Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Tamil Nadu Acts and Ordinances - Tamil Supplement Acts (Tamil) - Act No. 1 of 2026.--An Act further to amend the Registration Act, 1908, in its application to the State of Tamil Nadu.

Published 18 February 2026

Type
Ordinary
Gazette no.
7
Part
Part IV
Section
Section 2 T Sup
Identifier
in.gazette.tamilnadu.2026-02-18.Ordinary_7_Part-IV_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2026 [விலை: ரூ. 0.80 காசுவிலை: ரூ. 0.80 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 7] சென்னை, புதன்கிழமை, பிப்ரவரி 18, 2026 மாசி 6, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057

பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2026 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 9 ஆம் நாளன்று குடியரசுத் தலைவரின் ஏற்பிசைவைப் பெற்றது ஜனவரி திங்கள் 9 ஆம் நாளன்று குடியரசுத் தலைவரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:- மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண். 1/2026.சட்ட எண். 1/2026.

1908-ஆம் ஆண்டு பதிவுச் சட்டத்தை தமிழ்நாடு மாநிலத்திற்குப் பொருந்தும் வகையில், மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்

இந்திய குடியரசின், எழுபத்து ஆறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2025-ஆம் ஆண்டு பதிவுச் (தமிழ்நாடு திருத்த)

மற்றும் சட்டம் என அழைக்கப்பெறும்.

தொடக்கம்.

(2) இது, தமிழ்நாடு மாநிலம் முழுவதும் அளாவி நிற்கும்

(3) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

2. 1908-ஆம் ஆண்டு பதிவுச் சட்டத்தின் 34 B-ஆம் பிரிவிற்குப்

மையச் சட்டம்

பின்பு, பின்வரும் பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

XVI/1908.

34-C எனும் புதிய பிரிவினை உட்புகுத்துதல்.

7—IV-2-(T-Sup)—1 [1] 2

"34-C. அசல் ஆவணங்களை சமர்ப்பித்தல்.-அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம் எதிலும் உள்ளடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், அசையாச் சொத்து தொடர்பான ஓர் ஆவணம் எந்தப் பதிவு அலுவலரிடம் பதிவிற்காக சமர்ப்பிக்கப்படுகிறதோ, அந்தப் பதிவு அலுவலர், சமர்ப்பிக்கப்படும் தேதிக்கு முன்பு பத்து நாட்களுக்குள் பெறப்பட்ட தொடர்புடைய சொத்தின் வில்லங்கச் சான்றிதழுடன் இணைத்து, தொடர்புடைய சொத்தின் மீதான உரிமை அவரால் அடையப்பெற்ற முந்தைய அசல் ஆவணத்தை, அந்த நிறைவேற்றுபவர் சமர்ப்பித்தாலன்றி. அதனைப் பதிவு செய்தலாகாது:

வரம்புரையாக, சொத்தின் மீது அடைமானம் தொடர்பான வில்லங்கம், நடப்பிலுள்ளபோது, பதிவு அலுவலர். அடைமானம் பெறுபவரிடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டாலன்றி. அத்தகைய ஆவணத்தைப் பதிவு செய்தல் ஆகாது:

மேலும் வரம்புரையாக, தொடர்புடைய சொத்தினைப் பொறுத்து விற்பனை ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டு, அது நிறைவேற்றப்படாதவிடத்து, மேற்சொன்ன ஒப்பந்தத்தின் குறித்தவகை நிவாரணத்திற்கான உரிமை வழக்கைத் தாக்கல் செய்வதற்கான கால வரையறை முடிவுற்றாலன்றி, பதிவு அலுவலர் அத்தகைய ஆவணத்தைப் பதிவு செய்தல் ஆகாது:

மேலும் வரம்புரையாக, தொடர்புடைய சொத்தானது மூதாதையர் சொத்தாக இருந்து, அதற்கான முந்தைய அசல் ஆவணம் இல்லாத நேர்வில், அந்தச் சொத்து தொடர்பாக வருவாய்த் துறையால் வழங்கப்பட்ட பட்டாவானது சமர்ப்பிக்கப்பட்டாலன்றி, பதிவு அலுவலர் அத்தகைய ஆவணத்தைப் பதிவு செய்தல் ஆகாது:

மேலும் வரம்புரையாக, முந்தைய அசல் ஆவணம் தொலைந்து போயிருப்பின், முந்தைய அசல் ஆவணம் தொலைந்து போனதற்கான அறிவிப்பு குறித்து உள்ளூர் நாளிதழில் வெளியிடப்பட்ட விளம்பரத்துடன் சேர்த்து, காவல் துறையால் வழங்கப்பட்ட கண்டறிய இயலவில்லை என்பதான சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டாலன்றி, பதிவு அலுவலர் அத்தகைய ஆவணத்தைப் பதிவு செய்தல் ஆகாது:

மேலும் வரம்புரையாக, அரசு அல்லது சட்டமுறைக் குழுமமானது ஆவணத்தை நிறைவேற்றுபவராக இருக்கும் ஓர் ஆவணத்திற்கு அல்லது மாநில அரசால் அவ்வப்போது அறிவிக்கை செய்யப்படலாகும் ஆவணங்களின் வகைகளுக்கு முந்தைய அசல் ஆவணத்தை சமர்ப்பிப்பது அவசியமாகாது.".

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,, அரசு செயலாளர், சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார், இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த்துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 18 February 2026. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2026-02-18.Ordinary_7_Part-IV_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2026-02-18.Ordinary_7_Part-IV_Section-2-T-Sup.