமானால் அரசானது, தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் ஆணையின் வாயிலாக, அந்த இடர்ப்பாட்டை நீக்குவதற்குத் தேவையான அல்லது உகந்ததென அதற்குத் தோன்றுகிற இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத அத்தகைய வகைமுறைகளைச் செய்யலாம்:
வரம்புரையாக, இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து இரண்டாண்டுக் காலஅளவு முடிந்த பின்பு, இந்தப் பிரிவின்கீழ் அத்தகைய ஆணை எதுவும் பிறப்பிக்கப்படுதல் கூடாது.
நல்லெண்ணத்தில்
எடுக்கப்பட்ட
நடவடிக்கைக்குப்
பாதுகாப்பு.
43. இந்தச் சட்டம், விதிகள் அல்லது ஒழுங்குமுறை விதிகளின் படியான எந்தவொரு அதிகாரங்களைச் செயல்படுத்துகையில் அல்லது அவர்களின் அலுவலகக் கடமைகளை ஆற்றுகையில், நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட அல்லது செய்ய கருதப்பட்ட எதனையும் பொறுத்து, அதிகார அமைப்பு, குழு அல்லது செயல்படுத்தும் அதிகாரஅமைப்பின் உறுப்பினர்கள், அலுவலர்கள் அல்லது ஊழியர்கள் எவருக்கும் எதிராக உரிமை வழக்கு, குற்ற வழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கைகள் எதுவும் தொடரப்படுதல் ஆகாது.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 29பிற சட்டங்களுடன்
முரண்படுதல்.
44. (1) இந்தச் சட்டம், மாநிலத்தில் உள்ள நீர், நீர் வளங்கள் அல்லது நீர் வள மேலாண்மை தொடர்பாக நடைமுறையிலுள்ள அல்லது பிற சட்டத்திற்குக் கூடுதலாக இருக்குமேயன்றி, அவற்றை திறக்குறைவு செய்வதாக இருத்தல் கூடாது. மேலும் அத்தகைய பிற அனைத்து சட்டங்களுடனும் இணக்கமாகப் படிக்கப்படுதல் வேண்டும்.
(2) (1) ஆம் உட்பிரிவில் அல்லது மாநிலத்தில் அப்போதைக்கு நடைமுறையில் உள்ள மாநிலச் சட்டம் எதிலும் என்ன அடங்கியிருந்தபோதிலும், இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கும், மாநிலத்தில் உள்ள நீர், நீர் வளங்கள் அல்லது நீர் வள மேலாண்மை தொடர்புடைய மாநிலத்தின் பிற சட்டம் எவற்றுக்கும் இடையே முரண்பாடு ஏற்படுகிறவிடத்து, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் மற்றும் அவை மீதூர்ந்து இயங்கும் செயல்விளைவு கொண்டிருத்தல் வேண்டும்.
ஆண்டறிக்கை.
45. அதிகார அமைப்பானது, ஒவ்வொரு ஆண்டும், அந்த ஆண்டில் தனது செயல்பாடுகள் குறித்த ஓர் அறிக்கையைத் தயார் செய்து, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய வடிவம் மற்றும் அத்தகைய தேதியிலோ அல்லது அதற்கு முன்போ அரசிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.
விலக்களித்தல்.
46. அரசானது, அறிவிக்கையின் வாயிலாக மற்றும் அதில் குறிப்பிடப்பட்ட காரணங்களுக்காக, நீர் பயனாளர் எவரையும், இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதிகள் எதிலிருந்தும் விலக்களிக்கலாம், மேலும் அவர்கள் பொருத்தமானதெனக் கருதும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அதேபோன்ற முறையில் அத்தகைய விலக்கை மாற்றியமைக்கலாம் அல்லது இரத்து செய்யலாம்.
மையச் சட்டம்
அதிகார அமைப்பின் 45/2023.
மற்றும்
குழுக்களின்,
உறுப்பினர்கள்,
அலுவலர்கள்
மற்றும் 47. இச்சட்டத்தின் நடைமுறையில் செயல்படும் போது அல்லது செயல்படுவதாகக் கருதப்படும் போது, அதிகாரஅமைப்பின் ஒவ்வொரு உறுப்பினர், அலுவலர் மற்றும் பணியாளர் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் ஆகியோர் 2023 ஆம் ஆண்டு பாரதீய நியாய சன்ஹிதாவின் 2 ஆம் பிரிவின் (28) ஆம் கூறின் பொருளின்படி பொது ஊழியராகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
பணியாளர்கள்
ஆகியோர் பொது
ஊழியராயிருத்தல்.
தமிழ்நாடு சட்டம்
நீக்கறவு.
48. 1987 ஆம் ஆண்டு சென்னை பெருநகர்ப்பகுதி நிலத்தடிநீர்
27/1987.
(முறைப்படுத்துதல்) சட்டம் இதன்மூலம் நீக்கறவு செய்யப்படுகிறது.
பகுதி - II.பகுதி - II.
1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்திற்கான 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்திற்கான திருத்தம்.திருத்தம்.
தமிழ்நாடு சட்டம்
143-A ஆம் 21/1994.
பிரிவிற்கான
திருத்தம்.
49. 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் 143-A ஆம் பிரிவின், (1) ஆம் உட்பிரிவில் உள்ள இரண்டாம் வரம்புரையானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
பகுதி-III.பகுதி-III.
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்திற்கான திருத்தம்.சட்டத்திற்கான திருத்தம்.
தமிழ்நாடு சட்டம்
164-A ஆம் 9/1999.
பிரிவிற்கான
திருத்தம்.
50. 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் 164-A ஆம் பிரிவின், (1) ஆம் உட்பிரிவில் உள்ள இரண்டாம் வரம்புரையானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
30 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுநோக்கக் காரண விளக்கவுரைநோக்கக் காரண விளக்கவுரை
மக்கள்தொகையின் வேகமான வளர்ச்சி, நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் ஆகியவற்றின் காரணமாக, தமிழ்நாடு மாநிலத்தின் மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர் வளங்களின் மீதான நீர்நெருக்கடி அதிகரித்து வருகிறது. ஒழுங்குமுறைப்படுத்தப்படாத நீர் பிரித்தெடுப்பு மற்றும் முறையற்ற நீர் பயன்பாடு ஆகியன நீர் பாதுகாப்பு மற்றும் நீருடன் தொடர்புடைய சூழலமைப்புகளின் நிலைத்தன்மையை எதிர்மறையாக பாதித்துள்ளது. நிலத்தடி நீர், மேற்பரப்பு நீர், கழிவு நீர் மற்றும் நீர்பிடிப்புப் பகுதி உள்ளடங்களாக அனைத்து வகையான நீர் வள ஆதாரங்களின் நீர் நிருவாகத்திற்குரிய ஒரு முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவையாக உள்ளது.
2. மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர் வளங்களின் நிலையான, சமச்சீரான மற்றும் ஒருங்கிணைந்த மேலாண்மையை உறுதி செய்வதற்கும், மாநிலம் முழுவதும் உள்ள நீர் வளங்களை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும், மேலாண்மை செய்வதற்கும் மற்றும் மேம்படுத்துவதற்கும், 1987 ஆம் ஆண்டு சென்னை பெருநகரப் பகுதி நிலத்தடிநீர் (ஒழுங்குமுறைவிதிகள்) சட்டத்தை நீக்கறவு செய்வதன் மூலம், மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான ஒழுங்குமுறை அமைப்பை உறுதி செய்யும் வகையில், மாநிலத்தின் ஒட்டுமொத்த நீர் வளங்களையும் ஒழுங்குமுறைப்படுத்துவதற்காக, மேலாண்மை செய்வதற்காக மற்றும் பெருக்குவதற்காக, அரசானது, ஒரு விரிவான புதிய சட்டத்தை இயற்றுவதென முடிவு செய்துள்ளது. முன்மொழியப்பட்ட இந்தச் சட்டமானது, தமிழ்நாடு நீர்வள மேலாண்மை ஆணையத்தையும் மாவட்டக் குழுக்களையும் அமைத்துருவாக்குவதற்கும், மாநில மற்றும் மாவட்ட நீர்வள மேலாண்மைத் திட்டங்களை உருவாக்குவதற்கும், தற்போதுள்ள மற்றும் புதிய வணிக நீர் பயனர்களை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கும், அவர்களால் உறிஞ்சி எடுக்கப்படும் நீருக்கான கட்டணத்தை விதிப்பதற்கும் மற்றும் வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளுக்கும் மற்றும் அது தொடர்பான பிற பொருட்பாடுகளுக்கும் வழிவகை செய்கிறது.
3. இந்தச் சட்டமுன்வடிவானது, மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவம் அளிக்க விழைகிறது.
துரைமுருகன், நீர்வளத்துறை அமைச்சர்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 31சட்டமியற்று அதிகார ஒப்படைவு பற்றிய குறிப்பு. சட்டமியற்று அதிகார ஒப்படைவு பற்றிய குறிப்பு.
இந்தச் சட்டமுன்வடிவின் 1(3), 5, 6(4), 8(1), 11(3), 12(1), 13(2), 14(1), 15, 17, 19(1), 20(2), 21, 22, 23, 24, 25, 26, 27, 31, 32, 33, 36, 37, 38, 40, 41, 42, 45 மற்றும் 46 ஆகிய கூறுகளானவை அதில் குறித்துரைக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்காக, நேர்விற்கேற்ப, அறிவிக்கைகளை வெளியிடுவதற்கு, விதிகளை உருவாக்குவதற்கு அல்லது ஆணைகளைப் பிறப்பிப்பதற்கு அரசுக்கு அதிகாரமளிக்கின்றன.
2. ஒப்படைவு செய்யப்பட்ட அதிகாரங்கள் இயல்பானவையேயன்றி தனித்தன்மை வாய்ந்தவையல்ல.
துரைமுருகன், நீர்வளத்துறை அமைச்சர்.
கி. சீனிவாசன்,
முதன்மைச் செயலாளர்.
தலைமைச் செயலகம், சென்னை-9, 2026 ஜனவரி 24.
32 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 332026-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 24-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் 2026-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 24-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண
விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130–ஆம் விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130–ஆம்
விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 7/2026
1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தை மேலும் 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.
இந்திய குடியரசின் எழுபத்து ஆறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள்
மற்றும் (திருத்தச்) சட்டம் என்று வழங்கப்பெறும்.
தொடக்கம்.
(2) இது, 2026 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 06 ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
261-A
21/1994.
பிரிவிற்கான
திருத்தம்.
2. 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 261-A ஆம் பிரிவில், "2026 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 05 ஆம் நாள் வரையில்" எனும் சொற்றொடருக்காக, "2026 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 05 ஆம் நாள் வரையில்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
செல்லுந்தன்மை. 3. முதன்மைச் சட்டத்தில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், 2026 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 06 ஆம் நாளன்றும் அதுமுதற்கொண்டும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளைத் தவிர்த்து, பிற கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியக் குழுக்கள் அல்லது மாவட்ட ஊராட்சிகளின் அதிகாரங்களைச் செலுத்துவதற்கும் அவற்றின் செயற்பணிகளைப் புரிவதற்கும், அரசால் நியமிக்கப்பட்ட தனி அலுவலர்கள், இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான, முதன்மைச் சட்டத்தின் 261-A பிரிவின்கீழ் அத்தகைய தனி அலுவலர்களாக பணி அமர்த்தப்பட்டுள்ளதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்; மற்றும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 06 ஆம் நாள் தொடங்கியும் அதுமுதற்கொண்டும், தமிழ்நாடு அரசிதழில், இந்தச் சட்டம் வெளியிடப்படும் தேதியுடன் முடிவடையும் கால அளவின்போது, கூறப்பட்ட தனி அலுவலர்களால் செய்யப்பட்ட செயல் எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான, முதன்மைச் சட்டத்தின்படி செல்லுந்தன்மையுடன் செய்யப்பட்டிருப்பதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
34 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுநோக்கக் காரண விளக்கவுரை.நோக்கக் காரண விளக்கவுரை.
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) 3 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (c) கூறின் கீழ், 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 12 ஆம் தேதியன்றும் அது முதற்கொண்டும், திருவண்ணாமலை, காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் ஆகிய நகராட்சி மன்றங்களானவை, குறித்த சில கிராம ஊராட்சிகளை உள்ளடக்குவதன் மூலம், மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
2. கூறப்பட்ட கிராம ஊராட்சிகளை நகராட்சிகளுடன் இணைப்பதென்பது, தொடர்புடைய ஊராட்சி ஒன்றியக் குழுக்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளில் உள்ள மொத்த கிராம ஊராட்சிகளின் எண்ணிக்கையை குறைக்க வழிவகுக்கும். மேலும், இது எல்லை மறுவரையறை செயல்முறையின் ஒட்டுமொத்த செயல்முறையிலும், அதன்பின்பு ஆதிதிராவிடர், பழங்குடியினரைச் சார்ந்த நபர்கள் மற்றும் மகளிருக்கான இடங்கள் மற்றும் பதவிகளை ஒதுக்கீடு செய்யும் ஒட்டுமொத்த செயல்முறையிலும், இது பிரதிபலிக்கும். அதேபோன்று, 28 மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை ஒட்டியுள்ள சில கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி, பல மாநகராட்சிகள், நகராட்சி மன்றங்கள் மற்றும் பேரூராட்சிகளை விரிவுபடுத்துவதற்கான முன்மொழிவுகளானது அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளன. இந்த முன்மொழிவுகளை இறுதி செய்தல் மற்றும் விரிவுபடுத்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அறிவிக்கை ஆகியன, கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியக் குழுக்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் எல்லைகளையும் மாற்றியமைக்கும். மறுசீரமைப்பு நடைமுறை முடிவுற்ற பின்பு, கூறப்பட்ட ஊராட்சிகளின் தேர்தலை நடத்துவதற்கான அடிப்படைத் தேவைகளான, சிற்றொகுதியின் எல்லைகளை மறுவரையறை செய்வதற்கும், அதன் பின்பு ஆதிதிராவிடர், பழங்குடியினரைச் சார்ந்த நபர்கள் மற்றும் மகளிருக்கு இடங்களையும் பதவிகளையும் ஒதுக்கீடு செய்வதற்கும் உறுதியான காலக்கெடு கட்டாயமாகிறது.
3. மாண்பமை சென்னை உயர்நீதிமன்றமானது, நீதிப்பேராணை மனு எண்.39526/2024 மற்றும் நீதிப்பேராணை பல்வகை மனு எண்.42808/2024-ல், 21.12.2024 தேதியிட்ட அதன் ஆணையில் எல்லை மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடுகளை அறிவிப்பதற்குத் தேவையான செயல்முறையை நிறைவு செய்யாமல், ஊராட்சிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்படாது என்று கூடுதல் தலைமை வழக்குரைஞர் தாக்கல் செய்ததைப் பதிவு செய்த பின்பு, கூறப்பட்ட நீதிப்பேராணை மனுவை முடித்து வைத்துள்ளது.
4. இதற்கிடையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளைத் தவிர்த்து, 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலமானது 2025ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 5 ஆம் தேதியன்று முடிவடைய இருந்தது. சிற்றொகுதிகளின் எல்லை மறுவரையறை / இடஒதுக்கீடு செயல்முறை நிறைவுபெறாத காரணத்தால், 28 மாவட்டங்களில் உள்ள கூறப்பட்ட ஊராட்சிகளுக்குப் வழக்கமான தேர்தலை 2025 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 5 ஆம் தேதிக்கு முன்னர் நடத்த இயலவில்லை என்பதால், கூறப்பட்ட 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளுக்கு வழக்கமான தேர்தல் நடத்தப்படும் வரையிலோ அல்லது 2025 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 5 ஆம் தேதி வரையிலோ இதில் எது முந்தையதோ அது வரையில், மேற்சொன்ன ஊராட்சிகளை நிர்வகிக்க, ஊராட்சிகளுக்காக தனி அலுவலர்களை நியமனம் செய்வதற்கு அரசுக்கு அதிகாரம் அளிக்க, 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின், (தமிழ்நாடு சட்டம் 21/1994) 261-A பிரிவானது, 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (திருத்தச்) சட்டத்தால் (தமிழ்நாடு சட்டம் 6/2025) திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அந்தப் பதவிகாலமானது, 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (நான்காம் திருத்தச்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 53/2025) மூலம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 05 ஆம் நாள் வரையில் மேலும் நீட்டிக்கபட்டு உள்ளது.
5. கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் 21/1994 இன் 261-A பிரிவின்படி நியமிக்கப்பட்ட தனி அலுவலர்களின் பதவிக்காலமானது, 2026 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 5 ஆம் தேதியன்று முடிவடைய இருந்தது.
ஊராட்சிகளில் மறுசீரமைப்பு, சிற்றொகுதிகளின் எல்லை மறுவரையறை மற்றும் சிற்றொகுதிகளின் இடஒதுக்கீடு செயல்முறைக்கு இன்னும் சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்பதால், 2026 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 5 ஆம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ கூறப்பட்ட ஊராட்சிகளுக்கு வழக்கமான தேர்தலை நடத்த இயலவில்லை. இருப்பினும், கூறப்பட்ட 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளின் அன்றாட விவகாரங்களை நிருவகிப்பதற்காக, கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியகுழுக்கள் மற்றும் மாவட்டதமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 35 ஊராட்சிகளின் அதிகாரங்களைச் செயல்படுத்தவும் செயற்பணிகளை நிறைவேற்றவும், கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் 21/1994 இன் 261-A பிரிவின்படி கீழ் நியமிக்கப்பட்ட 28 மாவட்டங்களுக்கான தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை 06.01.2026 முதல் 05.07.2026 வரை நீட்டித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
6. மேற்கூறிய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை மேலும், ஆறு மாதக்காலத்திற்கு, அதாவது, 2026 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 5 ஆம் தேதி வரையிலோ அல்லது மேற்கண்ட ஊராட்சிகளுக்கான வழக்கமான தேர்தல்களுக்குப் பின்பு, கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியக் குழுக்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளில் நடத்தப்படும் முதல் கூட்டம் வரையிலோ, இதில் எது முந்தையதோ, அதுவரையில், நீட்டிக்க அரசுக்கு அதிகாரமளிக்கவும், 28 மாவட்ட ஊராட்சிகளில் உள்ள தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை, 2026 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 5 ஆம் தேதிக்குப் பின்பு, இந்தச் சட்டம் தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் தேதி வரை நீட்டித்துள்ள அரசின் நடவடிக்கையைச் செல்லுந்தன்மையுடையதாக்கவும், அரசானது, 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தை, (தமிழ்நாடு சட்டம் 21/1994) திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது.
7. இந்தச் சட்ட முன்வடிவானது, மேற்கண்ட முடிவிற்கு செயல் வடிவம் கொடுக்க விழைகிறது.
இ. பெரியசாமி,
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்.
கி. சீனிவாசன்,
முதன்மைச் செயலாளர்.
தலைமைச் செயலகம், சென்னை-9, 2026 ஜனவரி 24.
36 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 372026-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 24-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் 2026-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 24-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண
விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130–ஆம் விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130–ஆம்
விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 8/2026
1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) சட்டத்தை மேலும் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.
இந்தியக் குடியரசின் எழுபத்து ஆறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1.(1) இந்தச் சட்டம், 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம் என வழங்கப்பெறும்.
மற்றும் தொடக்கம்.
(2) இது, 2025 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 30 ஆம் நாளன்று
நடைமுறைக்கு வந்துவிட்டதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
33-ஆம்
பிரிவிற்கான திருத்தம்.
தமிழ்நாடு சட்டம் 27/1989.
2. 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) சட்டத்தின் (இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டம் என குறிப்பிடப்படும்) 33-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவில் உள்ள வரம்புரையில், "பதினான்கு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள்" எனும் சொற்றொடருக்காக, "பதினைந்து ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
செல்லுந்தன்மை. 3. முதன்மைச் சட்டத்தில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், 2025 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 30 ஆம் நாளிலிருந்தும் மற்றும் அது முதற்கொண்டும், சந்தைக் குழுக்களின் தனி அலுவலரின் அதிகாரங்களைச் செலுத்தும் செயற்பணிகளை நிறைவேற்றும் நபர் ஒவ்வொருவரும், இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான, முதன்மைச் சட்டத்தின் 33 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்படி அத்தகைய தனி அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகக் கொள்ளப்படுதல் வேண்டும் மற்றும் 2025 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 30 ஆம் நாள் தொடங்கியும், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்தச்சட்டம் வெளியிடப்படும் தேதியுடன் முடிவடையும் காலஅளவின் போது கூறப்பட்ட தனி அலுவலர்களால் செய்யப்பட்ட செயல் எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான, முதன்மைச் சட்டத்தின்படி செல்லுந்தன்மையுடன் செய்யப்பட்டிருப்பதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
38 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுநோக்கக்காரண விளக்கவுரை.நோக்கக்காரண விளக்கவுரை.
1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைப்பொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 27/1989) 33-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவானது சந்தைக்குழு ஒன்றின் அலுவல்களை மேலாண்மை செய்ய, முறை ஒன்றுக்கு ஓர் ஆண்டிற்கு மிகாத கால அளவிற்கு தனி அலுவலர் ஒருவரை பணியமர்த்தம் செய்ய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது மற்றும் கூறப்பட்ட கால அளவை நீட்டிப்பதற்கான ஆணையானது, மொத்தத்தில் மூன்றாண்டுகளுக்கு மேற்பட்டு நடைமுறையில் இருத்தல் கூடாது என்ற நிபந்தனைக்குட்பட்டு, அரசால் அவ்வப்போது அத்தகைய கால அளவானது நீட்டிக்கப்படலாம். கூறப்பட்ட வகைமுறையின் விளைவாக, பல சந்தைக்குழுக்களுக்கு அதன் அலுவல்களை மேலாண்மை செய்ய தனி அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டனர். நடைமுறையில் இருக்கும் அத்தகைய நீட்டிப்பு ஆணையின் அதிகபட்ச கால அளவானது மேற்சொன்னசட்டத்தின் 33-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவிற்கான வகைமுறையைத் திருத்துவதன் மூலம் மூன்று ஆண்டுகள் கால அளவிற்கு அப்பாலும் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டது. கடைசியாக, நடைமுறையில் இருக்கும் நீட்டிப்பு ஆணையின் அதிகபட்ச கால அளவானது, தமிழ்நாடு சட்டம் 36/2024-னால் பதினான்கு ஆண்டுகள் மற்றும் ஆறுமாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது.
2. திருச்சிராப்பள்ளி, கடலூர் மற்றும் தேனி ஆகிய மூன்று சந்தைக் குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிக்க மேலும் சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, கூறப்பட்ட மூன்று சந்தைக் குழுக்களின் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை, மேற்சொன்னசட்டத்தின் 33-ஆம் பிரிவின்(1)-ஆம் உட்பிரிவிற்கான வகைமுறையின்கீழ் அனுமதிக்கப்பட்ட பதினான்கு ஆண்டுகள் மற்றும் ஆறுமாதங்களுக்கு அப்பால் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்க வேண்டிய கட்டாயத் தேவை இருக்கின்றது.
3. அதற்கிணங்க, கூறப்பட்ட மூன்று சந்தைக்குழுக்களின் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் ஓர் ஆண்டு கால அளவிற்கு நீட்டிப்பு செய்யும் வகையில், அதில் குறிப்பிடப்பட்ட காலத்தை பதினைந்து ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்களாக அதிகரிக்கவும், 2025-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 29-ஆம் தேதிக்கு அப்பால் கூறப்பட்ட மூன்று சந்தைக்குழுக்களின் தனி அலுவலர்களின் நடவடிக்கையை செல்லுந்தன்மையுடையதாக்கவும் தமிழ்நாடு சட்டம் 27/1989-ன் 33-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவிற்கான வகைமுறையினை திருத்தம் செய்வதென அரசானது முடிவு செய்துள்ளது.
4. இந்தச் சட்டமுன்வடிவானது மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர்.
கி. சீனிவாசன்,
முதன்மைச் செயலாளர்.
தலைமைச் செயலகம், சென்னை-9, 2026 ஜனவரி 24.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 392026-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 24-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் 2026-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 24-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண
விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130–ஆம் விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130–ஆம்
விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 9/2026
1945 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிச்சையெடுப்பதைத் 1945 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிச்சையெடுப்பதைத் தடுத்தல் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு தடுத்தல் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.சட்டமுன்வடிவு.
இந்தியக் குடியரசின் எழுபத்து ஆறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு
மற்றும் பிச்சையெடுப்பதைத் தடுத்தல் (திருத்தச்) சட்டம் என்று வழங்கப்படும்.
தொடக்கம்.
(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
4 ஆம் XIII/1945.
பிரிவிற்கான
திருத்தம்.
2. 1945 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிச்சையெடுப்பதைத் தடுத்தல் சட்டத்தின், (இதன் பின்பு இதில் முதன்மைச்சட்டம் எனக் குறிப்பிடப்படும்) 4 ஆம் பிரிவில், "10-A, 12-A மற்றும் 23 ஆம் பிரிவுகளின் வகைமுறைகளானது, 1898 ஆம் ஆண்டு தொழுநோயாளிகள் சட்டத்தின் (மையச் சட்டம் III/1898) 3 ஆம் பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்ட தொழுநோயாளர் காப்பகம் எதுவும், 2 ஆம் பிரிவின் (2) ஆம் கூறின் கீழ் ஒரு சிறப்பு இல்லமாக, மாநில அரசு அறிவிக்கை செய்திருப்பின், அதற்குப் பொருந்துதல் வேண்டும்" எனும் சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
6 ஆம் 3. முதன்மைச் சட்டத்தின் 6 ஆம் பிரிவில், "அல்லது 12-A
பிரிவிற்கான பிரிவு" எனும் சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
திருத்தம்.
10 ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
4. முதன்மைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவில், "ஒரு தொழுநோயாளியாக இருக்கும் ஒரு நபரைத் தவிர மற்றவர்" எனும் சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
10-A ஆம் 5. முதன்மைச் சட்டத்தின் 10-A ஆம் பிரிவானது
பிரிவை விட்டுவிடப்படுதல் வேண்டும்.
விட்டுவிடுதல்.
11 ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
6. முதன்மைச் சட்டத்தின் 11 ஆம் பிரிவில், "8, 9, 10 அல்லது 10-A ஆம் பிரிவு" எனும் சொற்றொடருக்காக, "8, 9 அல்லது 10 ஆம் பிரிவு" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
12-A ஆம் 7. முதன்மைச் சட்டத்தின் 12-A ஆம் பிரிவானது
பிரிவை விட்டுவிடப்படுதல் வேண்டும்.
விட்டுவிடுதல்.
15 ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
8. முதன்மைச் சட்டத்தின் 15 ஆம் பிரிவின், (2) ஆம் உட்பிரிவிற்கான வரம்புரையில், "ஒரு தொற்று நோயுள்ள தொழுநோயாளி அல்லது" எனும் சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
40 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு23 ஆம்
9. முதன்மைச் சட்டத்தின் 23 ஆம் பிரிவில்,-
பிரிவிற்கான
(1) ஓரத்தலைப்பில், "தொழுநோயாளிகள் மற்றும்" எனும்
திருத்தம்.
சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
(2) (2) ஆம் உட்பிரிவில்,-
(a) (a) கூறு விட்டுவிடப்படுதல் வேண்டும்.
(b) (b) கூறில், "தொழுநோயாளிகள் தவிர" எனும்
சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
(3) (3) ஆம் உட்பிரிவில்,-
(a) இரண்டு இடங்களில் காணப்படுகின்ற "தொற்று நோயுள்ள தொழுநோயாளி அல்லது" எனும் சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்;
(b) (i) கூறு விட்டுவிடப்படுதல் வேண்டும்.
(4) (4) ஆம் உட்பிரிவில், "1898 ஆம் ஆண்டு தொழுநோயாளிகள் சட்டம் (மையச் சட்டம் III/1898) அல்லது", "1898 ஆம் ஆண்டு தொழுநோயாளிகள் சட்டத்தின் (மையச் சட்டம் III/1898) 3ஆம் பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்ட தொழுநோயாளர் காப்பகம் அல்லது ஏதேனும்", "அத்தகைய தொழுநோயாளர் காப்பகத்தின் கண்காணிப்பாளர் அல்லது", "10-A அல்லது 12-A பிரிவின்படி அல்லது", மற்றும் இரு இடங்களில் காணப்படுகின்ற "நேர்விற்கேற்ப" எனும் சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 41நோக்கக்காரண விளக்கவுரைநோக்கக்காரண விளக்கவுரை
மாண்பமை இந்திய உச்சநீதிமன்றம், நீதிப்பேராணை மனு (உரிமையியல்) எண். 83/2010 இல் 07.05.2025 தேதியிட்ட அதன் ஆணையில், துணைச் சட்டங்கள் உள்ளிட்ட இயற்றுச் சட்டங்களின் ஒரு பகுதியில் இன்றளவும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட அல்லது குணமடைந்த நபர்கள் தொடர்பாக பாகுபாடுகாட்டுகிற சொற்றொடர்கள் புழக்கத்தில் உள்ளன என்றும், அவ்வாறுள்ள அரசமைப்புச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ இயற்றப்பட்ட அனைத்து மாநிலச்சட்டங்களையும் அடையாளம் காண ஒரு குழுவை அமைத்துருவாக்குவதற்கும் மேலும், அதில் தகுந்த சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள மாநில அரசுக்கு பரிந்துரைகள் செய்யவும் அந்தக் குழுவிற்கு பணிப்புரைத்துள்ளது.
2. 1945 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிச்சையெடுப்பதைத் தடுத்தல் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் XIII/1945) சில வகைமுறைகள், தொழுநோயால் பாதிக்கப்பட்ட அல்லது குணமடைந்த நபர்கள் தொடர்பாக, பாகுபாடு காட்டுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மாண்பமை இந்திய உச்சநீதிமன்றத்தின் மேற்சொன்ன ஆணைக்கிணங்க, கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் XIII/1945 – இன் அத்தகைய பாகுபாடு காட்டும் வகைமுறைகளை விட்டுவிடுவதற்கு அரசானது முடிவு செய்துள்ளது.
3. இந்த சட்டமுன்வடிவானது மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
பி. கீதா ஜீவன், சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர்.
கி. சீனிவாசன்,
முதன்மைச் செயலாளர்.
தலைமைச் செயலகம், சென்னை-9, 2026 ஜனவரி 24.
42 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 432026-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 24-ஆம் நாளன்று தமிழ்நாடு 2026-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 24-ஆம் நாளன்று தமிழ்நாடு
சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு,
நோக்கக் காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் நோக்கக் காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவை விதிகளின் 130–ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக பேரவை விதிகளின் 130–ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக
வெளியிடப்படுகின்றது.வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 10/2026
2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிகள்
2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிகள்
(கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துதல்) சட்டத்தினை மேலும் (கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துதல்) சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.
இந்திய குடியரசின் எழுபத்து ஆறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக;-
குறுந்தலைப்பு
மற்றும் தொடக்கம்.
1. (1) இந்தச் சட்டம், 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிகள் (கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, மாநில அரசு, அறிவிக்கை வாயிலாகக் குறிப்பிடும்
அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
2 ஆம் 22/2009.
பிரிவிற்கான
திருத்தம்.
2. 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிகள் (கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துதல்) சட்டத்தின் (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படும்) 2 ஆம் பிரிவின், (j) கூறில்,-
(1) "அல்லது ஒழுங்குமுறைச் சட்டத் தொகுப்பு" எனும்
சொற்றொடரானது, விட்டுவிடப்படுதல் வேண்டும்;
(2) விளக்கத்தின் கீழுள்ள (1) ஆம் கூறானது, விட்டுவிடப்படுதல்
வேண்டும்.
5 ஆம் 3. முதன்மைச் சட்டத்தின் 5 ஆம் பிரிவில்,-
பிரிவிற்கான (1) (2) ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக
திருத்தம்.
அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
''(2) குழுவானது, பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டிருத்தல்
வேண்டும், அவர்களாவன:-
(a) மெட்ராஸ் உயர்நீதிமன்ற தலைமை
- தலைமையாளர்;
நீதிபதியுடன் கலந்தாலோசித்து, அரசால் நியமிக்கப்படும் ஓர் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி.
(b) பள்ளிக் கல்வி இயக்குநர் - பதவிவழி உறுப்பினர்;
(c) தனியார் பள்ளிகள் இயக்குநர் - பதவிவழி உறுப்பினர்;
(d) தொடக்கக் கல்வி இயக்குநர் - பதவிவழி உறுப்பினர்;
(e) இணை தலைமைப் பொறியாளர்
(கட்டடங்கள்), பொதுப்பணித்துறை
- பதவிவழி உறுப்பினர்;
44 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு(f) அரசால் நியமிக்கப்படக்கூடிய, தமிழ்நாடு
- உறுப்பினர்;
மாநில பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின்
உறுப்பினராக உள்ள பெற்றோர்
(g) பள்ளிக் கல்வித்துறையின் அரசு துணைச்
- பதவிவழி உறுப்பினர்
செயலாளர் படிநிலைக்குக் குறையாத ஓர் அலுவலர்.
செயலர்.";
(2). (4) ஆம் உட்பிரிவிற்கு பின்பு, பின்வரும் உட்பிரிவுகளானவைச்
சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:-
''(4-A). (2) ஆம் உட்பிரிவின் (f) கூறின் கீழ் நியமிக்கப்பட்ட உறுப்பினரானவர், அவர் நியமனம் செய்யப்பட்ட தேதியிலிருந்து மூன்றாண்டு காலஅளவிற்குப் பதவியில் இருத்தல் வேண்டும்:
வரம்புரையாக, நியமிக்கப்பட்ட உறுப்பினரின் பதவியானது, எந்தக் காரணத்தினாலும், காலியிடமாகும் போது, அவருடைய பதவிக்குப் புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படுதல் வேண்டும், மேலும், அத்தகைய பதவிக்கான காலியிடம் ஏற்படாவிட்டால், அத்தகைய உறுப்பினர் யாருடைய பதவி இடத்தைப் பூர்த்தி செய்கிறாரோ, அந்த உறுப்பினர் பதவி வகிக்க உரிமைபெற்றிருந்த காலம் வரையில் அவர் பதவி வகிப்பார்:
மேலும் வரம்புரையாக, அத்தகைய உறுப்பினர், தமிழ்நாடு மாநில பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் ஓர் உறுப்பினராக இருப்பது அற்றுப்போன தேதியிலிருந்து, மேற்சொன்ன குழுவின் உறுப்பினராக இருப்பதும் அற்றுப்போதல் வேண்டும்.
(4-B). (2) ஆம் உட்பிரிவின் (f) கூறின் கீழ் நியமிக்கப்பட்ட உறுப்பினர், தனது கையொப்பமிட்ட எழுத்து வடிவிலான கடிதத்தை அரசிற்கு முகவரியிட்டு, தனது பதவி விலகலைத் தெரிவிக்கலாம். ஆனால் அவரது பதவி விலகலானது, அரசால் ஏற்றுக் கொள்ளப்படும் வரையில் அவர் அப்பதவியைத் தொடர்ந்து வகித்து வருதல் வேண்டும்.
(4-C). எந்த நேரத்திலும், (2) ஆம் உட்பிரிவின் (f) கூறின்கீழ் நியமிக்கப்பட்ட உறுப்பினர் அப்பதவிக்குத் தகுதியற்றவராக இருப்பதாகவோ, அல்லது தவறான நடத்தை அல்லது கவனக்குறைவாக இருந்தாலோ அவரைப் பதவியிலிருந்து நீக்குவது பொருத்தமானதாக இருப்பதாக அரசிற்கு தோன்றினால், நியமிக்கப்பட்ட உறுப்பினருக்கு விளக்கம் அளிப்பதற்கான நியாயமான வாய்ப்பு அளித்த பின்பு, அரசானது, அத்தகைய நியமிக்கப்பட்ட உறுப்பினரைப் பதவியிலிருந்து நீக்கம் செய்யலாம்.
(4-D). (2) ஆம் உட்பிரிவின் (f) கூறின் கீழ் நியமிக்கப்பட்ட உறுப்பினர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய அமர்வுக் கட்டணம் மற்றும் பிற படிகளைப் பெறுவதற்குத் தகுதியுடையவராவார்.".
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 456 ஆம் பிரிவிற்கான 4. முதன்மைச் சட்டத்தின் 6 ஆம் பிரிவில்.-
திருத்தம் (1) (3) ஆம் உட்பிரிவில், "பதினைந்து நாள்" எனும் சொற்றொடருக்காக, "முப்பது நாள்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) (5) ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
''(5) குழுவினால் நிருணயிக்கப்பட்ட கட்டணமானது தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்தும்; மேலும் அது மூன்று கல்வியாண்டிற்கு செல்லுபடியாதல் வேண்டும்.";
(3) அவ்வாறு மாற்றாக அமைக்கப்பட்ட (5) ஆம் உட்பிரிவிற்குப் பின்பு, பின்வரும் உட்பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
''(5-A) தனியார் பள்ளி ஒவ்வொன்றும் (5) ஆம் உட்பிரிவின் கீழ் நிருணயிக்கப்பட்ட கட்டணத்தின் செல்லுபடியாகும் காலம் முடிவடைவதற்கு முன்பு, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கூர்ந்தாய்வுக் கட்டணத்துடன் சேர்த்து அத்தகைய வடிவில், அத்தகைய நேரத்திற்குள் கட்டண சீராய்விற்காக விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்தல் வேண்டும்.".
46 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுநோக்கக் காரண விளக்கவுரை.நோக்கக் காரண விளக்கவுரை.
தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகளால் வசூலிக்கப்படும் கட்டணங்கள் ஏற்கத்தக்கதாகவும், நியாயமானதாகவும், நேர்மையான கல்வி நோக்கங்களுக்காகவும் மட்டுமே விதிக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்குடன், கட்டண நிர்ணயக் குழுவால் கட்டணம் நிர்ணயிக்கப்படுவதன் மூலம், அத்தகைய கட்டண வசூலை ஒழுங்குமுறைப்படுத்துவதற்காக, 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிகள் (கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துதல்) சட்டமானது, (தமிழ்நாடு சட்டம் 22/2009) இயற்றப்பட்டது.
2. தற்போது, கட்டண நிர்ணயக் குழுவில் பெற்றோர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதற்காக, தமிழ்நாடு மாநில பெற்றோர்-ஆசிரியர் கழகத்திலிருந்து ஒரு பெற்றோர்-உறுப்பினரை அக்குழுவின் ஓர் உறுப்பினராகச் சேர்ப்பதற்கும், பதின்மநிலைப் பள்ளிகளின் இயக்குநர் பதவியானது தனியார் பள்ளிகளின் இயக்குநர் பதவிக்குள் இணைக்கப்பட்டுவிட்டதால், பதின்மநிலைப் பள்ளிகளின் இயக்குநருக்குப் பதிலாக தனியார் பள்ளிகளின் இயக்குநரைச் சேர்ப்பதற்கும், மேற்சொன்ன குழுவின் நிருவாகத்தில் நெகிழ்வுத்தன்மையையும் செயல்பாடுகளைப் புரிவதில் தொடர்ச்சித்தன்மையையும் உறுதி செய்வதற்காக, மேற்சொன்ன குழுவில் அரசு துணைச்செயலாளர் படிநிலைக்குக் குறையாத ஓர் அரசு அலுவலரை நியமனம் செய்வதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது. அதைத் தவிர, கட்டண அமைப்பு தொடர்புடைய கட்டண நிர்ணயக் குழுவின் முடிவிற்கெதிரான மறுப்புகளைத் தெரிவிப்பதற்காக நியாயமான வாய்ப்பினை வழங்குவதற்கு, மேற்சொன்ன குழுவின் முடிவு பெறப்பட்ட தேதியிலிருந்து மறுப்புகளைத் தாக்கல் செய்வதற்கான கால வரம்பை "பதினைந்து நாட்களிலிருந்து" "முப்பது நாட்களாக" உயர்த்துவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது. மேலும் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் செல்லுபடியாகும் காலம் முடிவுறுவதற்கு முன்பாக ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒருமுறை மேற்சொன்ன குழுவிடம் கட்டண மறுஆய்விற்கான விண்ணப்பத்தை கட்டாயமாகச் சமர்ப்பிப்பதற்கு வழிவகுக்கின்ற விதிமுறைகளைச் சேர்ப்பதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.
3. மேற்கூறிய நோக்கத்தை அடைவதற்காக, மேற்கூறிய தமிழ்நாடு சட்டம் 22/2009-இல் பொருத்தமான வகைமுறைகள் இணைக்கப்படுதல் வேண்டும். எனவே, மேற்சொன்ன நோக்கங்களுக்காக, மேற்கூறிய தமிழ்நாடு சட்டம் 22/2009-ஐ தக்கவாறு திருத்தம் செய்வதென அரசானது முடிவு செய்துள்ளது.
4. இந்தச் சட்டமுன்வடிவானது, மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 47சட்டமியற்று அதிகார ஒப்படைவு பற்றிய குறிப்பு. சட்டமியற்று அதிகார ஒப்படைவு பற்றிய குறிப்பு.
இந்தச் சட்டமுன்வடிவின் 1 (2), 3 மற்றும் 4 ஆகிய கூறுகளானவை அதில் குறித்துரைக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்காக, அறிவிக்கைகளை வெளியிடுவதற்கு அல்லது விதிகளை உருவாக்குவதற்கு அரசுக்கு அதிகாரமளிக்கின்றன.
2. ஒப்படைவு செய்யப்பட்ட அதிகாரங்கள் இயல்பானவையேயன்றி தனித்தன்மை வாய்ந்தவையல்ல.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்.
கி. சீனிவாசன்,
முதன்மைச் செயலாளர்.
தலைமைச் செயலகம், சென்னை-9, 2026 ஜனவரி 24.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.