Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of specific character or of particular interest to the public issued by Secretariat Departments. Land Revenue Settlement – ​​Ryot-discontinued categories--Granting a further two-year extension to the Sub-Collector/Revenue Divisional Officer to take action for the issuance of pattas for lands classified as Ryot-discontinued in the Natham land revenue settlement registers within Panchayat, Municipality, and Corporation areas across all taluks of Erode District – Notification – Order issued - Notification No. II(1)/REVDM/14/2026.--G.O. (Ms.) No. 598, Revenue and Disaster Management [Land Survey and Land Records 2(1)] Department, 24 July 2026.

Published 12 August 2026

Type
Ordinary
Gazette no.
32
Part
Part II
Section
Section 1
Identifier
in.gazette.tamilnadu.2026-08-12.Ordinary_32_Part-II_Section-1
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

GOVERNMENT OF TAMIL NADU

2026

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 1.60 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 32] CHENNAI, WEDNESDAY, AUGUST 12, 2026 Aadi 27, Parabhava, Thiruvalluvar Aandu–2057

Part II—Section 1

Notifications or Orders of specific character or of particular interest to the

public issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS Pages.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

[நிலவரித் திட்டம்-ரயத்து நிறுத்தப்பட்ட இனங்கள்:- ஈரோடு மாவட்டம், அனைத்து வட்டங்களில் உள்ள ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட நத்தம் நிலவரித்திட்ட பதிவேட்டில் பதிவாகியுள்ள "ரயத்து நிறுத்தம்" இனங்களில் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ள சார் ஆட்சியர் வருவாய் கோட்ட அலுவலருக்கு மேலும் இரண்டு ஆண்டு கால நீட்டிப்பு வழங்குதல் - அறிவிக்கை (Notification) - ஆணை வெளியிடப்படுகிறது.] .. .. .. 30-31

[29]

DTP—II-1—(32)30 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1

NOTIFICATIONS BY GOVERNMENT

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

No. II(1)/REVDM/14/2026.

[நிலவரித் திட்டம்-ரயத்து நிறுத்தப்பட்ட இனங்கள்:- ஈரோடு மாவட்டம், அனைத்து வட்டங்களில் உள்ள ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட நத்தம் நிலவரித்திட்ட பதிவேட்டில் பதிவாகியுள்ள "ரயத்து நிறுத்தம்" இனங்களில் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ள சார் ஆட்சியர் வருவாய் கோட்ட அலுவலருக்கு மேலும் இரண்டு ஆண்டு கால நீட்டிப்பு வழங்குதல் - அறிவிக்கை (Notification) - ஆணை வெளியிடப்படுகிறது.]

கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:-

[அரசாணை (நிலை) எண். 598, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை [நில அளவை மற்றும் நிலவரித்திட்டம் 2(1)]த் துறை, 24 ஜூலை 2026, ஆடி 8, பராபவ, திருவள்ளுவர் ஆண்டு-2057.]

படிக்கப்பட்டது:-

1. அரசாணை எண்.233, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் [நி.அ.2(1)] துறை, நாள் 05.02.2021.

2. அரசாணை எண்.607, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் [நி.அ.2(1)] துறை, நாள் 19.12.2022.

3. அரசாணை எண். 98, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் [நி.அ.2(1)] துறை, நாள். 12.03.2024.

4. நில நிர்வாக ஆணையர், சென்னை அவர்களின் கடித எண். R4(R2)/4139690/2023, நாள் 13.02.2026 மற்றும் 25.06.2026.

ஆணை: எண். 598, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை [நில அளவை மற்றும் நிலவரித்திட்டம் 2(1)]த் துறை, நாள் 24 ஆணை: எண். 598, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை [நில அளவை மற்றும் நிலவரித்திட்டம் 2(1)]த் துறை, நாள் 24 ஜூலை 2026.ஜூலை 2026.

மேலே நான்கில் படிக்கப்பட்ட கடிதத்தில், நில நிர்வாக ஆணையர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி பகுதிகளில் நத்தம் நில அளவையின் போது "ரயத்து நிறுத்தப்பட்டது" என பதிவு செய்யப்பட்ட ரயத்து மனைகள் / ரயத்து நஞ்சை / ரயத்து புஞ்சை இனங்களில் வருவாய் கோட்டாட்சியர் நிலையில் பட்டா வழங்க அதிகாரம் வழங்கி மேலே ஒன்றில் படிக்கப்பட்ட அரசாணையின்படி சார் ஆட்சியர் / வருவாய் கோட்டாட்சியருக்கு வழங்கப்பட்ட அதிகாரம் எதிர்வரும் 23.02.2026 உடன் முடிவுறவுள்ளது. எனவே, பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஈரோடு மாவட்டத்திலுள்ள "ரயத்து நிறுத்தம்" நிலுவை இனங்களை விசாரணை செய்து முடிவுக்கு கொண்டு வர தொடர்புடைய சார் ஆட்சியர் / வருவாய் கோட்ட அலுவலர்களுக்கு மேலும் கால நீட்டிப்பு வழங்கி அரசாணை பெற்று வழங்கிட கோரி கால நீட்டிப்புக்கான கீழ்க்கண்டுள்ள காரணங்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்:-

அ) மனுதாரரின் அனுபவத்தில் இருந்து ஆவணங்கள் இல்லாத இனங்களில் புலத்தணிக்கை செய்ய வேண்டியுள்ளது.

ஆ) பொது மக்களிடமிருந்து வரும் மனுக்களில் மனுதாரருக்கும், அவர்களது உறவினர்களிடையே பிரச்சனைகள் உள்ள இனங்களில் விசாரணை செய்ய வேண்டியுள்ளது.

இ) மனுதாரரின் ஆவணத்தின்படி வருவாய் ஆவணங்களில் அதிக பரப்பு உள்ள இனங்களில் உட்பிரிவு செய்ய வேண்டியுள்ளது.

ஈ) அழைப்பாணை சார்வு செய்து விசாரணை மேற்கொண்டு நடத்தப்பட்டும், நாளதுவரை விண்ணப்பிக்காதவர்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளவும் காலதாமதம் ஏற்படுகிறது.

உ) கிராமப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உரிய ஆவணங்கள் பெற்று உத்தரவு பிறப்பிக்க வேண்டிய சூழல் உள்ளது.

ஊ) மனுதாரர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களில் உள்ள பரப்பிற்கும், கிராமக்கணக்கு ஆவணங்களில் உள்ள பரப்பிற்கும் வேறுபாடு வரும் நேர்வுகளில் புலத்தினை நில அளவை செய்தும், உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டிய இனங்கள் அதிகமாக உள்ளது.

எ) மனுதாரர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களில் நிறைய புலங்களின் விபரம் பழைய புல எண்ணாக உள்ளதால், ஒப்பீட்டு விபரம் (Correlation) சரிபார்க்கப்பட வேண்டிய சூழல் உள்ளதால் காலதாமதம் ஏற்படுகிறது.

(ஏ) மனுதாரர் பட்டா கோரும் புலங்களில் சில நேர்வுகளில் பழைய புல எண் / பரப்பு உள்ளிட்ட விபரங்கள் திருத்தம் செய்யப்பட்ட பின்னரே நத்தம் நிறுத்தம் இனங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.

ஐ) சில இனங்கள் சரியான ஆவண தொடர்பு இல்லாமல் உள்ளது. மேலும் சில இனங்களில் மனுதாரர்களின் அனுபவம் ஏதுமில்லாமல் காலியிடங்களாக உள்ள நேர்வுகளில் உரிய அறிவிப்பு வழங்கி விசாரணை மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.

Aug. 12, 2026] TAMIL NADU GOVERNMENT GAZETTE 31

ஒ) மனுதாரர் தான் வசிக்கும் இடத்திற்கான ஆவணம் 1960-லிருந்து வைத்துள்ளார். அவ்வாவணத்தில் தான் வசிக்கும் புல எண்ணிற்கு பதிலாக தவறான புல எண்ணைப் பதிவு செய்து ஆவணப்பதிவு வைத்துள்ளார். தற்பொழுது பிழைத்திருத்தப் பத்திரம் செய்ய இயலாத நிலையில் மனுதாரர்களுக்கு நத்தம் நிறுத்தம் பட்டா வழங்க இயலாத சூழல் உள்ளதால் உள்வட்ட நில அளவர் மூலம் ஸ்தல தணிக்கை மேற்கொண்டு ஒப்பீட்டு விவரம் பெற்று உத்தரவு பிறப்பிக்க வேண்டிய சூழல் உள்ளதால் காலதாமதம் ஏற்படுகிறது. பட்டா வழங்க அவகாசம் தேவைப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

2. மேலும் மேலே ஒன்று இரண்டு, மற்றும் மூன்றில் படிக்கப்பட்ட அரசாணைகளில் வெளியிடப்பட்டதிலிருந்து தற்போது வரை ஈரோடு மாவட்டம். அனைத்து வட்டங்களில் உள்ள ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட நத்தம் நிலவரித்திட்ட பதிவேட்டில் பதிவாகியுள்ள "ரயத்து நிறுத்தம்" இனங்களில் இத்திட்டம் ஆரம்பிக்கும் போது நிலுவையில் இருந்த இனங்கள், முடிக்கப்பட்ட இனங்கள், நிலுவையில் உள்ள இனங்களின் விவரங்கள் மற்றும் தாமதத்திற்கான காரணங்கள் குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையில், மேற்படி, நத்தம் ரயத்து மனை/ ரயத்து புஞ்சை நிலுவையினங்களுக்கு மேலே பத்தி 1-இல் தெரிவிக்கப்பட்டுள்ள காரணங்களால் பட்டா வழங்க கால அவகாசம் தேவைப்படுகிறது என தெரிவித்துள்ளதாக நில நிர்வாக ஆணையர் தெரிவித்துள்ளார்.

3. மேலும், மேற்கண்ட காரணங்களுக்காக நத்தம் ரயத்து மனை நிறுத்தப்பட்ட இனங்களுக்கு பட்டா வழங்க கால அவகாசம் தேவைப்படுகிறது எனவும், ஈரோடு மாவட்டத்தில் நத்தம் நிறுத்தப்பட்ட இனங்களில் மேற்கண்ட காரணங்களை கருத்தில் கொண்டு கிராம ஆவணங்களில் நிறுத்தப்பட்டது என உள்ளவற்றை நீக்கம் செய்ய தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும். சுமார் 35,000 நிலுவையினங்களில் ஆணைகள் பிறப்பிப்பதலில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், முழுமையான மனுக்களின் மீது உரிய தீர்வு காணவும் சார் ஆட்சியர் / வருவாய் கோட்டாட்சியருக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க எதுவாக அதிகாரம் வழங்க வேண்டியது அவசியமாகிறது என்றும், ஆகவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஈரோடு மாவட்டத்திலுள்ள ரயத்து நிறுத்தம்" நிலுவை இனங்களை விசாரணை செய்து முடிவுக்கு கொண்டு வர தொடர்புடைய சார் ஆட்சியர் / வருவாய் கோட்ட அலுவலர்களுக்கு மேலும் கால நீட்டிப்பு வழங்கி அரசாணை வழங்குமாறு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார் என்றும், எனவே ஈரோடு மாவட்ட ஆட்சியர் தனது கூடுதல் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளவாறு. ஈரோடு மாவட்டத்திலுள்ள "ரயத்து நிறுத்தம்" நிலுவை இனங்களை விசாரணை செய்து முடிவுக்கு கொண்டு வர தொடர்புடைய சார் ஆட்சியர் / வருவாய் கோட்ட அலுவலர்களுக்கு மேலும் கால நீட்டிப்பு வழங்கி அரசாணை வழங்குமாறு நில நிர்வாக ஆணையர் அரசிடம் பரிந்துரை செய்துள்ளார்.

4. மேற்கண்ட சூழ்நிலையில், நில நிர்வாக ஆணையரின் கருத்துருவினை கவனமுடன் ஆய்வு செய்து, அதனை ஏற்று, ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரால் மேலே பத்தி 1-இல் தெரிவிக்கப்பட்டுள்ள காரணங்கள், பொதுமக்களின் நலன் மற்றும் சுமார் 35,000 நிலுவையினங்களில் ஆணைகள் பிறப்பிப்பதலில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், ஈரோடு மாவட்டத்திலுள்ள "ரயத்து நிறுத்தம்" நிலுவை இனங்களை விசாரணை செய்து முடிவுக்கு கொண்டு வர, தொடர்புடைய சார் ஆட்சியர்/வருவாய் கோட்ட அலுவலர்களுக்கு மேலே ஒன்றில் படிக்கப்பட்ட அரசாணையில் தொடக்கத்தில் ஓராண்டுக்கு வழங்கப்பட்டு, பின்னர் மேலே இரண்டு மற்றும் மூன்றில் படிக்கப்பட்ட அரசாணைகள் மூலமாக நீட்டிக்கப்பட்ட, பட்டா வழங்கும் அதிகாரத்தினை, 24.02.2026 முதல் 23.02.2028 வரை மேலும் இரண்டு ஆண்டு காலங்களுக்கு நீட்டித்து அரசு ஆணையிடுகிறது.

5. மேலே பத்தி 4-இல் தெரிவிக்கப்பட்டுள்ளவைகளை கவனமுடன் பின்பற்றுமாறு உரிய சார் ஆட்சியர் / வருவாய் கோட்ட அலுவலர்களுக்கு அரசு ஆணையிடுகிறது. மேலும் இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு நில நிர்வாக ஆணையர் மற்றும் நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் ஆகியோர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

(ஆளுநரின் ஆணைப்படி)

கே.எஸ். பழனிசாமி, அரசு செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 12 August 2026. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2026-08-12.Ordinary_32_Part-II_Section-1/. Archive identifier in.gazette.tamilnadu.2026-08-12.Ordinary_32_Part-II_Section-1.