Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Tamil Nadu Acts and Ordinances - Tamil Supplement ACTS (TAMIL) - Act No. 07/2026.--An Act further to amend the Tamil Nadu Agricultural Produce Marketing (Regulation) Act, 1987. -- Act No. 08/2026.--An Act further to amend the Tamil Nadu Schools (Regulation of Collection of Fee) Act, 2009. -- Act No. 09/2026.--An Act further to amend the Tamil Nadu Panchayats Act, 1994. -- Act No. 10/2026.--An Act further to amend the Tamil Nadu Prevention of Begging Act, 1945. -- Act No. 11/2026.--An Act further to amend the Tamil Nadu Co-operative Societies Act, 1983.

Published 22 July 2026

Type
Ordinary
Gazette no.
29
Part
Part IV
Section
Section 2 T Sup
Identifier
in.gazette.tamilnadu.2026-07-22.Ordinary_29_Part-IV_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2026 விலை: ரூ. 4.00 காசுவிலை: ரூ. 4.00 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 29] சென்னை, புதன்கிழமை, ஜூலை 22, 2026 ஆடி 6, பராபவ, திருவள்ளுவர் ஆண்டு-2057

பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2026 ஆம் ஆண்டு மார்ச்சு திங்கள் 18 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண். 07/2026. 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்திய குடியரசின் எழுபத்து ஆறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு 1.(1) இந்தச் சட்டம், 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம் என வழங்கப்பெறும்.

மற்றும் தொடக்கம்.

(2) இது, 2025 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 30 ஆம் நாளன்று

நடைமுறைக்கு வந்துவிட்டதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

33-ஆம் தமிழ்நாடு சட்டம்

27/1989.

பிரிவிற்கான திருத்தம்.

2. 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) சட்டத்தின் (இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டம் என குறிப்பிடப்படும்) 33-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவில் உள்ள வரம்புரையில், "பதினான்கு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள்" எனும் சொற்றொடருக்காக, "பதினைந்து ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

29—IV-2-(T-Sup)—1

[1]2 செல்லுந்தன்மை. 3. முதன்மைச் சட்டத்தில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், 2025 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 30 ஆம் நாளிலிருந்தும் மற்றும் அது முதற்கொண்டும், சந்தைக் குழுக்களின் தனி அலுவலரின் அதிகாரங்களைச் செலுத்துகிற மற்றும் செயற்பணிகளை நிறைவேற்றுகிற நபர் ஒவ்வொருவரும், இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான, முதன்மைச் சட்டத்தின் 33 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்படி அத்தகைய தனி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளதாகக் கொள்ளப்படுதல் வேண்டும் மற்றும் 2025 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 30 ஆம் நாள் தொடங்கியும், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்தச்சட்டம் வெளியிடப்படும் தேதியுடன் முடிவடையும் காலஅளவின் போது கூறப்பட்ட தனி அலுவலர்களால் செய்யப்பட்ட செயல் எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான, முதன்மைச் சட்டத்தின்படி செல்லுந்தன்மையுடன் செய்யப்பட்டிருப்பதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

ப. சுமதிப. சுமதி,, அரசு செயலாளர், சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார், இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

3

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2026 ஆம் ஆண்டு மார்ச்சு திங்கள் 18 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண். 08/2026.

2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிகள் (கட்டணம் வசூசூலிப்பதை முறைப்படுத்துதல்) சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்திய குடியரசின் எழுபத்து ஆறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக;-

குறுந்தலைப்பு

மற்றும் தொடக்கம்.

1. (1) இந்தச் சட்டம், 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிகள் (கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இது, மாநில அரசு, அறிவிக்கை வாயிலாகக் குறிப்பிடும்

அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

2 ஆம் 22/2009.

பிரிவிற்கான

திருத்தம்.

2. 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிகள் (கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துதல்) சட்டத்தின் (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படும்) 2 ஆம் பிரிவின், (j) கூறில்,-

(1) "அல்லது ஒழுங்குமுறைச் சட்டத் தொகுப்பு" எனும்

சொற்றொடரானது, விட்டுவிடப்படுதல் வேண்டும்;

(2) விளக்கத்தின் கீழுள்ள (1) ஆம் கூறானது, விட்டுவிடப்படுதல்

வேண்டும்.

5 ஆம் 3. முதன்மைச் சட்டத்தின் 5 ஆம் பிரிவில்,-

பிரிவிற்கான (1) (2) ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக

திருத்தம்.

அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

''(2) குழுவானது, பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டிருத்தல்

வேண்டும், அவர்களாவர்:-

(a) மெட்ராஸ் உயர்நீதிமன்ற தலைமை

- தலைமையாளர்;

நீதிபதியுடன் கலந்தாலோசித்து, அரசால் நியமிக்கப்படும் ஓர் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி.

(b) பள்ளிக் கல்வி இயக்குநர் - பதவிவழி உறுப்பினர்;

(c) தனியார் பள்ளிகள் இயக்குநர் - பதவிவழி உறுப்பினர்;

(d) தொடக்கக் கல்வி இயக்குநர் - பதவிவழி உறுப்பினர்;

(e) இணை தலைமைப் பொறியாளர்

(கட்டடங்கள்), பொதுப்பணித்துறை

- பதவிவழி உறுப்பினர்;

(f ) அரசால் நியமிக்கப்படக்கூடிய, தமிழ்நாடு - உறுப்பினர்;

மாநில பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் ஓர்

உறுப்பினராக உள்ள பெற்றோர்

(g) பள்ளிக் கல்வித்துறையின் அரசு துணைச் - பதவிவழி உறுப்பினர்

செயலாளர் படிநிலைக்குக் குறையாத ஓர் அலுவலர்.

செயலர்.";

4

(2). (4) ஆம் உட்பிரிவிற்கு பின்பு, பின்வரும் உட்பிரிவுகளானவை

சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:-

''(4-A). (2) ஆம் உட்பிரிவின் (f ) கூறின்கீழ் நியமிக்கப்பட்ட உறுப்பினரானவர், அவர் நியமனம் செய்யப்பட்ட தேதியிலிருந்து மூன்றாண்டு காலஅளவிற்குப் பதவியில் இருத்தல் வேண்டும்:

வரம்புரையாக, நியமிக்கப்பட்ட உறுப்பினரின் பதவியானது, ஏதேனும் ஒரு காரணத்திற்காக, காலியிடமாகும் போது, அவருடைய பதவிக்குப் புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படுதல் வேண்டும், மேலும், அத்தகைய உறுப்பினர் யாருடைய பதவி இடத்திற்கு நியமிக்கப்படுகிறாரோ, அந்த உறுப்பினர் பதவி காலியிடம் ஏற்படாவிட்டால், அவர் எவ்வளவு காலம் பதவியில் நீடிக்கத் தகுதிபெற்றிருப்பாரோ, அதுவரையில் அவர் பதவி வகிப்பார்:

மேலும் வரம்புரையாக, அத்தகைய உறுப்பினர், தமிழ்நாடு மாநில பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் ஓர் உறுப்பினராக இருப்பது அற்றுப்போன தேதியிலிருந்து, மேற்சொன்ன குழுவின் ஓர் உறுப்பினராக இருப்பதும் அற்றுப்போதல் வேண்டும்.

(4-B). (2) ஆம் உட்பிரிவின் (f ) கூறின்கீழ் நியமிக்கப்பட்ட உறுப்பினர், தம் கைப்பட எழுதி எழுத்து மூலமாக கடிதத்தை அரசிற்கு முகவரியிட்டு, தனது பதவி விலகலைத் தெரிவிக்கலாம். ஆனால் அவரது பதவி விலகலானது, அரசால் ஏற்றுக் கொள்ளப்படும் வரையில் அவர் அப்பதவியைத் தொடர்ந்து வகித்து வருதல் வேண்டும்.

(4-C). (2) ஆம் உட்பிரிவின் (f ) கூறின்கீழ் நியமிக்கப்பட்ட உறுப்பினர், அப்பதவிக்குத் தகுதியற்றவராக இருப்பதாகவோ, அல்லது தவறான நடத்தை அல்லது கவனக்குறைவாக இருந்தாலோ அவரைப் பதவியிலிருந்து நீக்குவது பொருத்தமானதாக இருக்குமென அரசிற்கு தோன்றினால், நியமிக்கப்பட்ட உறுப்பினருக்கு விளக்கம் அளிப்பதற்கான நியாயமான வாய்ப்பு அளித்த பின்பு, அரசானது, அத்தகைய நியமிக்கப்பட்ட உறுப்பினரைப் பதவியிலிருந்து எந்த நேரத்திலும் நீக்கம் செய்யலாம்.

(4-D). (2) ஆம் உட்பிரிவின் (f ) கூறின்கீழ் நியமிக்கப்பட்ட உறுப்பினர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய அமர்வுக் கட்டணம் மற்றும் பிற படிகளைப் பெறுவதற்குத் தகுதியுடையவராவார்.".

6 ஆம்

4. முதன்மைச் சட்டத்தின் 6 ஆம் பிரிவில்,-

பிரிவிற்கான

திருத்தம்

(1) (3) ஆம் உட்பிரிவில், "பதினைந்து நாள்" எனும் சொற்றொடருக்காக, "முப்பது நாள்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) (5) ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

''(5) குழுவினால் நிருணயிக்கப்பட்ட கட்டணமானது தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்தும்; மற்றும் அது மூன்று கல்வியாண்டுகளுக்குச் செல்லுபடியாதல் வேண்டும்.";

(3) அவ்வாறு, மாற்றாக அமைக்கப்பட்ட (5) ஆம் உட்பிரிவிற்குப் பின்பு, பின்வரும் உட்பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

5

''(5-A) தனியார் பள்ளி ஒவ்வொன்றும், (5) ஆம் உட்பிரிவின் கீழ் நிருணயிக்கப்பட்ட கட்டணத்தின் செல்லுபடியாகும் காலம் முடிவடைவதற்கு முன்பு, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கூர்ந்தாய்வுக் கட்டணத்துடன் சேர்த்து அத்தகைய வடிவில், அத்தகைய நேரத்திற்குள் கட்டண சீராய்விற்காக விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்தல் வேண்டும்.".

(ஆளுநரின் ஆணைப்படி)

ப. சுமதிப. சுமதி,, அரசு செயலாளர், சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார், இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

6

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2026 ஆம் ஆண்டு மே திங்கள் 16 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண். 09/2026.

1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தை மேலும் 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்திய குடியரசின் எழுபத்து ஆறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு

1. (1) இந்தச் சட்டம், 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள்

மற்றும்

(திருத்தச்) சட்டம் என்று வழங்கப்பெறும்.

தொடக்கம்.

(2) இது, 2026 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 06 ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

261-A

தமிழ்நாடு சட்டம் பிரிவிற்கான

21/1994.

திருத்தம்.

2. 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 261-A ஆம் பிரிவில், "2026 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 05 ஆம் நாள் வரையில்" எனும் சொற்றொடருக்காக, "2026 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 05 ஆம் நாள் வரையில்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

செல்லுந்தன்மை. 3. முதன்மைச் சட்டத்தில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், 2026 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 06 ஆம் நாளன்றும் அதுமுதற்கொண்டும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளைத் தவிர்த்து, பிற கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியக் குழுக்கள் அல்லது மாவட்ட ஊராட்சிகளின் அதிகாரங்களைச் செலுத்துவதற்கும் அவற்றின் செயற்பணிகளைப் புரிவதற்கும், அரசால் நியமிக்கப்பட்ட தனி அலுவலர்கள், இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான, முதன்மைச் சட்டத்தின் 261-A பிரிவின்கீழ் அத்தகைய தனி அலுவலர்களாக பணி அமர்த்தப்பட்டுள்ளதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்; மற்றும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 06 ஆம் நாள் தொடங்கியும் அதுமுதற்கொண்டும், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில், இந்தச் சட்டம் வெளியிடப்படும் தேதியுடன் முடிவடையும் கால அளவின்போது, கூறப்பட்ட தனி அலுவலர்களால் செய்யப்பட்ட செயல் எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான, முதன்மைச் சட்டத்தின்படி செல்லுந்தன்மையுடன் செய்யப்பட்டிருப்பதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

ப. சுமதிப. சுமதி,, அரசு செயலாளர், சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார், இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

7

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2026 ஆம் ஆண்டு மே திங்கள் 16 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண். 10/2026.

1945 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிச்சையெடுப்பதைத் தடுத்தல் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்திய குடியரசின் எழுபத்து ஆறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு

மற்றும் பிச்சையெடுப்பதைத் தடுத்தல் (திருத்தச்) சட்டம் என்று வழங்கப்படும்.

தொடக்கம்.

(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

4 ஆம் XIII/1945.

பிரிவிற்கான

திருத்தம்.

2. 1945 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிச்சையெடுப்பதைத் தடுத்தல் சட்டத்தின், (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படும்) 4 ஆம் பிரிவின், இறுதியில் உள்ள, "மற்றும் 1898 ஆம் ஆண்டு தொழுநோயாளிகள் சட்டத்தின் (மையச் சட்டம் III/1898) 3 ஆம் பிரிவின்கீழ் ஏற்படுத்தப்பட்ட தொழுநோயாளர் காப்பகம் எதனையும், மாநில அரசானது, 2 ஆம் பிரிவின் (2) ஆம் கூறின்கீழ் ஒரு சிறப்பு இல்லமாக அறிவிக்கை செய்திருப்பின், 10-A, 12-A மற்றும் 23 ஆம் பிரிவுகளின் வகைமுறைகள் பொருத்துதல் வேண்டும்" எனும் சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.

6 ஆம் 3. முதன்மைச் சட்டத்தின் 6 ஆம் பிரிவில், "அல்லது 12-A

பிரிவிற்கான பிரிவு" எனும் சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.

திருத்தம்.

10 ஆம்

பிரிவிற்கான

திருத்தம்.

4. முதன்மைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவில், "ஒரு தொழுநோயாளியாக இருக்கும் ஒரு நபரைத் தவிர மற்றவர்" எனும் சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.

10-A ஆம் 5. முதன்மைச் சட்டத்தின் 10-A ஆம் பிரிவானது

பிரிவை விட்டுவிடப்படுதல் வேண்டும்.

விட்டுவிடுதல்.

11 ஆம்

பிரிவிற்கான

திருத்தம்.

6. முதன்மைச் சட்டத்தின் 11 ஆம் பிரிவில், "8, 9, 10 அல்லது 10-A ஆம் பிரிவு" எனும் சொற்றொடருக்காக, "8, 9 அல்லது 10 ஆம் பிரிவு" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

12-A ஆம் 7. முதன்மைச் சட்டத்தின் 12-A ஆம் பிரிவானது

பிரிவை விட்டுவிடப்படுதல் வேண்டும்.

விட்டுவிடுதல்.

15 ஆம்

பிரிவிற்கான

திருத்தம்.

8. முதன்மைச் சட்டத்தின் 15 ஆம் பிரிவின், (2) ஆம் உட்பிரிவிற்கான வரம்புரையில், "ஒரு தொற்று நோயுள்ள தொழுநோயாளி அல்லது" எனும் சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.

8

23 ஆம்

9. முதன்மைச் சட்டத்தின் 23 ஆம் பிரிவில்,-

பிரிவிற்கான

(1) ஓரத்தலைப்பில், "தொழுநோயாளிகள் மற்றும்" எனும்

திருத்தம்.

சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.

(2) (2) ஆம் உட்பிரிவில்,-

(a) (a) கூறு விட்டுவிடப்படுதல் வேண்டும்.

(b) (b) கூறில், "தொழுநோயாளி தவிர" எனும்

சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.

(3) (3) ஆம் உட்பிரிவில்,-

(a) இரண்டு இடங்களில் காணப்படுகின்ற "தொற்று நோயுள்ள ஒரு தொழுநோயாளி அல்லது" எனும் சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்;

(b) (i) கூறு விட்டுவிடப்படுதல் வேண்டும்.

(4) (4) ஆம் உட்பிரிவில், "1898 ஆம் ஆண்டு தொழுநோயாளிகள் சட்டம் (மையச் சட்டம் III/1898) அல்லது", "1898 ஆம் ஆண்டு தொழுநோயாளிகள் சட்டத்தின் (மையச் சட்டம் III/1898) 3ஆம் பிரிவின் கீழ் ஏற்படுத்தப்பட்ட தொழுநோயாளர் காப்பகம் அல்லது ஏதேனும்", "அத்தகைய தொழுநோயாளர் காப்பகத்தின் கண்காணிப்பாளர் அல்லது", "10-A பிரிவு அல்லது 12-A பிரிவின்படி அல்லது", மற்றும் இரு இடங்களில் காணப்படுகின்ற "நேர்விற்கேற்ப" எனும் சொற்றொடர்களானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

ப. சுமதிப. சுமதி,, அரசு செயலாளர், சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார், இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

9

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2026 ஆம் ஆண்டு மே திங்கள் 30 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண். 11/2026.

1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்திய குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச்

மற்றும் சங்கங்கள் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

தொடக்கம்.

(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு

2 ஆம் பிரிவிற்கான 2. 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின்

சட்டம் 30/1983.

திருத்தம்.

(இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படும்)

2 ஆம் பிரிவின் (1) ஆம் கூறின் முடிவில், "மற்றும் ஓர் இடைக்கால

செயலாட்சியரை உள்ளடக்கும்" எனும் சொற்றொடரானது

சேர்க்கப்படுதல் வேண்டும்.

88 ஆம் 3. முதன்மைச் சட்டத்தின் 88 ஆம் பிரிவில்,–

பிரிவிற்கான

திருத்தம்.

(1) (1)-ஆம் உட்பிரிவின், முதல் மற்றும் இரண்டாம் வரம்புரைகளுக்காக, பின்வரும் வரம்புரைகள் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:–

"வரம்புரையாக, பதிவாளரின் கருத்தில், அத்தகைய பதிவு பெற்ற ஏதேனும் சங்கத்தின் குழுமத்தை மேலும் தொடர்வது, கூறப்பட்ட சங்கத்தின் நலனுக்கு தீங்கிழைப்பதாக இருக்கும் எனில், பதிவாளர், குழுமத்தைக் கலைத்துக் கைக்கொள்வதற்கான அறிவிப்பை வெளியிட்ட பின்னர், உடனடியாக, குழுமத்தை இடைநிறுத்தம் செய்யலாம் மற்றும் அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக ஓர் ஆணை பிறப்பிக்கப்படும் வரை சங்கத்தின் அலுவற்பாடுகளை மேலாண்மை செய்ய ஓர் இடைக்கால செயலாட்சியரை நியமிக்கலாம்:

மேலும் வரம்புரையாக, அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியில் இருந்து இரண்டு மாதக்கால அளவிற்குள் கூறப்பட்ட அறிவிப்பின் தொடர்ச்சியாக ஓர் ஆணை, பிறப்பிக்கப்படுதல் வேண்டும்:";

(2) (4) ஆம் உட்பிரிவில், "கலைத்துக் கைக்கொள்ளப்பட்ட காலஅளவின் போது" எனும் சொற்றொடருக்காக, "குழுமத்தின் இடைநிறுத்த அல்லது கலைத்துக் கைக்கொள்ளப்பட்ட காலஅளவின் போது" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(3) (6) ஆம் உட்பிரிவில், "(1)(a)(i) ஆம் உட்பிரிவின்கீழ் ஓர் ஆணை பிறப்பிப்பதற்கு முன்பு" எனும் சொற்றொடருக்காக, "(1) ஆம் உட்பிரிவின்கீழ் குழுமம் கலைத்துக் கைக்கொள்ளப்பட்டதன் பேரில் செயலாட்சியரை நியமித்து ஓர் ஆணை பிறப்பிப்பதற்கு முன்பு" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

10

90 ஆம்

பிரிவிற்கான

திருத்தம்.

4. முதன்மைச் சட்டத்தின் 90 ஆம் பிரிவில், (7) ஆம் உட்பிரிவில், "1940 ஆம் ஆண்டு பொதுவர்த் தீர்ப்புச் சட்டம் (மையச் சட்டம் X/1940)" எனும் சொற்றொடருக்காக, "1996 ஆம் ஆண்டு பொதுவர்த் தீர்ப்பு மற்றும் இணக்கத்தீர்வுச் சட்டம் (மையச் சட்டம் 26/1996)" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

100 ஆம்

பிரிவிற்கான

திருத்தம்.

5. முதன்மைச் சட்டத்தின் 100 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (g) கூறில், "1940 ஆம் ஆண்டு பொதுவர்த் தீர்ப்புச் சட்டம் (மையச் சட்டம் X/1940)" எனும் சொற்றொடருக்காக, "1996 ஆம் ஆண்டு பொதுவர்த் தீர்ப்பு மற்றும் இணக்கத்தீர்வுச் சட்டம் (மையச் சட்டம் 26/1996)" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

102 ஆம்

பிரிவிற்கான

திருத்தம்.

6. முதன்மைச் சட்டத்தின் 102 ஆம் பிரிவில் ஓரத்தலைப்பு உள்ளடங்கலாக, "1894 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டம் (மையச் சட்டம் I/1894)" எனும் சொற்றொடருக்காக, "2013 ஆம் ஆண்டு நியாயமான இழப்பீட்டிற்கான உரிமை மற்றும் நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வில் வெளிப்படைத்தன்மைச் சட்டம் (மையச் சட்டம் 30/2013)" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

ப. சுமதிப. சுமதி,, அரசு செயலாளர், சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார், இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 22 July 2026. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2026-07-22.Ordinary_29_Part-IV_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2026-07-22.Ordinary_29_Part-IV_Section-2-T-Sup.