Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments.- Tamil Supplement HOUSING AND URBAN DEVELOPMENT DEPARTMENT -- TOURISM, CULTURE AND RELIGIOUS ENDOWMENTS DEPARTMENT--Notifications - G.O.Ms.No. 72, Department of Housing and Urban Development [UD. 4(2)], 5th March 2026. -- G.O.Ms.No. 81, Department of Housing and Urban Development [UD. 4(2)], 10th March 2026. -- G.O. Ms. No.155, Tourism, Culture and Religious Endowments (C2), 6th March 2026.

Published 22 April 2026

Type
Ordinary
Gazette no.
16
Part
Part II
Section
Section 2 T Sup
Identifier
in.gazette.tamilnadu.2026-04-22.Ordinary_16_Part-II_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© தமிழ்நாடு அரசு 2026

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை: ரூ. 1.60 காசு[விலை: ரூ. 1.60 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 16] சென்னை, புதன்கிழமை, ஏப்ரல் 22, 2026 சித்திரை 9, பராபவ, திருவள்ளுவர் ஆண்டு-2057

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அ றிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை.

அறிவிக்கைகள்

[அரசாணை (நிலை) எண். 72, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ4(2)]த் துறை, 5 மார்ச் 2026.] 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 17.04.1974- ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2 இல், 218 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிருவாகத் துறையின் II(2) RUL/2142/74 ஆம் எண் அறிவிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள சீர்காழி உள்ளூர் திட்டமிடல் பகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களைச் சேர்ப்பதற்கான அவரது நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார்.

வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்

59. புங்கனூர்

19. ஆர்ப்பாக்கம்

58. மருதங்குடி

20. உமையாள்பதி

2 இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள் மேற்சொன்ன பகுதிகளிலுள்ள யாதொரு குடியிருப்பாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார அமைப்பு அல்லது நிறுவனம் சேர்க்கக் கருதப்பட்டுள்ள பகுதிகள் குறித்து யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின் அதனை எழுத்து வடிவில் அரசிடம் அளிக்கலாம் என்றும் மேற்சொன்ன கால அளவிற்குள் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எவையேனும் பெறப்படுமாயின், அவை மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் படி மேற்கொண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அரசு அவற்றை பரிசீரிலிக்கும் என்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எவையேனுமிருப்பின் அவற்றை எழுத்துவடிவில், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை - 600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

[அரசாணை (நிலை) எண். 81, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ4(2)]த் துறை, 10 மார்ச் 2026.] 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10-ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், பெரியகுளம் உள்ளூர் திட்டமிடல் பகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களை இதனால் சேர்ப்பதுடன். 10.04.1974-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2 இல், 209-ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிருவாகத் துறையின் II(2)/RUL/2020/74-ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார். மேலும், அவ்வாறு செய்வதற்கான DTP—II-2-(16) (T Sup)—1

[ 1 ]2 நோக்கம், மேற்சொன்ன சட்டத்தின் 10-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியின் கீழ் கோரப்பட்டுள்ளவாறு, ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

திருத்தம்

மேற்சொன்ன அறிவிக்கையில், அட்டவணையின், நெடும்பத்தி (3) இல் "37.கீழவடகரை" என்ற பதிவிற்குப் பின்னர், பின்வரும் பதிவுகள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் அதாவது:-

"07. மேல்மங்கலம்

08. காமாட்சி புரம்

09. எண்டப்புளி

14. தாமரைக்குளம்

காகர்லா உஷா,காகர்லா உஷா, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,

இயக்குநர் (கூ.பொ),

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை

அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண்.155, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் (C2)த், துறை, 6 மார்ச் 2026.] 1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 6 ஆம் பிரிவைச் சேர்ந்த (3) மற்றும் (5) ஆம் உட்பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தை பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டு இதனால் மாற்றியமைக்கிறார்.

தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் உறுப்பினர்கள்:-

அரசுத் தரப்பு உறுப்பினர்கள்
1. திரு. வாகை சந்திரசேகர் தலைவர்
2 அரசு செயலாளர், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை உறுப்பினர்
3. அரசு செயலாளர், நிதித் துறை உறுப்பினர்
4. தலைவர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் அல்லது அவரின் நேமகதாரர் உறுப்பினர்
5. உறுப்பினர் செயலர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் உறுப்பினர்
6. இயக்குநர், கலை மற்றும் பண்பாட்டு இயக்ககம் உறுப்பினர். செயலர்
7. செயலாளர், தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம் உறுப்பினர்
அரசு சாரா உறுப்பினர்கள்
8. திரு. M.R.M. பாலசுப்ரமணியன், இசை நாடகக் கலைஞர், மதுரை மாவட்டம் உறுப்பினர்
9. பத்மஸ்ரீ R. வேல்முருகன், தப்பாட்டக் கலைஞர். மேட்டமலை, விருதுநகர் மாவட்டம் உறுப்பினர்
10. திரு. கருங்குயில் R.கணேசன், நாட்டுப்புறப் பாடகர், ஒரத்தநாடு உறுப்பினர்
11. திரு. D.ஜெகநாதன், வில்லுப்பாட்டுக் கலைஞர், தென்காசி மாவட்டம் உறுப்பினர்
12. செல்வி M.உமா ராணி, தப்பாட்டக் கலைஞர், ஸ்ரீவில்லிபுத்தூர் உறுப்பினர்
13. திருக்காட்டுப்பள்ளி திரு. T.J. சுப்பிரமணியம், நாதஸ்வரக் கலைஞர், தஞ்சாவூர் மாவட்டம். உறுப்பினர்
14. திரு. ஆக்காட்டி K. ஆறுமுகம், நாட்டுப்புறப் பாடகர், புதுக்கோட்டை மாவட்டம். உறுப்பினர்
15. திரு.J.விஜயகுமார், ஜிக்காட்டக் கலைஞர், கோயம்புத்தூர் மாவட்டம். உறுப்பினர்
16. திரு. R.சுதாகர், நாதஸ்வரக் கலைஞர், திருப்பத்தூர் மாவட்டம். உறுப்பினர்
17. திரு. P.S.முருகசாமி, பம்பை வாத்தியக் கலைஞர், தர்மபுரி மாவட்டம். உறுப்பினர்
3

K. மணிவாசன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,

இயக்குநர் (கூ.பொ),

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 22 April 2026. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2026-04-22.Ordinary_16_Part-II_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2026-04-22.Ordinary_16_Part-II_Section-2-T-Sup.