Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Tamil Nadu Legislative Assembly Secretariat -- L.A.Bills (Tamil)

Published 01 September 2026

Department
Legislative Assembly Department
Type
Extraordinary
Gazette no.
366
Part
Part IV
Notification no.
L.A.Bill No. 15 of 2026--Amend the Tamil Nadu Town and Country Planning (Amendment) Act, 2026. (Tamil)
Extraordinary Type
Tamil Nadu Bills (Tamil)
Section
Section 1 T Sup
Identifier
in.gazette.tamilnadu.2026-09-01.Extraordinary_366_Part-IV_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU 2026

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 1.60 Paise.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ஆணையின்படி வெளியிடப்பட்டது.

No. 366A] சென்னை, செவ்வாய்க்கிழமை, செெப்டம்பர் 1, 2026 ஆவணி 15, பராபவ, திருவள்ளுவர் ஆண்டு-2057

பகுதி IV—பிரிவு 1

தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்

2026-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 1-ஆம் நாளன்று தமிழ்நாடு 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 1-ஆம் நாளன்று தமிழ்நாடு

சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்க சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்க

காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின்

130–ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது. 130–ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.

சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 15/2026

1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.

இந்திய குடியரசின் எழுபத்தியேழாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும்

மற்றும் ஊரமைப்பு (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

தொடக்கம்.

(2) இது, மாநில அரசு, அறிவிக்கையின் வாயிலாகக்

குறித்திடலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

DTP—Ex-IV-1 (366A)

[1]2 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 9-F பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் திருத்தம்.

35/1972.

2. 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படும்), 9-F பிரிவின் (2) ஆம் உட்பிரிவில்,-

(1) (a) கூறுக்காக, பின்வரும் கூறானது மாற்றாக அமைக்கப்படுதல்

வேண்டும், அதாவது:-

"(a) தலைவர் அரசால் நியமனம் செய்யப்படுதல் வேண்டும்;";

(2) (aa) கூறின் (iv) உட்கூறில், "நகர்ப்புற திட்ட பரப்பிடத்தின் பெரும்பகுதி அமைந்துள்ள மாவட்டத்தின் எல்லைக்குள்" எனும் சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்;

(3) (aa) கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறானது உட்புகுத்தப்படுதல்

வேண்டும், அதாவது:-

"(aaa) நகர்ப்புற திட்டப் பரப்பிடத்தின் பெரும்பகுதி அமைந்துள்ள

மாவட்டத்தின் ஆட்சியர்;".

47-A

3. முதன்மைச் சட்டத்தின் 47-A பிரிவில்,-

பிரிவிற்கான

(1) (2) ஆம் உட்பிரிவிற்கான வரம்புரையானது விட்டுவிடப்படுதல்

திருத்தம்.

வேண்டும்;

(2) (3) ஆம் உட்பிரிவில், "மாவட்ட ஆட்சியர்" எனும் சொற்களுக்காக, "நன்செய் நிலங்களைப் பொறுத்த நேர்வில், இயக்குநர்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 3

நோக்கக் காரண விளக்கவுரை

1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 9-F பிரிவின்கீழ், நகர்ப்புற வளர்ச்சி குழுமங்களானது, நகரத் திட்டமிடல், உள்கட்டமைப்பு மேம்பாடு, நில மேம்பாடு, வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துதல் மற்றும் நகர்ப்புற வளர்ச்சியை ஒழுங்குபடுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ளவும், ஒருங்கிணைக்கவும் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற வளர்ச்சியின் அளவும் அதன் சிக்கல்தன்மைகளும் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இப்பணிகளுக்குத் தொடர்ச்சியான மற்றும் அர்ப்பணிப்புள்ள கவனம் செலுத்துவதும், உரிய நேரத்தில் முடிவுகளை எடுப்பதும் அவசியமாகிறன. எனவே, நகர்ப்புற மேம்பாட்டு குழுமங்களின் நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், முழுநேரத் தலைவரையும் முழுநேர உறுப்பினர்-செயலாளரையும் நியமிப்பது அவசியமெனக் கருதப்படுகிறது. இதன் மூலம், அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைகள் மற்றும் செயல்பணிகளில் அதிக கவனம், தொடர்ச்சியான செயல்பாடு மற்றும் பொறுப்புடைமை ஆகியவற்றை உறுதிசெய்ய இயலும். அதேவேளையில், மாவட்ட நிர்வாகத்துடன் பயனுள்ள ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக, மாவட்ட ஆட்சியர் ஆணையத்தின் உறுப்பினராகத் தொடர்ந்து செயல்படுவார்.

2. மேலும், தமிழ்நாடு சட்டம் 35/1972-ன் 47-A பிரிவின் (2) ஆம் உட்பிரிவின்படி, திட்டப் பரப்பிடம் அல்லாத பிற, பரப்பிடத்தில் உள்ள நில மேம்பாட்டிற்கான அனுமதியை வழங்குவதற்கு முன்னதாக, உள்ளாட்சி அதிகார அமைப்பானது, இயக்குநரின் முன் அனுமதிப் பெறுதலை கட்டாயப்படுத்துகிறது. மேலும், நன்செய் நிலங்களைப் பொறுத்தவரை, தொடர்புடைய மாவட்ட ஆட்சியரின் முன் ஒப்புதலையும் பெறவேண்டியது அவசியமாகும். இந்த நடைமுறையின் காரணமாக, திட்ட அனுமதிக்கான விண்ணப்பங்களைப் பரிசீலித்து அவற்றை முடிவு செய்வதில் தேவையற்ற காலதாமதங்கள் ஏற்பட்டன. நில மேம்பாட்டிற்கான அனுமதி வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்தவும், நடைமுறை சார்ந்த காலதாமதங்களைக் குறைக்கவும், அத்தகைய அனுமதியைப் பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்கவும், அதன்படி திட்டப்பரப்பிடமாக அல்லாத பகுதிகளில் நன்செய் நிலங்களை மேம்படுத்துவதற்கு தொடர்புடைய மாவட்ட ஆட்சியரின் முன் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற தேவையை நீக்கவும், நன்செய் நிலங்களைப் பொறுத்தவரை உள்ளாட்சி அமைப்பிற்கு முன் ஒப்புதல் வழங்கும் அதிகாரத்தை இயக்குநருக்கு வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

3. அதற்கிணங்க, மேற்சொன்ன நோக்கங்களுக்காக, 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 9-F பிரிவின் (2) ஆம் உட்பிரிவு மற்றும் 47-A பிரிவில் திருத்தம் செய்வதென அரசு முடிவு செய்துள்ளது.

4. இந்தச் சட்டமுன்வடிவானது, மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.

ப. ராஜ்குமார்,

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்

இரா. சாந்தி,இரா. சாந்தி, செயலாளர்.

தலைமைச் செயலகம், சென்னை-9, 2026 செப்டம்பர் 1.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 01 September 2026. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2026-09-01.Extraordinary_366_Part-IV_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2026-09-01.Extraordinary_366_Part-IV_Section-1-T-Sup.