© தமிழ்நாடு அரசு 2026
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை: ரூ. 0.80 காசு[விலை: ரூ. 0.80 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 4] சென்னை, புதன்கிழமை, ஜனவரி 28, 2026 தை 14, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அ றிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை.
அறிவிக்கை
[அரசாணை (நிலை) எண். 229, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வன [வனம்(13)]த் துறை, 17 டிசம்பர் 2025.] 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு வனச் (திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 41/2025) 1. ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன சட்டம் செயலுக்கு வரும் நாளாக 01.01.2026 ஆம் நாளினை இதனால் நிர்ணயிக்கிறார்.
சுப்ரியா சாஹு, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர் (கூ.பொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை.
அறிவிக்கை
[அரசாணை (2ப) எண். 43, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 7 நவம்பர் 2025.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2)-உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர்,-
(a) தமிழ்நாடு மாநிலத்தில் யாதொரு புகையிலை தயாரிப்புத் (பீடி தயாரிப்பு உட்பட) தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழ்க்காணும் விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள புகையிலை (பீடி சுற்றுதல் உட்பட) தயாரிப்பு பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச்சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரப்பட்டுள்ளவாறு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
2வரைவு அறிவிக்கை
யாதொரு புகையிலை தயாரிப்புத் (பீடி தயாரிப்பு தொழில் உட்பட) தொழிலில் (பீடி சுற்றுதல் உட்பட) வேலைவாய்பு
| தொடர் எண். | பணியாளர் வகைகள் | குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ. காசு) |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| (1) | அளவைப் பொருட்படுத்தாது 1000 ஜாடி பீடிகள் சுற்றுவதற்கு | 120.00 |
| (2) | அளவைப் பொருட்படுத்தாது 1000 சாதா பீடிகள் சுற்றுவதற்கு (முக்கூடல் வகை பீடிகள் உட்பட) | 119.80 |
(b) 9.5.2007 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2 இல், 193ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/LE/240/2007 ஆம் எண் அறிவிக்கைக்கு பதிலிட்டகற்றீடாக, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், புகையிலை (பீடி தயாரிப்பு உட்பட) தயாரிப்புத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள பீடி சுற்றுவோருக்கு வழங்கத்தக்க உத்தவராதமளிக்கப்பட்ட நேர விகித ஊதியங்களை இதனால் பின்வருமாறு திருத்தியமைக்கிறார்:-
1) ஒரு நாளைக்கு 1000 பீடிகளை சுற்றுவதற்கு நல்ல மூலப்பொருட்களை (புகையிலை உட்பட) போதுமான அளவு வேலையளிப்பவர் வழங்கத் தவறினால் தொழிலாளர் (பீடி சுற்றுபவர்கள்) உத்தரவாதமளிக்கப்பட்ட நேர விகித ஊதியமாக ரூ.79.87 (எழுபத்தொன்பது ரூபாய் எண்பத்தேழு காசுகள் மட்டும்) பெற உரிமை பெற்றவராவார்:
2) மேற்சொன்ன உத்தரவாதமளிக்கப்பட்ட நேர விகித ஊதியம் வழங்குவது பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டது ஆகும்.
அதாவது:-
(i) வேலையளிப்பவர் வழங்கிய மூலப்பொருட்கள் ஆயிரம் பீடிகளை சுற்றுவதற்கு போதுமானதாக இல்லாதபோதிலும் அவற்றை தொழிலாளர் முழுமையாகப் பயன்படுத்தாவிடில் உத்தரவாதமளிக்கப்பட்ட நேர விகித ஊதியத்தைப் பெறுவதற்கு தொழிலாளர் உரிமையற்றவராவார்:
(ii) யாதொரு காரணத்திற்காக எதுவாக இருந்தபோதிலும் வேலை செய்வதற்கு தொழிலாளருடைய விருப்பமின்மையின் பொருட்டு, யாதொரு நாளிலும் உத்தரவாதமளிக்கப்பட்ட நேர விகித ஊதியத் தொகையைக் காட்டிலும் குறைவான தொகையை அவர் ஈட்டுவாரெனில் உத்தரவாதமளிக்கப்பட்ட நேர விகித ஊதியங்களைப் பெறுவதற்கு தொழிலாளர் உரிமையற்றவராவார்:
(iii) வேலையளிப்பவர் புயல், தீ, மழை, பேரழிவு, தொற்றுநோய்கள், உள்நாட்டுக் கலவரம் அல்லது வேலையளிப்பவரின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட இத்தகைய வேறு ஏதேனும் காரணங்களினால் மூலப்பொருட்களை வழங்கத் தவறுவாராயின் அந்நேரத்தில் உத்தரவாதமளிக்கப்பட்ட நேர விகித ஊதியத்தைப் பெறுவதற்கு தொழிலாளர் உரிமையற்றவராவார்; மேலும், iv) ஒன்றுக்கு மேற்பட்ட வேலையளிப்பவர்களிடம் பணிபுரியும் தொழிலாளர் ஒருவர், இந்த வேலையளிப்பவர்களில் எவரிடமிருந்தும் உத்தரவாதமளிக்கப்பட்ட நேர ஊதிய விகிதத்தைப் பெறுவதற்கு உரிமையற்றவராவார்:
2. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும், அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.
விளக்கங்கள் :-விளக்கங்கள் :-
(1) மேற்சொன்ன வீதங்களில், மிகை ஊதியம் என்ற வகையில் வழங்கப்படும் எதுவும் சேர்க்கப்படக்கூடாது.
(2) அகவிலைப்படி :அகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியங்களுடன் தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:-
(i) அகவிலைப்படியானது, 2008 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 1960 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு 3384 புள்ளிகள். இனிவருங்காலங்களில் 3384 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் ஒவ்வொரு 1000 பீடிகளுக்கு 3 காசுகள் (மூன்று காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படியாக வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.
(3) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
(4) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
கொ.வீர ராகவ ராவ், அரசு செயலாளர்.
(தமிழாக்கம்)