2026
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Re. 0.80 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 331] CHENNAI, WEDNESDAY, JULY 29, 2026 Aadi 13, Parabhava, Thiruvalluvar Aandu–2057
Part VI—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Heads of Departments, etc.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
COLLECTORS AND LOCAL AUTHORITIES
இராணிப்பேட்டை மாவட்டம் ஊராட்சிகளின் ஆய்வாளர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவிக்கை இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம், இச்சிப்புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு.C.பத்மநாபன் என்பவரை தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 சட்ட பிரிவு 205(11)-ன் படி இச்சிப்புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து அறிவிக்கை வெளியிடுதல்.
(ந.க.எண்.அ2/1860/2024)
No. VI(2)/34(b)/2026.
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம், இச்சிப்புத்தூர் ஊராட்சியில் வரவு செலவு கணக்குகள், செலவுச்சீட்டு, தீர்மான பதிவேடு, வருகை பதிவேடு, அஜெண்டா சார்வு செய்யும் பதிவேடு மற்றும் இதர பதிவேடுகளை விசாரணை அலுவலர்/உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) அவர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஆய்வறிக்கை அடிப்படையில், 23 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க தெரிவித்து இராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிகளின் ஆய்வாளர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செயல்முறைகளின்படி இச்சிப்புத்தூர் ஊர ாட்சி மன்ற தலைவருக்கு சட்டப்பூர்வ கடிதம் வழங்கப்பட்டது.
மேற்படி, சட்டப்பூர்வ அறிவிப்புக்கு இச்சிப்புத்தூர் ஊராட்சி மன்ற தலைவரின் பதிலறிக்கை வரப்பெற்றதை தொடர்ந்து, ஊராட்சிகளின் ஆய்வாளர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் குறிப்பின்படி, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 சட்டப்பிரிவு 205(2 முதல் 10) வரையிலான விதிமுறைகளின்படி அரக்கோணம் வட்டாட்சியர் தலைமையில் இச்சிப்புத்தூர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட்டு ஊராட்சி மன்றத்தின் கருத்தினை பதிவு செய்து அறிக்கை பெறப்பட்டது.
மேற்படி ஊராட்சி மன்ற கருத்தினையும், குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றையும் ஊராட்சிகளின் ஆய்வாளர்/மாவட்ட ஆட்சித்தலைவரால் தன்னிச்சையாகவும், ஆழ்ந்தும் பரிசீலனை செய்ததில், இச்சிப்புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மீது சுமத்தப்பட்ட 23 குற்றச்சாட்டுகள் நிரூபணமாவதாலும் சட்டப்படியான தனது கடமைகளிலிருந்து தவறியதாலும், ஊராட்சிகிகு நிதியிழப்பு ஏற்படுத்தியதாலும், அதிகார வரம்பை மீறி செயல்பட்டதாலும், சில ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராக உள்ளதாலும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 சட்டப்பிரிவு 205(11)ன்படி ஊராட்சிகளின் ஆய்வாளர் / மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் திரு.C.பத்மநாபன் என்பவரை இச்சிப்புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து அறிவிக்கை வெளியிடப்படுகிறது.
இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாள் முதல் அமலுக்கு வருகிறது.
என். ப்ரியா இரவிச்சந்திரன்என். ப்ரியா இரவிச்சந்திரன், இராணிப்பேட்டை, 2026 ஜூலை 29. ஊராட்சிகளின் ஆய்வாளர் / மாவட்ட ஆட்சித்தலைவர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
Ex-VI-2—(331)