2026
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Re. 0.80 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 174] CHENNAI, FRIDAY, MARCH 13, 2026 Maasi 29, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2057
Part VI—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Heads of Departments, etc.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
COLLECTORS AND LOCAL AUTHORITIES
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர்
பதவி நீக்கம் குறித்த அறிவிப்புபதவி நீக்கம் குறித்த அறிவிப்பு
(ந.க.எண்.அ2/1211/2024)
No. VI(2)8(a)/2026.
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், சாத்தூர் ஊராட்சியில் தீர்மான பதிவேடு மற்றும் இதர பதிவேடுகள் 2021-2022 முதல் 2023-2024 வரை உதவி இயக்குநர்(தணிக்கை) மற்றும் உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) அவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, சாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி நிர்வாகத்தில் கூடுதலாக செலவினம் மேற்கொண்டதும், ஊராட்சி பொது நிதியில் மேற்கொள்ளப்பட்ட செலவினங்களுக்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட விவரமின்றி தன்னிச்சையாக செயல்பட்டுள்ளது அறியவருவதாலும், பெருமளவில் தெருவிளக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் அரசாணைகள் மற்றும் நெறிமுறைகள் பின்பற்றாமல் செயல்பட்டதும், முறையாக ஊராட்சி மன்ற கூட்டங்கள் கூட்டப்படாததாலும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 ன்படி மேல்நடவடிக்கை தொடர அவசியம் ஏற்பட்டது.
சாத்தூர் ஊராட்சி நிர்வாகத்தின் நலன்கருதியும் பொதுமக்கள் நலன்கருதியும் இவ்வூராட்சி மன்றத்தலைவர் அதிகாரப்பூர்வமான குற்றச்சாட்டுகளுக்கு இடமளிக்கும் வகையில் செயல்பட்டுள்ளது உறுதியாகிறது.
எனவே, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994ன் படியும் ஊராட்சியின் கருத்தினை பரிசீலனை செய்த பின்பும் எனது உளத்தேர்வின் படியும் என்னால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டதில் குற்றச்சாட்டுகள் மறுத்து உரைப்பதற்கு போதுமான ஆதாரங்கள் எடுத்துரைக்க தவறியதாலும் அரசு விதிமுறைகளை மீறி தன்னிச்சையாக செயல்பட்டுள்ளதாக எனக்கு தெரிய வருவதால் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205(11)ல் உள்ள ஊராட்சிகளின் ஆய்வாளர்/ மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி சாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு.சா.மா.சேட்டு என்பவரை ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்து அறிவிக்கப்படுகிறது.
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 262(1)-ன் கீழ் இந்த பணி நீக்கம் குறித்த அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழில் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாள் முதல் அமலுக்கு வரும்.
இராணிப்பேட்டை, ஜெ. யு. சந்திரகலா,ஜெ. யு. சந்திரகலா, 2026 மார்ச் 10. ஊராட்சிகளின் ஆய்வாளர் / மாவட்ட ஆட்சித்தலைவர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
VI-2 Ex. (174)