Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notification of the Thirupathur District Panchayat Inspector / District Collector.--Tirupathur District, Mathanur Panchayat Union, Venkatasamudram Panchayat Executive Officer/Head To remove them from the position of Chairman of Venkatasamudram Panchayat Board and issue a notification in accordance with Section 205 (11) of the Tamil Nadu Panchayats Act, 1994.

Published 27 February 2026

Department
Collector And Local Authority
Type
Extraordinary
Gazette no.
136
Part
Part VI
Notification no.
Notification No. VI(2)/10(a)/2026.--(Roc. No. 31109791/2025/A2)
Extraordinary Type
Notifications or Orders of interest to a section of the public issued by Heads of Departments, etc.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2026-02-27.Extraordinary_136_Part-VI_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗
© GOVERNMENT OF TAMIL NADU 2026 [Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [Price: Re. 0.80 Paise.
TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 136] CHENNAI, FRIDAY, FEBRUARY 27, 2026 Maasi 15, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2057

Part VI—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Heads of Departments, etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

COLLECTORS AND LOCAL AUTHORITIES

திருப்பத்தூர் மாவட்டம் ஊராட்சிகளின் ஆய்வாளர் / மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவிக்கை திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஊராட்சி ஒன்றியம், வெங்கடசமுத்திரம் ஊராட்சி செயல் அலுவலர்/ தலைவர் அவர்களை, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 சட்டப்பிரிவு 205 (11)-ன் படி வெங்கடசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து அறிவிக்கை வெளியிடுதல்.

(ந.க.எண்.31109791/2025/அ2)

No. VI(2)/10(a)/2026.

திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஊராட்சி ஒன்றியம், வெங்கடசமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.காயத்திரி நவின்குமார் என்பவர் தனது அதிகாரத்தினை தவறாகப் பயன்படுத்துவதாக கிராம ஊராட்சிமன்ற உறுப்பினர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வரப்பெற்றதையடுத்து 1 முதல் 15 வரையிலான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க தெரிவித்து, திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிகளின் ஆய்வாளர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் ந.க.எண்.31109791/2025/அ2, நாள்:30.09.2025-ன்படி வெங்கடசமுத்திரம் ஊராட்சிமன்றத் தலைவருக்கு சட்டப்பூர்வ அறிவிப்பு வழங்கப்பட்டது.

மேற்படி சட்டப்பூர்வ அறிவிப்புக்கு பதிலளிக்க வெங்கடசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவருக்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 சட்டப்பிரிவு 205 (2 முதல் 10)-வரையிலான விதிமுறைகளின்படி, ஆம்பூர் வட்டாட்சியர் தலைமையில் வெங்கடசமுத்திரம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட்டு, ஊராட்சி மன்றத்தின் கருத்தினை பதிவு செய்து அறிக்கை பெறப்பட்டது.

மேற்படி ஊராட்சி மன்றத்தின் கருத்தினையும், குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றையும் ஊராட்சிகளின் ஆய்வாளர்/மாவட்ட ஆட்சியரால் தன்னிச்சையாகவும், ஆழ்ந்தும் பரிசீலனை செய்ததில், வெங்கடசமுத்திரம் ஊராட்சிமன்ற தலைவர் மீது சுமத்தப்பட்ட 1 முதல் 15 வரையிலான குற்றச்சாட்டுகள் மற்றும் துணை குற்றச்சாட்டுகள் நிருபணமாவதாலும், சட்டப்படியான தனது கடமைகளிலிருந்து தவறியதாலும், ஊராட்சிக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியதாலும், அதிகார வரம்பை மீறி செயல்பட்டதாலும்,[ 1 ] VI-2 Ex. (136) 2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராக உள்ளதாலும், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 சட்டப்பிரிவு 205(11)-ன்படி, ஊராட்சிகளின் ஆய்வாளர்/மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் திருமதி. காயத்திரிநவின்குமார் என்பவரை வெங்கடசமுத்திரம் ஊராட்சிமன்றத் தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து அறிவிக்கை வெளியிடப்படுகிறது.

இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழ்தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு சிறப்பு வெளியீடு வெளியிடப்படும் நாள் முதல் அமலுக்கு வருகிறது.

திருப்பத்தூர், க. சிவசௌந்திரவல்லி, க. சிவசௌந்திரவல்லி, 2026 பிப்ரவரி 20.

ஊராட்சிகளின் ஆய்வாளர் / மாவட்ட ஆட்சித்தலைவர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 27 February 2026. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2026-02-27.Extraordinary_136_Part-VI_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2026-02-27.Extraordinary_136_Part-VI_Section-2.