Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

COLLECTORS AND LOCAL AUTHORITIES -- Notification regarding the removal from office of Mrs. R. Sumathi, President of Vaipur Panchayat, Kundrathur Panchayat Union, Kancheepuram District, under Section 205(11) of the Tamil Nadu Panchayats Act, 1994. -- Notification regarding the removal from office of Mr. R. Bharathiraja, Vice-President of Vaipur Panchayat, Kundrathur Panchayat Union, Kancheepuram District, under Section 206(11) of the Tamil Nadu Panchayats Act, 1994.

Published 03 September 2026

Department
Collector And Local Authority
Type
Extraordinary
Gazette no.
375
Part
Part VI
Notification no.
Notification No. VI(2)/36(a-1)/2026.--Ref. No. 2504/2022/A6 -- Notification No. VI(2)/36/(a-2)/2026.--Ref. No. 2504/2022/A6
Extraordinary Type
Notifications or Orders of interest to a section of the public issued by Heads of Departments, etc.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2026-09-03.Extraordinary_375_Part-VI_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU

2026

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 1.60 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 375] CHENNAI, THURSDAY, SEPTEMBER 3, 2026 Aavani 17, Parabhava, Thiruvalluvar Aandu–2057

Part VI—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Heads of Departments, etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

COLLECTORS AND LOCAL AUTHORITIES

ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவிக்கைகள்

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், வைப்பூர் ஊராட்சியின் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.ஆர்.சுமதி என்பவரை 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு எண் 205(11)-ன் கீழ்

பதவி நீக்கம் செய்தல் பற்றிய அறிவிக்கை

[ந.க.எண்.2504/2022/அ6/உ.இ.(ஊ(ம)த)(வ)]

No. VI(2)/36(a-1)/2026.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், வைப்பூர் கிராம ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.ஆர்.சுமதி ஊராட்சி நிர்வாகத்தில், ஊராட்சி சட்ட விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை மீறி ஊராட்சி நிதியிலிருந்து செலவினங்கள் மேற்கொண்டுள்ளது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இவர் தனது கடமையிலிருந்து தவறியுள்ளதற்கு 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205 இன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 1994ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205(11)இன் கீழ் ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர், காஞ்சிபுரம் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.2504/2022/அ6/ உ.இ.(ஊ(ம)த)(வ)., நாள்.27.06.2026-ன்படி ஊராட்சி மன்றத் தலைவரை பதவி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.

அதன்படி, பதவி நீக்கம் செய்யப்பட்ட அறிவிக்கையினை தமிழ்நாடு அரசிதழ்தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீட்டு எண்.302, நாள்.02.07.2026-லிருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

மேற்படி, ஆணை மற்றும் தமிழ்நாடு அரசிதழ்தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீட்டினை எதிர்த்து, வைப்பூர் ஊராட்சி மன்றத் தலைவரால் மாண்பமை சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு எண். W.P.No.29197 of 2026 தொடரப்பட்டு இவ்வழக்கு 20.08.2026 அன்று கேட்புக்கு வரப்பெற்று மேற்கண்ட செயல்முறை ஆணை இரத்து செய்யப்பட்டு, திருத்திய புதிய ஆணையினை 2 வாரக்காலத்திற்குள் பிறப்பிக்க தெரிவித்து இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், பின்வருமாறு திருத்திய/புதிய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், வைப்பூர் ஊராட்சியின் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.ஆர்.சுமதி, என்பவர் ஊராட்சி நிர்வாகத்தில், ஊராட்சி சட்ட விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை மீறி குறிப்பாக, ஊராட்சி மன்றத்தின் உரிய தீர்மானங்கள் இல்லாமல் பல்வேறு செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேற்கொள்ளப்பட்ட செலவினங்களுக்கு வரவு–செலவுத் திட்டத்தில் உரிய நிதி ஒதுக்கீடு மற்றும் ஒப்புதல் பெறப்படவில்லை. சட்டத்தின்படி ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட Ex-VI-2—(375)

[1]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY வேண்டிய பணிகளில் ஒப்பந்த நடைமுறைகள் பின்பற்றப்படாமல், போட்டி முறையைத் தவிர்த்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீட்டு வரி, தொழில் வரி மற்றும் உரிமக் கட்டணம் ஆகியவற்றை நிர்ணயித்தல் மற்றும் வசூலித்தலில் சட்ட விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. பதிவேடுகள் முறையாகப் பராமரிக்கப்படாததுடன், ஊராட்சியின் நிதி ஒழுங்கு மற்றும் நிர்வாக நடைமுறைகள் பல்வேறு வகைகளில் மீறப்பட்டுள்ளன என்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இவரின் மீது 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205இன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, உரிய நடைமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்ட பின்னர், இவருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் மனுக்கள், தொடர்புடைய அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட நேரடி விசாரணை அறிக்கைகள், அவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், குற்றச்சாட்டுகளுக்கு அவர் அளித்த முதற்கட்ட விளக்கம் மற்றும் கூடுதல் விளக்கம், தொடர்புடைய பதிவேடுகள், தீர்மானப் புத்தகங்கள் மற்றும் பிற ஆவணங்கள் ஆகிய அனைத்தும் என்னால் சுயமாகவும், தனித்தனியாகவும், ஆழமாகவும் பரிசீலனை செய்யப்பட்டன.

அப்பரிசீலனையின் அடிப்படையில், குற்றச்சாட்டு எண் 1 முதல் குற்றச்சாட்டு எண் 15 வரை உள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் ஊராட்சியின் செயல் அலுவலர் / ஊராட்சி மன்றத் தலைவருக்கான கடமையிலிருந்து தவறியுள்ளது நிரூபணமாவதாக எனது உளத் தேர்வின்படி தீர்மானித்து, 1994ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205(11)இன் கீழ் ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, இவரை வைப்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து அறிவிக்கை வெளியிடப்படுகிறது.

இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தி. சினேகா,தி. சினேகா, காஞ்சிபுரம், 3 செப்டம்பர் 2026. ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும்

மாவட்ட ஆட்சித்தலைவர்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், வைப்பூர் ஊராட்சியின் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் திரு.ஆர்.பாரதிராஜா என்பவரை 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு எண் 206(11)-ன் கீழ்

பதவி நீக்கம் செய்தல் பற்றிய அறிவிக்கை

(ந.க.எண்.2504/2022/அ6.உ.இ.(ஊ(ம)த)(வ))

No. VI(2)/36/(a-2)/2026.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், வைப்பூர் கிராம ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.ஆர்.சுமதி மற்றும் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் திரு.ஆர்.பாரதிராஜா கூட்டு சேர்ந்து ஊராட்சி சட்ட விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை மீறி ஊராட்சி நிதியிலிருந்து செலவினங்கள் மேற்கொண்டுள்ளது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இவர் தனது கடமையிலிருந்து தவறியுள்ளதற்கு 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 206-இன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 1994ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 206(11) இன் கீழ் ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர், காஞ்சிபுரம் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.2504/2022/அ6,உ.இ.(ஊ(ம)த)(வ)., நாள்.27.06.2026-ன்படி ஊராட்சி மன்றத் துணைத்தலைவரை பதவி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.

அதன்படி, பதவி நீக்கம் செய்யப்பட்ட அறிவிக்கையினை தமிழ்நாடு அரசிதழ்தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீட்டு எண்.302, நாள்.02.07.2026-லிருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

மேற்படி, ஆணை மற்றும் தமிழ்நாடு அரசிதழ்தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீட்டினை எதிர்த்து, வைப்பூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவரால் மாண்பமை சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு எண். W.P.No.29202 of 2026 தொடரப்பட்டு இவ்வழக்கு 20.08.2026 அன்று கேட்புக்கு வரப்பெற்று மேற்கண்ட செயல்முறை ஆணை இரத்து செய்யப்பட்டு, திருத்திய புதிய ஆணையினை 2 வாரக்காலத்திற்குள் பிறப்பிக்க தெரிவித்து இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், பின்வருமாறு திருத்திய/புதிய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், வைப்பூர் கிராம ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.ஆர்.சுமதி மற்றும் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் திரு.ஆர்.பாரதிராஜா கூட்டு சேர்ந்து ஊராட்சி நிர்வாகத்தில், ஊராட்சி சட்ட விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை மீறி குறிப்பாக, ஊராட்சி மன்றத்தின் உரிய தீர்மானங்கள் இல்லாமல் பல்வேறு செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேற்கொள்ளப்பட்ட செலவினங்களுக்கு வரவு–செலவுத் திட்டத்தில் உரிய நிதி ஒதுக்கீடு மற்றும் ஒப்புதல் பெறப்படவில்லை. சட்டத்தின்படி ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட வேண்டிய பணிகளில் ஒப்பந்த நடைமுறைகள் பின்பற்றப்படாமல், போட்டி முறையைத் தவிர்த்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீட்டு வரி, தொழில் வரி மற்றும் உரிமக் கட்டணம் ஆகியவற்றை நிர்ணயித்தல் மற்றும் வசூலித்தலில் சட்ட விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. பதிவேடுகள் முறையாகப் பராமரிக்கப்படாததுடன், ஊராட்சியின் நிதி ஒழுங்கு மற்றும் நிர்வாக நடைமுறைகள் பல்வேறு வகைகளில் மீறப்பட்டுள்ளன என்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இவரின் மீது 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 206இன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, உரிய நடைமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்ட பின்னர், இவருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் மனுக்கள், தொடர்புடைய அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட நேரடி விசாரணை அறிக்கைகள், அவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், குற்றச்சாட்டுகளுக்கு அவர் அளித்த முதற்கட்ட விளக்கம் மற்றும் கூடுதல் விளக்கம், தொடர்புடைய பதிவேடுகள், தீர்மானப் புத்தகங்கள் மற்றும் பிற ஆவணங்கள் ஆகிய அனைத்தும் என்னால் சுயமாகவும், தனித்தனியாகவும், ஆழமாகவும் பரிசீலனை செய்யப்பட்டன.

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3

அப்பரிசீலனையின் அடிப்படையில், குற்றச்சாட்டு எண் 1 முதல் குற்றச்சாட்டு எண் 11 வரை உள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் ஊராட்சியின் ஊராட்சி மன்றத் துணைத் தலைவருக்கான கடமையிலிருந்து தவறியுள்ளது நிரூபணமாவதாக எனது உளத் தேர்வின்படி தீர்மானித்து, 1994ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 206(11)இன் கீழ் ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, இவரை வைப்பூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து அறிவிக்கை வெளியிடப்படுகிறது.

இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தி. சினேகா,தி. சினேகா, காஞ்சிபுரம், 3 செப்டம்பர் 2026. ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும்

மாவட்ட ஆட்சித்தலைவர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 03 September 2026. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2026-09-03.Extraordinary_375_Part-VI_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2026-09-03.Extraordinary_375_Part-VI_Section-2.