Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

COLLECTORS AND LOCAL AUTHORITIES--Notification regarding Ranipet district, Inspector of Panchayats / District Collectors.

Published 04 February 2026

Department
Collector And Local Authority
Type
Extraordinary
Gazette no.
53
Part
Part VI
Notification no.
Notification No. VI(2)/4(a)/2026.--(Ref.No.A2/586/2024)
Extraordinary Type
Notifications or Orders of interest to a section of the public issued by Heads of Departments, etc.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2026-02-04.Extraordinary_53_Part-VI_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗
© GOVERNMENT OF TAMIL NADU

2026

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Re. 0.80 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 53] CHENNAI, WEDNESDAY, FEBRUARY 4, 2026 Thai 21, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2057

Part VI—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Heads of Departments, etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

COLLECTORS AND LOCAL AUTHORITIES

இராணிப்பேட்டை மாவட்டம், ஊராட்சிகளின் ஆய்வாளர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவிக்கை இராணிப்பேட்டை மாவட்டம், ஊராட்சிகளின் ஆய்வாளர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவிக்கை

(ந.க.எண்.அ2/586/2024)

No. VI(2)/4(a)/2026.

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஊராட்சி ஒன்றியம், நவ்லாக் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.கு.சரஸ்வதி என்பரை தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 சட்டப்பிரிவு 205 (11) -ன் படி நவ்லாக் ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து அறிவிக்கை வெளியிடுதல்..

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஊராட்சி ஒன்றியம், நவ்லாக் ஊராட்சியில் 01.04.2023 முதல் 31.01.2024 வரையிலான வரவு– செலவு கணக்குகள் மீது உதவி இயக்குநர் (தணிக்கை) அவர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு குறைபாடுகள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, 1 முதல் 7 மற்றும் 10 துணை குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க தெரிவித்து, இராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிகளின் ஆய்வாளர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செ.மு.ந.க.எண். அ2/586/2024, நாள்: 04.12.2025 -ன்படி நவ்லாக் ஊராட்சி மன்ற தலைவருக்கு சட்டப்பூர்வ அறிவிப்பு வழங்கப்பட்டது.

மேற்படி சட்டப்பூர்வ அறிவிப்புக்கு பதிலளிக்க நவ்லாக் ஊராட்சி மன்ற தலைவருக்கு போதிய கால அவகாசம் வழங்கியும், விளக்கம் ஏதும் வரப்பெறாததால், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 சட்டப்பிரிவு 205 (2 முதல் 10)-வரையிலான விதிமுறைகளின்படி, வாலாஜா வட்டாட்சியர் தலைமையில் நவ்லாக் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட்டு, ஊராட்சி மன்றத்தின் கருத்தினை பதிவு செய்து அறிக்கை பெறப்பட்டது.

மேற்படி ஊராட்சி மன்றத்தின் கருத்தினையும், குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றையும் ஊராட்சிகளின் ஆய்வாளர்/மாவட்ட ஆட்சித்தலைவரால் தன்னிச்சையாகவும், ஆழ்ந்தும் பரிசீலனை செய்ததில், நவ்லாக் ஊராட்சி மன்ற தலைவர் மீது சுமத்தப்பட்ட 1 முதல் 7 மற்றும் 10 துணை குற்றச்சாட்டுகள் நிரூபணமாவதாலும், சட்டப்படியான தனது கடமைகளிலிருந்து தவறியதாலும், ஊராட்சிக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியதாலும், அதிகார வரம்பை மீறி செயல்பட்டதாலும், ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராக உள்ளதாலும், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 சட்டப்பிரிவு 205 (11)-ன் படி, ஊராட்சிகளின் ஆய்வாளர்/மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் திருமதி.கு.சரஸ்வதி என்பவரை நவ்லாக் ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து அறிவிக்கை வெளியிடப்படுகிறது.

இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழ் தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீட்டில் வெளியிடப்படும் நாள் முதல் அமலுக்கு வருகிறது.

இராணிப்பேட்டை, ஜெ. யு. சந்திரகலா,ஜெ. யு. சந்திரகலா, 2026 ஜனவரி 28. ஊராட்சிகளின் ஆய்வாளர் / மாவட்ட ஆட்சித்தலைவர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

VI-2 Ex. (53)

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 04 February 2026. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2026-02-04.Extraordinary_53_Part-VI_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2026-02-04.Extraordinary_53_Part-VI_Section-2.