Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of specific character or of particular interest to the public issued by Secretariat Departments. AGRICULTURE - FARMERS WELFARE DEPARTMENT--Fixation of Mill-Wise Fair and Remunerative Price (FRP) for 2025-2026 sugar season in respect of sugar mills in Tamil Nadu. -- REVENUE AND DISASTER MANAGEMENT DEPARTMENT--Revenue Administration – Jurisdiction – Sivaganga District – Mallal Inner Circle in Kalaiyarkovil Revenue Circle – 2 inner villages under Puliyankulam Group and K.Perungarai Group Revenue Villages – Kalaiyarkovil Circle, Mallal Inner Circle – to be separated from Kalaiyarkovil Circle and merged with Manamadurai Circle, Seikkalathur Inner Circle – Order issued. - Notification No. II(1)/AGFW/4/2026.--G.O. Ms. No.31 Agriculture - Farmers Welfare (SC), 9th February 2026. -- Notification No. II(1)/REVDM/5/2026.--G.O. Ms. No.161, Revenue and Disaster Management, Revenue Administration Unit, V.N.-1(1) Division, 11 February 2026.

Published 04 March 2026

Type
Ordinary
Gazette no.
9
Part
Part II
Section
Section 1
Identifier
in.gazette.tamilnadu.2026-03-04.Ordinary_9_Part-II_Section-1
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

GOVERNMENT OF TAMIL NADU

2026

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 2.40 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 9] CHENNAI, WEDNESDAY, MARCH 4, 2026 Maasi 20, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2057

Part II—Section 1

Notifications or Orders of specific character or of particular interest to the

public issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS Pages.

AGRICULTURE - FARMERS WELFARE DEPARTMENT

Fixation of Mill-Wise Fair and Remunerative Price (FRP) for 2025-2026 sugar

season in respect of sugar mills in Tamil Nadu .. .. .. .. .. 10-11 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

[வருவாய் நிருவாகம் – ஆட்சி எல்லை – சிவகங்கை மாவட்டம் – காளையார்கோவில் வருவாய் வட்டத்தில் மல்லல் உள்வட்டம் – புளியங்குளம் குரூப் மற்றும் கே.பெருங்கரை குரூப் வருவாய் கிராமங்களுக்குட்பட்ட 2 உட்கடை கிராமங்களை –காளையார்கோவில் வட்டம், மல்லல் உள்வட்டத்திலிருந்து பிரித்து – மானாமதுரை வட்டம், செய்களத்தூர்

உள்வட்டத்துடன் இணைத்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.] .. .. .. 12-14 DTP—II-1—(9)

[9]10 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1

NOTIFICATIONS BY GOVERNMENT

AGRICULTURE - FARMERS WELFARE DEPARTMENT

Fixation of Mill-Wise Fair and Remunerative Price (FRP) for 2025-2026 sugar season in

respect of sugar mills in Tamil Nadu

[G.O. Ms. No.31 Agriculture - Farmers Welfare (SC), 9th February 2026,

தை 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு - 2057.]

No. II(1)/AGFW/4/2026.—

In exercise of the powers conferred by sub-clause (1) of clause 3 of the Sugarcane (Control) Order, 1966, read with Government of India, Ministry of Consumer Affairs, Food and Public Distribution, Department of Food and Public Distribution Notification No.G.S.R.663 (E)/Ess.Com/Sugarcane, published at pages 1-2 of Part – II Section 3-sub-section (i) of the Gazette of India, Extraordinary, dated the 22nd October 2020, the Governor of Tamil Nadu hereby fixes the Mill-Wise Fair and Remunerative Price (FRP) of sugarcane payable by producer of sugar for the sugar season 2025-2026, calculated based on the average recovery of sugar from sugarcane for the sugar season 2024-2025 as follows :-

MILL WISE FAIR AND REMUNERATIVE PRICE (FRP) FOR SUGAR SEASON 2025-2026

Sl. No. Name of the sugar mills Average recovery of sugar from sugarcane for sugar season 2024-2025 (%) Fair and Remunerative Price @ Rs.3290.50 per Metric Tonne linked to 9.5% sugar recovery with a premium of Rs.34.60 for every increase of 0.1% recovery.
(1) (2) (3) (4)
I CO-OPERATIVE SECTOR
1 The Mohanur Co-operative Sugar Mills Ltd., Mohanur, Namakkal District. 6.80 3290.50
2 The Kallakurichi-I Co-operative Sugar Mills Ltd., Moongilthuraipattu, Kallakurichi District. 8.50 3290.50
3 The Vellore Co-operative Sugar Mills Ltd., Ammundi, Vellore District. 9.27 3290.50
4 Tirupattur Co-operative Sugar Mills Ltd., Kethandapatti, Tirupattur District. 10.31 3570.76
5 Chengalrayan Co-operative Sugar Mills Ltd., Periyasevalai, Villupuram District. 8.41 3290.50
6 Tiruttani Co-operative Sugar Mills Ltd., Tiruvalangadu, Tiruvallur District. 8.12 3290.50
7 M.R.K., Co-operative Sugar Mills Ltd., Sethiathope, Cuddalore District 6.01 3290.50
8 Cheyyar Co-operative Sugar Mills Ltd., Anakkavur, Tiruvannamalai District. 8.01 3290.50
9 Subramaniya Siva Co-operative Sugar Mills Ltd., Gopalapuram, Dharmapuri District. 10.43 3612.28
10 Kallakurichi-II Co-operative Sugar Mills Ltd., Kachirayapalayam, Kallakurichi District. 9.43 3290.50
11 Madurantakam Co-operative Sugar Mills Ltd., Padalam, Chengalpet District. 7.49 3290.50
12 Dharmapuri District Co-operative Sugar Mills Ltd., Palacode, Dharmapuri District. 9.55 3307.80
II PUBLIC SECTOR
1. Arignar Anna Sugar Mills, Kurungulam, Thanjavur District. 7.70 3290.50
2. Perambalur Sugar Mills Ltd., Eraiyur, Perambalur District. 8.60 3290.50
III PRIVATE SECTOR
1 E.I.D. Parry (India) Ltd., Nellikuppam, Cuddalore District. 8.02 3290.50
2 E.I.D. Parry (India) Ltd., Pugalur, Karur District. 8.36 3290.50
3 Rajshree Sugars & Chemicals Ltd., Varadaraj Nagar, Theni District. 8.94 3290.50
4 Rajshree Sugars & Chemicals Ltd., Mundiyampakkam, Villupuram District. 8.26 3290.50
5 Rajshree Sugars & Chemicals Ltd., Semmedu, Villupuram District. 7.95 3290.50
6 Sakthi Sugars Ltd., Sakthi Nagar, Erode District. 6.13 3290.50
7 Sakthi Sugars Ltd., Padamathur, Sivagangai District. 8.84 3290.50
8 Sakthi Sugars Ltd., Poondurai Semur, Erode District. 8.96 3290.50
9 Bannari Amman Sugars Ltd., Sathiyamangalam, Erode District. 7.54 3290.50
10 Bannari Amman Sugars Ltd., Kolunthampattu, Tiruvannamalai District. 8.28 3290.50
11 Bannari Amman Sugars Ltd., Vengur, Kallakurichi District. 8.37 3290.50
12 Ponni Sugars (Erode) Ltd., Odapalli, Namakkal District. 9.36 3290.50
13 Kothari Sugars and Chemicals Ltd., Kattur, Trichy District. 8.83 3290.50
14 Dhanalaksmi Srinivasan Sugars Private Ltd., Udumbiyam, Perambalur District. 8.05 3290.50
15 Thiru Arooran Sugars Ltd., Thirumandangudi, Thanjavur District. 4.79 3290.50
16 Shree Ambika Sugars Ltd., Pennadam, Cuddalore District. 5.01 3290.50
Mar. 4, 2026] TAMIL NADU GOVERNMENT GAZETTE 11

V. DAKSHINAMOORTHY, Agricultural Production Commissioner

and Secretary to Government.

12 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

No. II(1)/REVDM/5/2026.

[வருவாய் நிருவாகம் – ஆட்சி எல்லை – சிவகங்கை மாவட்டம் – காளையார்கோவில் வருவாய் வட்டத்தில் மல்லல் உள்வட்டம் – [வருவாய் நிருவாகம் – ஆட்சி எல்லை – சிவகங்கை மாவட்டம் – காளையார்கோவில் வருவாய் வட்டத்தில் மல்லல் உள்வட்டம் – புளியங்குளம் குரூப் மற்றும் கே.பெருங்கரை குரூப் வருவாய் கிராமங்களுக்குட்பட்ட 2 உட்கடை கிராமங்களை – புளியங்குளம் குரூப் மற்றும் கே.பெருங்கரை குரூப் வருவாய் கிராமங்களுக்குட்பட்ட 2 உட்கடை கிராமங்களை – காளையார்கோவில் வட்டம், மல்லல் உள்வட்டத்திலிருந்து பிரித்து – மானாமதுரை வட்டம், செய்களத்தூர் உள்வட்டத்துடன் காளையார்கோவில் வட்டம், மல்லல் உள்வட்டத்திலிருந்து பிரித்து – மானாமதுரை வட்டம், செய்களத்தூர் உள்வட்டத்துடன் இணைத்தல் – ஆணை வெளியிடப்படுகிறதுஇணைத்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.]

கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:-

[அரசாணை (நிலை) எண்.161, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி-1(1) பிரிவு, 11 பிப்ரவரி 2026, தை 28, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு - 2057]

படிக்கப்பட்டது:-

1. அரசாணை (நிலை) எண்.514, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை [வ.நி-1(1)]த் துறை,

நாள் 26.11.2024.

2. மாவட்ட ஆட்சியர், சிவகங்கை அவர்களிடமிருந்து பெறப்பட்ட கடிதம் எண்.ந.க.எச்2/3344/2020, நாள் 10.12.2024.

3. கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் கடித எண்.

ந.க.பணி-6(1)/01/727/2022, நாள் 25.02.2025.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி-1(1) பிரிவு, ஆணை:-எண்.161, ஆணை:-எண்.161, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி-1(1) பிரிவு, நாள் 11 பிப்ரவரி 2026. நாள் 11 பிப்ரவரி 2026.

மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில், மல்லல் உள்வட்டத்திலுள்ள புளியங்குளம் குரூப் வருவாய் கிராமத்திலுள்ள விளாத்திகுளம், கீழமாயாளி, மேலமாயாளி (ம) புளியங்குளம் ஆகிய 4 உட்கடை கிராமங்கள், கே.பெருங்கரை குரூப் வருவாய் கிராமத்திலுள்ள கே.பெருங்கரை மற்றும் வேலானி ஆகிய 2 உட்கடை கிராமங்கள் மற்றும் கீழப்பிடாவூர் வருவாய் கிராமங்களுக்குட்பட்ட கீழப்பிடாவூர் உட்கடை கிராமம், ஆக மொத்தம் 7 உட்கடை கிராமங்களை சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டத்திலுள்ள செய்களத்தூர் குறுவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

2. மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையரின் கடிதத்தில், மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் திருத்தம் செய்து புளியங்குளம் குரூப், கே.பெருங்கரை குரூப் மற்றும் கீழாப்பிடாவூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட 9 உட்கடை கிராமங்களும் மானாமதுரை வட்டத்திற்கு அருகில் இருப்பதால் நிருவாக நலன் கருதி காளையார்கோவில் வட்டம், மல்லல் உள்வட்டத்திலிருந்து பிரித்து மானாமதுரை வட்டம், செய்களத்தூர் உள்வட்டத்துடன் இணைப்பது தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் அறிக்கையின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு கருத்துரு அனுப்பியுள்ளார்:-

i. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், மல்லல் குறுவட்டத்திலுள்ள புளியங்குளம் குரூப், கே.பெருங்கரை குரூப் மற்றும் கீழப்பிடாவூர் குரூப் வருவாய் கிராமங்கள் மானாமதுரை வட்டத்திற்கு அருகில் இருப்பதால், காளையார்கோவில் வட்டம், மல்லல் குறுவட்டத்திலிருந்து பிரித்து மானாமதுரை வட்டம், செய்களத்தூர் குறுவட்டத்தில் இணைக்க வேண்டும்படி பில்லத்தி வருவாய் கிராமத்தை சார்ந்த திரு.எம்.கிருஷ்ணப்பத்தேவர் த/பெ முத்துராக்கு தேவர் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் WP (MD) No. 24904/2022 நீதிமன்றத்தில் வழக்கும் அதனை தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடுத்திருந்தார்.

ii. இந்நேர்வில், காளையார்கோவில் வட்டம் கடந்த 02.06.2015-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட போது ஒருங்கிணைந்த சிவகங்கை வட்டத்திலிருந்த மேற்காணும் 3 வருவாய் கிராமங்களும் காளையார்கோவில் வட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

மேற்காணும் 3 வருவாய் கிராமங்களை சார்ந்த மக்கள் வட்டத்தலைநகரை வந்தடைவதற்கு 54 கி.மீ பயணம் செய்ய வேண்டி உள்ளதால் 7 கி.மீ அருகாமையில் உள்ள மானாமதுரை வட்டத்தில் சேர்க்க வேண்டும்படி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

iii. மேற்படி, 3 வருவாய் கிராமங்களை காளையார்கோவில் வட்டத்திலிருந்து பிரித்து மானாமதுரை வட்டத்தில் சேர்க்கும் நேர்வில், அரசாணை (நிலை) எண் 279, வருவாய்த்துறை, நாள் 09.06.2003-இல் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி வட்டம் என்ற குறித்த நிலையில் இருப்பதால் மேற்காணும் 3 வருவாய் கிராமங்களையும் காளையார்கோவில் வட்டத்திலிருந்து பிரித்து மானாமதுரை வட்டத்தில் சேர்க்க ஆவண செய்யும்படி 13.02.2024 நாளிட்ட இவ்வாணையரக கடித வாயிலாக அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்பட்டது.

iv. இதன் தொடர்ச்சியாக, மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையின்படி சிவகங்கை மாவட்டம், மல்லல் உள்வட்டத்தில் 3 வருவாய் குரூப்பில் உள்ள 9 உட்கடை கிராமங்களில் 7 உட்கடை கிராமங்கள் மானாமதுரை வட்டம், செய்களத்தூர் குறுவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

Mar. 4, 2026] TAMIL NADU GOVERNMENT GAZETTE 13
வ . எண் மாவட்டம் பிரிக்க உத்தேசிக்கப் பட்டுள்ள வருவாய் கிராமங்கள் பிரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வருவாய் கிராமங்களில் உட்கடை கிராமங்கள் பிரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வருவாய் கிராமங்கள் தற்போது அமைந்துள்ள பஞ்சாயத்து குறிப்பு
(1) (2) (3) (4) (5) (6)
1. சிவகங்கை மாவட்டம் புளியங்குளம் வருவாய் கிராமம் விளாகுளம், பில்லத்தி, கீழ்மாயாளி, மேல் மாயாளி மற்றும் புளியங்குளம்– 5 உட்கடை கிராமங்கள் பில்லத்தி தவிர்த்து 4 உட்கடை கிராமங்கள் மானாமதுரை யூனியனை சார்ந்தது. பில்லத்தி காளையார்கோவில் யூனியனை சார்ந்தது வரிசை எண். 1,2 மற்றும் 3-ல் உள்ள பில்லத்தி மற்றும் என். பெருங்கரை தவிர்த்து 7 உட்கடை கிராமங்கள் மானாமதுரை வட்டம், செய்களத்தூர் உடன் இணைக்கப்- பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 கே.பெருங்கரை கே.பெருங்கரை, என். பெருங்கரை மற்றும் வேளானி – 3 உட்கடை கிராமங்கள் என்.பெருங்கரை தவிர்த்து மற்ற 2 கிராமங்கள் மானாமதுரை யூனியனை சார்ந்தது. என்.பெருங்கரை காளையார்கோவில் யூனியனை சார்ந்தது.
3 கீழாப்பிடாவூர் கீழாப்பிடாவூர் - 1 மானாமதுரை யூனியனை சார்ந்தது.

v. இதன் தொடர்ச்சியாக, 10.12.2024 நாளிட்ட சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்களின் கடிதத்தில், புளியங்குளம், கீழப்பிடாவூர் மற்றும் கே.பெருங்கரை வருவாய் கிராமத்தில் உள்ள 9 உட்கடை கிராமங்கள் என்பதற்கு பதிலாக 7 உட்கடை கிராமங்கள் காளையார்கோவில் வட்டம், மல்லல் குறுவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு மானாமதுரை வட்டம் செய்களத்தூர் குறுவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும், விடுபட்ட 2 உட்கடை கிராமங்களான புளியங்குளம் வருவாய் கிராமத்தில் உள்ள பில்லத்தி உட்கடை கிராமம் மற்றும் கே.பெருங்கரை வருவாய் கிராமத்தில் உள்ள என்.பெருங்கரை எனும் உட்கடை கிராமத்தினையும் மானாமதுரை வட்டம், செய்களத்தூர் குறுவட்டத்தில் இணைத்து திருத்திய அரசாணை வழங்கும்படி கோரப்பட்டுள்ளது.

vi. இந்நேர்வில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்களின் கோரிக்கையானது, தொடர்புடைய அறிக்கைகள் மற்றும் அரசாணைகளுடன் பரிசீலனை செய்யப்பட்டதில், அரசாணை (நிலை) எண். 279, வருவாய்த்துறை, நாள் 09.06.2003-ன்படி பிரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வட்ட எல்லையானது 2 அல்லது 3 ஊராட்சி ஒன்றியங்களை முழுவதுமாக கொண்டிருக்க வேண்டுமெனவும், அது பொதுமக்களின் சங்கடத்திற்கு காரணமாக அமையும் என்பதால் எந்த ஒரு ஊராட்சி ஒன்றியமும் 2 வட்ட எல்லைக்குள் சேர்க்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

vii. மேற்காணும் கோரிக்கையில், புளியங்குளம் கிராமத்திலுள்ள 5 உட்கடை கிராமங்கள், கே.பெருங்கரை கிராமத்தில் உள்ள 3 உட்கடை கிராமங்கள் கீழாப்பிடாவூர் கிராமத்தில் உள்ள கீழாப்பிடாவூர்–1 உட்கடை கிராமங்கள் சேர்த்து மொத்தம் 9 உட்கடை கிராமங்கள் உள்ளது. இவற்றில் புளியங்குளம் கிராமத்தில் உள்ள பில்லத்தி மற்றும் கே.பெருங்கரை கிராமத்தில் உள்ள என்.பெருங்கரை 2 உட்கடை கிராமங்கள் காளையார்கோவில் யூனியனாகவும், மீதமுள்ள 7 உட்கடை கிராமங்கள் மானாமதுரை யூனியனாகவும் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியாகவும் அமைந்துள்ளது.

viii. இவற்றுள், ஆட்சி எல்லை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு உட்படுத்தி பார்த்தலில் 1-க்கு மேற்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள் ஒரு வட்ட எல்லைக்குள் அமைக்கப்படுகிறது. அதாவது மானாமதுரை வட்டத்தில் காளையார்கோவில் 1 யூனியனாகவும், மானாமதுரை 1 யூனியனாகவும் அமையும். 9 உட்கடை கிராமங்களில் 2 உட்கடை கிராமங்களும் முழுவதுமாக காளையார்கோவில் யூனியனாகவும், 7 உட்கடை கிராமங்கள் மானாமதுரை யூனியனாகவும் அமைகிறது என்பதால் 1 ஊராட்சி ஒன்றியத்தின் பகுதிகள் 2 வட்ட எல்லைக்குள் அமையவில்லை என தெரிய வருகிறது.

ix. எனவே, மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் திருத்தம் செய்து புளியங்குளம், கே.பெருங்கரை மற்றும் கீழாப்பிடாவூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட 9 உட்கடை கிராமங்களும் மானாமதுரை வட்டத்திற்கு அருகில் இருப்பதால் நிருவாக நலன் கருதி காளையார்கோவில் வட்டம், மல்லல் உள்வட்டத்திலிருந்து பிரித்து மானாமதுரை வட்டம், செய்களத்தூர் உள்வட்டத்துடன் இணைக்க ஆவண செய்யும்படி அரசிடம் கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.

3. மாவட்ட ஆட்சித் தலைவர், சிவகங்கை மாவட்டம் அறிக்கையின் அடிப்படையிலும் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையரின் பரிந்துரையினையும் ஏற்று, மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில், பத்தி 3(i)-ஐ திருத்தம் செய்து, புளியங்குளம் குரூப், கே.பெருங்கரை குரூப் மற்றும் கீழாப்பிடாவூர் வருவாய் கிராமங்களுக்குட்பட்ட 7 உட்கடை கிராமங்களுடன் புளியங்குளம் குரூப் வருவாய் கிராமத்திலுள்ள பில்லத்தி மற்றும் கே.பெருங்கரை குரூப் வருவாய் கிராமத்திலுள்ள என்.பெருங்கரை ஆகிய 2 உட்கடை கிராமங்களையும் மானாமதுரை வட்டத்திற்கு அருகில் இருப்பதால் நிருவாக நலன் கருதி காளையார்கோவில் வட்டம், மல்லல் குறுவட்டத்திலிருந்து பிரித்து மானாமதுரை வட்டம், செய்களத்தூர் குறுவட்டத்துடன் இணைக்கலாம் (பிற்சேர்க்கை I-இல் தெரிவித்துள்ளவாறு)

(பிற்சேர்க்கை I-இல் தெரிவித்துள்ளவாறு) என அரசு முடிவு செய்து, அவ்வாறே ஆணையிடுகிறது.

4. புளியங்குளம் குரூப், கே.பெருங்கரை குரூப் மற்றும் கீழாப்பிடாவூர் வருவாய் கிராமங்களுக்கு 1 கிராம நிருவாக அலுவலர் மற்றும் 1 கிராம உதவியாளர் மட்டுமே பணிபுரிந்து வருவதால் அவ்விரு பணியிடங்களையும் காளையார்கோவில் வட்டம், மல்லல் உள்வட்டத்திலிருந்து, மானாமதுரை வட்டம், செய்களத்தூர் குறுவட்டத்திற்கு மாற்றம் செய்யப்படுகிறது. மேலும், அப்பணியிடங்களுக்கு சம்பளம் பெற்று வழங்கும் அலுவலரின் குறியீட்டில் (DDO Code) ஏற்படும் மாற்றங்களை காலதாமதமின்றி உரிய முறையில் ஊதியம் பெற நிதித்துறையில் வெளியிடப்பட்ட அரசு கடித எண் E.1628150/ஊ.பி/2024-1, நாள் 14.05.2024-இல்14 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1 தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி களஞ்சியம் இணையதளத்தில் பணியிடங்களை மாற்றம் செய்யுமாறு கருவூலம் மற்றும் கணக்குத் துறைக்கு அறிவுறுத்தப்படுகிறது.

5. வருவாய் வட்டங்களில் மறுபரவலமர்த்தல் மூலம் சீரமைப்பது குறித்து மேலே பத்தி 3-இல் தெரிவிக்கப்பட்டுள்ள ஆணையினை செயல்படுத்த தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர், சிவகங்கை மாவட்டம் ஆகியோர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பிற்சேர்க்கை–Iபிற்சேர்க்கை–I

புளியங்குளம் குரூப், கே.பெருங்கரை குரூப் மற்றும் கீழாப்பிடாவூர் வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட 9 உட்கடை கிராமங்களை, காளையார்கோவில் வட்டம், மல்லல் உள்வட்டத்திலிருந்து பிரித்து மானாமதுரை வட்டம், செய்களத்தூர் உள்வட்டத்துடன் கீழ்க்கண்டவாறு இணைக்கப்படுகிறது.

வ . எண் வருவாய் கிராமம் அரசாணை (நிலை) எண் 514, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை [வ.நி.1(1)] துறை, நாள் 26.11.2024-இல் தெரிவித்துள்ளபடி இணைக்கப்பட்டுள்ள உட்கடை கிராமங்கள் அரசாணையில் திருத்தம் செய்து இணைக்கப்பட வேண்டிய உட்கடை கிராமங்கள்
(1) (2) (3) (4)
1 புளியங்குளம் 1. A.விளாக்குளம் 1. A.விளாக்குளம்
- 2. கீழமாயாளி 2. கீழமாயாளி
- 3. மேலமாயாளி 3. மேலமாயாளி
- 4. புளியங்குளம் 4. புளியங்குளம்
- - 5. பில்லத்தி
2 கே.பெருந்துரை 1. கே.பெருங்கரை 1. கே.பெருங்கரை
- 2. வேலானி 2. வேலானி
- - 3. என்.பெருங்கரை
3 கீழாப்பிடாவூர் 1. கீழாப்பிடாவூர் 1. கீழாப்பிடாவூர்
மொத்தம் மொத்தம் 7 உட்கடை கிராமங்கள் 7 உட்கடை கிராமங்கள் 9 உட்கடை கிராமங்கள் 9 உட்கடை கிராமங்கள்

பெ. அமுதா,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 04 March 2026. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2026-03-04.Ordinary_9_Part-II_Section-1/. Archive identifier in.gazette.tamilnadu.2026-03-04.Ordinary_9_Part-II_Section-1.